சட்ட விரோதமாக கடவுச்சீட்டுக்களைவைத்திருந்த நிந்தவூரைச் சேர்ந்த இளைஞர் கைது!

0
57

(ஹாசிப் யாஸீன்)

சட்ட விரோதமாக கடவுச்சீட்டுக்களைவைத்திருந்த நிந்தவூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும்தெரியவருதானது,

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களைபெற்றுத்தருவதாக கூறி பல ஊர் இளைஞர்களிடமிருந்து பணத்தினையும் கடவுச்சீட்டுக்களையும் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய வந்த நிந்தவூரைச் சேர்ந்த இளைஞரை ஏமாற்றப்பட்ட இளைஞர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் குற்றப் புலனாய்வு உத்தியோகத்தர்களுக்கு வழங்கிய தகவல்களை அடுத்த சம்மாந்துறைபொலிஸார் நேற்று முந்தினம் வியாழக்கிழமை (07) சுற்றிவளைத்துகுறித்த இளைஞரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்படட இளைஞரிடமிருந்து சட்டவிரோதமாக வைத்திருந்த 14கடவுச்சீட்டுக்கள் மற்றும் கணனி உபகரணங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் குற்றப் புலனாய்வு உத்தியோகத்தர்தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இளைஞரை சம்மாந்துறை பொலிஸார் வெள்ளிக்கிழமை (08) நீதிமன்றில் ஆஜர் செய்ததை அடுத்து மேலதிக விசாரணைக்கான 14 நாள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனதாகவெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் குற்றப் புலனாய்வுஉத்தியோகத்தர் மேலும்தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here