கல்குடா பகுதியிலுள்ள தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு.

0
219
(எச்.எம்.எம்.பர்ஸான்)
கல்குடா பகுதியிலிருந்து தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு செல்லவுள்ள புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் மற்றும் பட்டம் பெற்று வெளியேறவுள்ள மாணவர்களை கௌரவித்தும் இடம்பெற்ற நிகழ்வு இன்று (10) ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மீராவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்குடா இளம் பட்டதாரிகள் அமைப்பினால் ஏற்பாடு செய்த இந்நிகழ்வு அதன் தலைவர் எம்.எஸ்.எம்.ஹில்மி ஸலாமி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அதிதிகளாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடத்தின் பீடாதிபதி கலாநிதி அஷ்ஷெய்க் எஸ்.எம்.எம்.மஸாஹிர் நளீமி, கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பொதுத் தலைவரும் கலாசார உத்தியோகத்தருமான அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர் முகம்மட் காசிமி, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எப்.எச்.ஏ.சிப்லி மற்றும் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பிரதித் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தருமான எஸ்.எச்.அரபாத் சஹ்வி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறும் மாணவர்களுக்கும், புதிதாக இணைந்துகொள்ளும் மாணவர்களுக்கும் அதிதிகளால் நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here