ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறுபிள்ளைத்தனமாக அடம்பிடிக்கின்றார் – அமீர் அலி

0
158

(எச்.எம்.எம்.பர்ஸான்)

இலங்கைப் பாராளுமன்றத்திலுள்ள 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக வைப்பதற்கு தீர்மானித்தாலும் அதற்கு நான் இணங்கப் போவதில்லை என்று சிறுபிள்ளைத்தனமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறி வருவதாக முன்னாள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவுச் சங்க வளாகத்தில் இன்று (4) கலாச்சார மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கூட்டுறவுச் சங்கத் தலைவர் எம்.ஏ.சீ.ஜிப்ரி கரீம் அதிபர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் அங்கு பேசுகையில்,

சிறுபிள்ளைகள் நான் சாப்பிடவே மாட்டேன் என்று அடம்பிடிப்பது போல் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முறனான முறையிலே, அதனைப்பற்றிய தெளிவான அறிவு, சிந்தனைகள் இருந்த போதிதிலும் கூட அதிலே அரசியலமைப்புச் சட்டத்திலே தெளிவாக கூறப்பட்டும் கூட இவ்வாறு பிடிவாதமாக இருப்பது ஒரு நாட்டுத் தலைமைக்கு அதுவொரு நல்ல சகுனமாக எனக்குத் தெரியவில்லை.

இந்த நாட்டில் மாத்திரமல்ல உலகத்திலே பல நாடுகளிலே இவ்வாறு தலைவர்களிருந்து எப்படி பெயர் சொல்லாமல் போனார்கள் என்கிற வரலாறு நாங்கள் படித்திருக்கிறோம், தெரிந்திருக்கிறோம் அதை இந்த நாட்டினுடைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோளாக இவ்விடத்திலே நான் சொல்லக் கடமைப்பட்டவனாக இருக்கின்றேன். ஏனென்றால் அவர் ஜனாதிபதியாக வருவதற்கு சிறுபான்மைச் சமூகம் குறிப்பாக இந்த மாவட்டத்தில் இருக்கின்ற தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் அவரை தோல்களில் சுமந்து தற்போது இந்நிகழ்வு இடம்பெறும் இந்த இடத்திலே நாங்கள் கூட்டம் போட்டு பாரிய மழை பெய்த போதும் பல்லாயிரக் கணக்கான மக்கள் வந்து அவருக்கு இந்த இடத்திலே அவரை ஆசுவாசப்படுத்தி அவரைச் சந்தோஷப்படுத்தி வழியனுப்பிவைத்த இந்த மண்ணிலே இன்று இவ்வாறு பேசுவது பொருத்தமென்று நான் நினைக்கின்றேன்.

எனவே அரசியலமைப்பு என்பது இந்த நாட்டிலே இருக்கின்ற சாதாரண மனிதர்களுக்கு மாத்திரமல்ல இந்த நாட்டிலே இருக்கின்ற எல்லாப் பிரஜைகளுக்கும் உரித்தானது எல்லோரும் அதற்கு கட்டுப்படு நடுந்து கொள்ள வேண்டும் வெகுளியாகா அல்லது ஒரு முட்டால்தன சிந்தனையோடு செயற்படுவதென்பது அது நாட்டிற்கும் சர்வதேசம் எமது நாட்டின் மீது வைத்துக் கொண்டிருக்கின்ற அந்த அளப்பரிய எதிர்பார்ப்புகளுக்கும் மோசடி செய்வதாக இருக்கும் என்பது எனது கருத்தாகும்.

எதிர்காலத்தில் வரவிருக்கும் அந்த ஏழு நாட்களுக்குள் இன்னும் யாரைப் பிரதமராக்குவார் என்று என்னால் சொல்ல முடியாது. அல்லது எவரிடத்திலே ஜனாதிபதியை கொடுத்துவிட்டுப் போவார் என்று கூட எனக்குச் சொல்ல முடியாது. ஆனால் அரசியல் அமைப்புக்கு முறனான முறையிலே செயற்பாடுகளை செய்வார் என்பதை மாத்திரம் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். –  என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here