(எம்.எஸ்.அஸ்வர்)
இலங்கையின் 71 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மீராவோடை ஹிதாயன் லயன்ஸ் மற்றும் இளம் பிறை ஆகிய அணிகளுக்கிடையில் இடம்பெறும் சினேகபூர்வ மென்பந்து கிரிக்கெட் போட்டியொன்று இன்று (8) வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30க்கு மாஞ்சோலை அல் ஹிரா வித்தியாலய மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
மிகவும் கோலாகலமாக இடம்பெறவுள்ள இப் போட்டிக்கு அதிதிகளாக மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் ஏ.எல்.அலியார் ஹாஜியார், ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.ஏ.அன்வர், ஐ.எல். பதுர்தீன், ஏ.எம்.நௌபர், மற்றும் முன்னாள் தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட், அல் ஹிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எம்.எஸ்.ஹாறூன் ஸஹ்வி, ஏ.எச்.நுபைல், வை.எல்.மன்சூர் ஆகியோர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
எனவே இப் போட்டியை பார்த்து மகிழ அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.