இராஜாங்க அமைச்சர் அமீர் அலியின் முயற்சியால் கிராமிய தொழிற்பயிற்சி நிலையம் மீண்டும் ஓட்டமாவடியில்.

0
90

 (எஸ்.ஏ.றிஸ்வி)

கோறளைப் பற்று மேற்கு பிரதேச சபையின் பொது நூலக கட்டிட மேல்மாடியில் நடைபெற்றுவந்த கிராமிய தொழில் பயிற்சி நிலையத்தில் (VTC) கணிணி பயிற்சிநெறி மாத்திரம் இடம்பெறுவதாகவும், நிரந்தர கட்டிட வசதியின்மை போன்ற சில காரணங்களை காட்டி வந்தாருமூலை மாவட்ட பயிற்சி நிலையத்துடன் இணைப்பதற்கான முஸ்தீபுகள் சில மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதில் பயண்பெற்ற இளைஞர்,யுவதிகளும், இவ்வருடம் இதில் பயிற்சி நெறியை தொடர எதிர்பார்த்திருந்த இளைஞர், யுவதிகளும் மற்றும் அவர்களின் பெற்றோர்களும் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் உடனடியாக செயற்பட்ட விவசாய கால்நடைகள் கிராமிய பொருளாதார நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் கௌரவ அல்ஹாஜ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்கள் மீண்டும் பொது நூலக மேல்மாடியில் இந் பயிற்சி நிலையம் இயங்குவதற்கு வழியமைத்தார்.

இம்மண்ணில் கூடுதலான இளைஞர்,யுவதிகள் பயண்பெற்று வந்த இவ் பயிற்சி நிலையம் எம்மண்ணை விட்டு செல்வதை நிறுத்த உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட விவசாய கால்நடைகள் கிராமிய பொருளாதார நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் கௌரவ அல்ஹாஜ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இளைஞர் அணி
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
கல்குடா கிளை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here