இலங்கையிலிருந்து உடற்பருமனை முற்றாக இல்லாதொழிப்போம் இந்திய சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெயசிறி

0
44

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

அதிகமான நோய்கள் உடற்பருமனால்தான் ஏற்படுகின்றன. எனவே, அதனைச் சரிசெய்து, அதிபருமனான உடலை கட்டுக்கடக்கமான ஆரோக்கியமான உடலமைப்பாக மாற்றுவதன் மூலம் உடலில் இருக்கின்ற நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம்,கொலஸ்ட்ரோல், மாரடைப்பு, மூட்டுவலி,சிறுநீரகத்தின் குறைவான கட்டுப்பாடு,அமிலத்தன்மை, ஒற்றை தலைவலி,நித்திரையின்மை, சுவாசிப்பதில் சிரமம் போன்ற இன்னோரன்ன சகல நோய்களும் குணமாகி, ஆரோக்கியமாக வாழலாம் என இந்திய சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெயசிறி கூறினார்.

ஜே.சி.ரீ. இந்திய – கொழும்பு தனியார் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்து, இலங்கையிலிருந்து முற்றாக உடற்பருமனை இல்லாதொழிப்போம் எனும் கருப்பொருளில் அது பற்றி விளக்கமளிக்கும் நிகழ்வு, கொழும்பு – 03,கொள்ளுப்பிட்டி, 17ஆவது லேன், இல – 20இல் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜே.சி.ரீ. இந்திய – கொழும்பு தனியார் நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் டாக்டர் சூரி  ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், அந்த நிறுவனத்தின் டாக்டர் குழுவும் கலந்து கொண்டிருந்தனர்.

டாக்டர் ஜெயசிறி அங்கு தொடர்ந்து விளக்கமளிக்கையில்,

ஜே.சி.ரீ. இந்திய – கொழும்பு தனியார் நிறுவனத்தின் மூலமாக இலங்கை மக்களுக்கு நியாயமான கட்டணத்தில் சத்திரசிகிச்சை செய்வதற்கு ஆயத்தமாக இருக்கின்றோம்.

கொழும்பு – 03, கொள்ளுப்பிட்டி, 17ஆவது லேன், இல – 20 என்ற முகவரியில் அமைந்துள்ள இந்த இடம்தான் தகவல் வழங்கும் நிலையமாக அமையவிருக்கின்றது.  இங்கே இருந்துதான் இலங்கை முழுவதிலும் மற்றும் வெளிநாடுகளிலும் சிகிச்சைகள் மற்றும் சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட சகல வசதிகளையும் செய்திருக்கிறோம்.

உயர்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி,எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல் மிகவும் உடற்பருமனான நபரை மிகவும் ஆரோக்கியமுள்ள உடல் அமைப்பைக் கொண்ட நபராக மாற்றுவதற்கான சிகிச்சைகளைச் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சரியான முறையில் நோயாளிகளிடம் விளக்கங்கள் மற்றும் அவர்களுடைய வரலாற்றைப் பெற்று, தேவையான அறிக்கைகள் எல்லாம் பெற்றதன் பிறகுதான் சிகிச்சை செய்வதற்காக அவர் பரிந்துரைக்கப்படுகிறார்.

இதுவரை ஆயிரக்கணக்கான சத்திரசிகிச்சைகள் இந்தியாவில் செய்யப்பட்டுள்ளன. இதுவரை எந்தப்பக்கவிளைகளும் ஏற்பட்டதில்லை. இதற்கான செலவினங்கள் நோயாளியின் தன்மைக்கேற்ப மாறுபடும்.

இலங்கை சுகாதர அமைச்சினால் முழுமையாக பரிசோதிக்கப்பட்டு, இதற்காக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. எந்தவித அச்சமும் இல்லாமல் இலங்கை வாழ் மக்கள் எம் நிறுவனத்தில் இணைந்து சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.

இதற்கான அனுபவமுள்ள வைத்தியர் குழு எம்மிடம் இருக்கின்றது. இந்தியாவில் அதிகளவான வரவேற்பும் இதற்கு இருக்கின்றது. அந்த வரவேற்பை இலங்கையிலும் பெறுவதற்கும் எதிர்பார்க்கின்றோம் – என்றும் தெரிவித்தார்.

இதுபற்றிய மேலதிக தகவல்களைwww.drjtc.com என்ற எமது இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ளலாம். எங்கள் நிறுவனத்தைப்பற்றி அறிந்து கொள்ளலாம்.  அல்லது  +94 (011)  230 18 05, (011) 510 18 05 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்நிகழ்வில், முகாமைத்துவ பணிப்பாளர் சந்தோஷ், நிர்வாகப் பணிப்பாளர் டாக்டர் சூரி, சந்தைப்படுத்தல் பணிப்பாளர் கே.எல்.எம். பைஸால் மற்றும் ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here