ஓட்டமாவடி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் இரண்டு எதிர் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டடது.

0
133

கோறளை பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் முதலாவது வரவு செலவுத்திட்டம் இன்று (6) வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இவ் அமர்வில் எதிர்க்கட்சி உறுப்பினர்களான திருமதி மாஜிதா மற்றும் திருமதி ஜெஸீமா ஆகியோரின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

இவ் வரவுசெலவுத் திட்டம் தோக்கடிக்கப்படும் என்று அரசியல் வட்டத்திலிருந்து பல்வேறு தகவல்கள் வெளிவந்தும் இது வெற்றிகரமாக 12 உறுப்பினர்களின் ஆதரவுகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here