யானையை என்னால் கட்டுப்படுத்தமுடியுமென்று சொல்லி யானையருகில் சென்றவர் பலி.

0
216

(அபூ நமா)

யால – வெஹேரகல வனப் பகுதியில் யானைக்கு அருகில் சென்ற நபரை, யானை தாக்கியதில் உயிரழந்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் தெரியவருவதாவது,

கதிர்காமம் பகுதியைச் சேர்ந்த 41 வயதான எல்.ஏ.சுசந்த என்பவர் இவ்வாறு யானை தாக்கி உயிரழந்துள்ளார்.

குறித்த நபர் இன்று குடும்பத்தோடு ஜீப் வண்டியில் சுற்றுலாச் சென்றுள்ளார் அவ்வேளையில் யானையைக் கண்டபோது என்னால் யானையைக் கட்டுப்படுத்த முடியும் என்று கூறி ஜீப் வண்டியிலிருந்து இரங்கி யானையின் அருகில் சென்றுள்ளார் அப்போது யானை அவரைத் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here