பிரதேச மட்ட எல்லே போட்டியில் ஓட்டமாவடி வளர்பிறை சம்பியன்.

0
66
(எம்.ஜே.எம். இம்தியாஸ்)
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கழகங்களுக்கிடையில் இடம்பெற்ற எல்லே போட்டியில் ஓட்டமாவடி வளர்பிறை விளையாட்டுக் கழகம் சம்பியன் பட்டத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளது.
குறித்த பகுதியில் சுமார் பத்து அணிகள் பங்குபற்றிய இத் தொடரில் இறுதிவரை மிகவும் சிறப்பாக விளையாடி இவ் சாதனையை வளர்பிறை அணியினர் பெற்றுள்ளனர்.
இறுதிப் போட்டியில் இன்று வளர்பிறை அணியினரோடு மீராவோடை அல் அக்ரம் அணியினர் போட்டியிட்டனர்.
சம்பியன் பட்டத்தைப் பெற்றுக் கொண்ட வளர்பிறை அணியினர் மாவட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here