ஐ.பி.றகுமானின் மரணச் செய்தி கேட்டு, ஜனாதிபதி தனது அனுதாபத்தினை தெரிவித்தார்.

0
142

(எஸ்.அஷ்ரப்கான்)

பொலிஸ் பரிசோதகரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கல்முனை தொகுதி முன்னாள் அமைப்பாளருமான இஸட்.ஏ.எச்.றகுமானது மரண செய்தி கேட்டு, அன்னாரது குடும்பத்தினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்ததாக கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் தெரிவித்தார்.

பொலிஸ் பரிசோதகர் றகுமான் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக இன்று (5) அதிகாலை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார். அன்னரது திடீர் மரண செய்தி கேட்டு, இன்று காலை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்தே, ஜனாதிபதி தனது அனுதாபத்தினை அன்னாரது குடும்பத்தினருக்கு எத்திவைக்குமாறு தெரிவித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

1965ஆம் ஆண்டு மருதமுனையில் பிறந்த றகுமான் 1988ஆம் ஆண்டு உப பொலிஸ் பரிசோதகராக நியமனம் பெற்றார். அதனைத் தொடர்ந்து 1990ஆம் ஆண்டு பொலிஸ் பரிசோதகராக நியமனம் பெற்றார். பின்னர் 1995ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரசியல் பழிவாங்கல் காரணமாக பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து ஐ.பி.றகுமான் சமூக சேவையில் ஈடுபட்டு தன்னை நாடி வருபவர்களுக்கும் தனது பிரதேசத்திற்கும் அளப்பெரிய பணிகளை ஆற்றினார். பின்னர் அரசியலில் ஆர்வம் கொண்டு கல்முனை மாநகர சபை தேர்தலில் பல தடவைகள் போட்டியிட்டு, வெற்றி பெற்று மருதமுனை மக்களின் பிரதிநிதியாக அந்த மாநகர சபையை அலங்கரித்தார்.

அரசியல் பழிவாங்கலினால் பதிவியில் இருந்து நீக்கப்பட்ட ஐ.பி.றகுமான் 2018.10.01ஆம் திகதி பொலிஸ் பரிசோதகராக மீண்டும் நியமனம் பெற்றார். சுமார் 23வருடங்களின் பின்னர் மீள் நியமனம் பெற்ற அவர் திருகோணமலை உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் தனது கடமையினை பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here