கிழக்கு மாகாண சபை நடாத்திய அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கு நடப்பது என்ன?

0
94

கிழக்கு மாகாண சபையினால் கடந்த வருடம் நடாத்தப்பட்ட பட்டதாரிகளுக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் (DO) பரீட்சையில் இரு பாடங்களிலும் 40 புள்ளிகளுக்கு மேல் சித்தி பெற்ற அனைவருக்கும் நியமனம் வழங்குமாறு பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண பட்டதாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த வருடம் (2016) செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதி விண்ணப்பம் கோரப்பட்டு நடாத்தப்பட்ட குறித்த போட்டி பரீட்சையில் அநேகமானவர்கள் 40 புள்ளிகளுக்கு மேல் பெற்ற நிலையில் சித்தி அடைந்திருந்தனர்.

ஆனால் கிழக்கு மாகாண சபை கண்துடைப்பாக குறிப்பிட்ட எண்ணிக்கையை அறிவித்து சுமார் 170 பேருக்கு இவ் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு இந் நியமனத்தை வழங்கி வைத்திருந்தது.

குறித்த நியமனங்கள் 170 பேருக்கு வழங்கப்பட்ட போதிலும் சுமார் 300க்கு மேற்பட்ட பட்டதாரிகள் இப்போட்டி பரீட்சையில் சித்தியடைந்திருந்தனர்.

அத்துடன் இப்பதவிக்கான அதிகளவான வெற்றிடங்கள் உள்ள போதிலும் அது தொடர்பில் அலட்சியப்போக்கோடு கிழக்கு மாகாண சபை உள்ளதாக பட்டதாரிகள் தரப்பு குற்றஞ் சாட்டுகின்றது.

ஆனால் தற்போது இப்பரீட்சையில் 40 புள்ளிகளை பெற்றவர்கள் சிலருக்கு அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டு நேர்முகப்பரீட்சைகள் இடம்பெற்றுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றது.

இவ்வாறான விடயங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும்.இந்த பதவிக்கான போட்டிப்பரீட்சையில் பல பட்டதாரிகள் சிறப்பாக பரீட்சைகளை எழுதி சித்தி அடைந்துள்ளனர்.

இந்த போராட்டத்தை மையப்படுத்தி அரசில் வாதிகள் அரசியல் செய்யாது ஆக்க பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறித்த பதவி 170 பேருக்கு கடந்த சில தினங்களுக்கு வழங்கப்பட்ட போது கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் நம்பிக்கை மோசடி செய்திருந்தார் என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றோம்..

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அங்கு கருத்து தெரிவிக்கையில் கிழக்கு மாகாண சபையின் கீழுள்ள அனைத்து வெற்றிடங்களையும் எதிர்வரும் 4 மாதத்திற்குள் நிரப்புவதாக குறிப்பிட்டிருந்தார்.

அதன் பின்னர் எதுவும் இதுவரை இடம்பெறவில்லை.ஆனால் தற்போது புதிய ஆளுனராக கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் பொறுப்பேற்றதன் பின்னர் எமக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.எனவே விரைவாக எமக்கு குறித்த நியமனத்தை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். ஆனால் தற்போது அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பதவிக்கு அவசரமாக நேர்முக பரீட்சைகள் நடைபெற்று வருகின்றது.

இந்த விடயத்தை ஆளுநர் அறிவாரா? அல்லது அவருக்கு தெரியாமல் இந்த நேர்முகப்பரீட்சைகள் இடம்பெறுகின்றதா என பாதிக்கப்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here