ஜனாதிபதியின் மனநிலையை நாட்டு மக்களே தீர்மானித்துவிட்டார்கள் – அமீர் அலி.

0
96

(எச்.எம்.எம்.பர்ஸான்)

இந்த நாட்டில் நடைபெற்ற அரசியல் அராஜகத்திற்கு நாங்கள் நீதி கேட்டுக் கொண்டிருக்கின்றோம் என்று முன்னாள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட காவத்தமுனையில் தையல் பயிற்சி நிலையம் நேற்று (4) திறந்து வைக்கப்பட்டது இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இங்கு தொடர்ந்தும் பேசுகையில்,

இந்த நீதி கேட்பதென்பது இந்த நாட்டிலே அறுபத்திரெண்டு இலட்சம் மக்கள் வாக்களித்து ஜனாதிபதியாக்கிய மைத்திரிபால சிறிசேன அவர்கள் செய்து கொண்டிருக்கிற அராஜகமான அநியாயமான ஒரு வேலைத்திட்டத்திற்கு கல்குடாவில் விசேடமாக மட்டக்களப்பு மாவட்டத்தினுடைய முஸ்லிம் குரலும் ஒலித்துக் கொண்டிருப்பதிலே உங்களுக்குத்தான் பெருமையென்று நான் நினைக்கின்றேன்.

நீங்கள் அளித்த ஒவ்வொரு வாக்குகளும் பெறுதியானது அந்தப் பெறுமதியான வாக்குகளின் பயனையும் பணியையும் நாங்கள் ஆகுமான முறையில் தேசியத்தில் செய்து கொண்டிருக்கின்றோம்.

இந்த நாட்டிலே நிறைவேற்று அதிகாரமென்று யாரும் கேள்வி கேட்க முடியாதவொரு ஜனாதிபதியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, அதன் தலைவர், அதன் தவிசாளர் இந்த நாட்டின் ஜனாதிபதியிடத்தில் சென்று சண்டை பிடிக்கின்ற அளவுக்கு உங்களது வாக்குப் பலம் மூலம் அதைச் செய்தோமென்றால் எங்களுக்குப் பின்னால் நீங்கள் இருக்கின்றீர்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான் இந்தப் பணிகளை நாங்கள் செய்கின்றோம்.

ஒரு அநியாயம் இழைக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதுதான் இஸ்லாமியப் பன்பு அவர் தமிழனா, சிங்களவரா, கிரிஸ்தவனா என்பதல்ல அதேபோன்றுதான் இந்த நாட்டினுடைய பிரதமர் ரணில் விக்ரம சிங்க அவர்களுக்கு என்ன நடந்ததென்று நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்தது போன்றுதான் அவரும் பார்த்தார் நாங்களும் பார்த்தோம் அப்படியொரு அடாவடித்தனமான காட்டுத்தனமான இந்த நாட்டினுடைய ஜனாதிபதி செய்வதற்கு அனுமதிக்க முடியாது.

இந்த நாட்டிலே அரசியலமைப்புச் சட்டம் என்றவொரு சட்டமிருக்கிறது அதற்கு நீங்கள், நான், இந்த நாட்டின் பிரதமர், ஜனாதிபதியும் கூட அதற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியுள்ளது. அந்த விடயங்களை இந்த நாட்டினுடைய ஜனாதிபதி தெரியாமல், புரியாமல் நடந்து கொண்டிருப்பதுதான் எங்களுக்கு வேதனையைத் தருகிறது ஜனாதிபதியின் மனநிலை எவ்வாறுதுள்ளதென்று எங்களை விட நீங்களே தீர்மானிக்கின்றீர்கள்.

நாட்டின் அரசியலில் என்ன நடந்தாலும் நாங்கள் இந்தப் பிரதேசத்திற்கு குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எங்களுடைய அபிவிருத்திப் பணிகளை செய்து கொண்டுதான் இருக்கின்றோம்.

எனவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் ஒன்றினைந்து இந்தப் போராட்டத்தில் ஹலாலாக உழைக்க வேண்டும் என்றொரு நம்பிக்கைப் பிரகடணத்தை ஏற்படுத்தி இந்த வேலைத்திட்டங்களை நாங்கள் செய்து கொண்டு வருகின்றோம் எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here