மாணவியின் கை துண்டிப்பு!

0
158

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை யூனிபில்ட் தோட்ட பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரின் வலதுகையை துண்டாக வெட்டிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

நேற்று (12) இரவு இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாணவியின் வீட்டாருக்கும் அயல் வீட்டாருக்கும் இடையில் ஏற்பட்ட குடும்ப பிரச்சினையின் காரணமாக மாணவியின் வலது கை துண்டாக வெட்டபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொட்டகலை பிரதேச பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கல்வி பயின்று வரும் 18 வயதுடைய மாணவி ஒருவரின் கையே இவ்வாறு துண்டாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தை அறிந்த பொதுமக்கள் மாணவியின் கையை வெட்டிய சந்தேக நபரின் வீட்டை உடைத்து சேதபடுத்தியுள்ளதாகவும் காயங்களுக்கு உள்ளான மாணவி கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் இருந்து டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு மாற்றபட்டு மேலதிக சிகிச்சைக்காக பேராதெனிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் கைது செய்யபட்ட சந்தேக நபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here