புணாணை மேற்கு முள்ளிவட்டவான் பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனஈர்ப்பு போராட்டம்

0
93

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புணாணை மேற்கு முள்ளிவட்டவான் பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து செவ்வாய்கிழமை பிரதேச மக்களால் கவனஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

முள்ளிவட்டவான் ஆற்றில் இரவு நேரங்களில் சட்டவிரோமான முறையில் மண் அகழ்வதால் விவசாய நிலங்கள் பாதிப்படைவதுடன், வீதிகள் குன்றும் குழியுமாக சேதமடைந்து காணப்படுவதை கண்டித்தும், ஓட்டமாவடியில் பொருட்கள் கொள்வனவு செய்து விட்டு திரும்பும் போது இருவரை தாக்கிய சம்பவத்தை கண்டித்தும் போராட்டம் நடைபெற்றது.

ஓட்டமாவடியில் பொருட்கள் கொள்வனவு செய்து விட்டு திங்கட்கிழமை மாலை வீடு திரும்பிய செ.வினாசி, அவரது மனைவி வி.யோகராணி ஆகியோரை வீதியில் மறைத்து ஏழு பேர் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு ஆற்றில் மண் அகழ்வதால் வயல் நிலங்கள் மற்றும் மயானங்களுக்கு செல்வதாயின் ஆற்றினைக் கடந்து செல்ல வேண்டும். இதற்கு முன்னர் ஆற்றின் உயரம் ஒன்றரை அழத்தில் காணப்பட்டது. ஆனால் தற்போது ஏழு அடி ஆழமாக காணப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிப்படைந்து காணப்படுகின்றது.

முள்ளிவட்டவான் கிராமத்தில் 45 குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்களின் ஜீவனோபாய தொழிலாக மீன்பிடி மற்றும் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். இவ்விடத்தில் மண் அகழ்வதை நிறுத்துமாறு கோரி சென்றால் மண் அகழ்பவர்கள் அடிக்க வருவதாகவும், தகாதவார்த்தைகளால் பேசுவதாகவும் கூறுகின்றனர்.

எனவே மணல்களை பகல் மற்றும் இரவு நேரங்களில் சட்டவிரோதமான முறையில் எடுத்து வீதிகளால் வேகமாக வருவதால் விபத்துக்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுவதுடன், பாடசாலை செல்லும் மாணவர்களின் சீருடைகள் தூசுகளால் சேதமடைந்து காணப்படுகின்றது.

எனவே எமது பிரதேசத்தில் மண் அகழ்வதை தடுத்து நிறுத்துவதுடன், தாக்கியவர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளிடம் மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

இப்பகுதியில் மண் அகழ்வதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை, இங்கு அனுமதியுடன் எனது மச்சானும், சகோதரனும் மண் அகழ்கின்றனர். ஒரு மாத்திற்கு 100 கியூப் மண் அகழப்படுகின்றது. மண் காலை 5 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை மண் அகழ்கின்றனர்.

இவர்கள் கூறுவது போன்று இரவு நேரங்களில் மண் அகழ்வதுமில்லை, மக்கள் குடியிருப்பு வீதியை பயன்படுத்துவதுமில்லை எனவும், இவர்களை தாக்கியவர்களுக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்புமில்லை என ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம்.எம்.ஹனிபா தெரிவித்தார்.

இக்கிராம மக்கள் யானைகள் பாதிக்கப்பட்டு வருவதுடன், தற்போது மண் அகழ்வதால் அடிப்படை வசதிகளை இழங்த நிலையில் காணப்பட்டு வருகின்றது. அதுமட்டுமல்லாது இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதற்கு ஆற்றைக் கடந்து செல்ல முடியாத நிலையில் காணப்படுகின்றனர்.

இதன்போது மண் அகழ்பவர்களுக்கும் பிரதேச மக்களுக்குமிடையில் வாக்குவாதம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here