வட்டியில்லா வங்கியை உருவாக்க மீராவோடை கிராம சக்தி மக்கள் சங்கத்தினை நாம் பயன்படுத்த வேண்டும் – ஏ.ஜீ.ரபீக்

0
158

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட வரையறுக்கப்பட்ட 207 மீராவோடை மேற்கு கிராம சக்தி மக்கள் சங்கத்தின் ஆற்றல் விருத்தி திட்டத்தின் கீழ் அதன் நிருவாக சபை உறுப்பினர்களுக்கான பயிற்சி கருத்தரங்கு நேற்று (10) ம் திகதி அதன் தவிசாளர் ஏ.ஜீ.ரபீக் தலைமையில் மீராவோடை ஆமீர் அலி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதில் நிதி நடவடிக்கைள் தொடர்பாக ஆராயப்பட்டு அதற்கான விளக்கங்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் சங்கத்தின் தவிசாளர் ஏ.ஜீ. ரபீக் உரையாற்றுகையில்,

நாட்டில் பலதரப்பட்ட வறுமை ஒழிப்பு திட்டங்கள் கடந்த ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட் போதும் அவைகள் முழுமையாக வெற்றியளிக்காததால் இதனைக் கவனத்திற் கொண்ட ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவர்கள் இத்திட்டத்தை அமுல்ப்படுத்தி அதனை தனது மேற்பார்யைின் கீழ் வழி நடாத்துவதை நாம் எல்லோரும் நன்கறிவோம்.

அந்த வகையிலே நாம் இச்சங்கத்திற்கு வழங்கப்படும் நிதிகளைக் கொண்டு சிறு தொழில் முயற்சியாளர்களுக்கு சுழற்சி முறை கடன்களை வழங்கி வருவதோடு இதன் ஸ்தாபகர் மைதிரிபால சிரிசேன அவர்களின் ஏழைகளை செல்வந்தராக்கும் கனவை நனவாக்குவதோடு இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் இப்பிராந்தியத்தில் வட்டியில்லா ஒரு வங்கியினை உருவாக்க இச் சந்தர்பத்தினை நாம் அனைவரும் பயன்படுத்த அல்லாஹ் அருள் புரிய வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சங்கதின் செயலாளர் ஜனாபா ஹுசைமா றிஸ்வின், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான இர்பான் , நவாஸ், கபீர், ஆகியோர்கள் கலந்து கொண்டதோடு பயனாளிகள் பலரும் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here