கிழக்கு ஆளுநர் விரைவில் மீராவோடை வைத்திசாலைக்கு வருகை தரவுள்ளார்.

0
52

(எம்.ரீ. ஹைதர் அலி)

அல்-கிம்மா சமூக சேவைகள் நிறுவனத்தின், பணிப்பாளரும், கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளருமான அஷ்ஷேக். எம்.எம்.எஸ். ஹாறூன் (ஸஹ்வி) அவர்களுக்கும் மீராவோடை பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினருக்கும் இடையிலான சந்திப்பொன்று 2019.02.10ஆம் திகதி – ஞாயிற்றுக்கிழமை அல்-கிம்மா சமூக சேவைகள் நிறுவனத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களை மீராவோடை வைத்தியசாலைக்கு அழைத்து வந்து இங்கு காணப்படும், ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறைகள் தொடர்பில் கலந்துரையாடி தீர்வு ஒன்றினை பெற்றுத்தருமாறும், அதற்கான நேர, காலம் ஒன்றினை ஒதுக்கி ஆளுநரை அழைத்து வருமாறும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரால் கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் அஷ்ஷேக். எம்.எம்.எஸ். ஹாறூன் (ஸஹ்வி) அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இச்சந்திப்பில், கருத்து தெரிவித்த அஷ்ஷேக். எம்.எம்.எஸ். ஹாறூன் (ஸஹ்வி) அவர்கள் எமது பிரதேசத்தில் காணப்படும், வாழைச்சேனை மற்றும் மீராவோடை வைத்தியசாலைகளுக்கு எனது அழைப்பினையேற்று மிக விரைவில் ஆளுநர் விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.

வைத்தியசாலைகளுக்கான, ஆளுநரின் விஜயத்தின்போது, மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரையும் அழைத்துவருவதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.

அச்சந்திப்பில் மீராவோடை வைத்தியசாலையில் காணப்படும் தேவைப்பாடுகள் அனைத்தினையும் கேட்டறிந்துகொண்டு இயன்றளவு முடியுமான தீர்வினை பெற்றுத்தருவதாக கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் தன்னிடம் தெரிவித்துள்ளதாக கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் அஷ்ஷேக். எம்.எம்.எஸ். ஹாறூன் (ஸஹ்வி) தெரிவித்தார்.

இச்சந்திப்பில் அபிவிருத்திக் குழுவினரால் வைத்தியசாலைக்கு ஆளுநரை அழைத்து வருவதற்கான கோரிக்கை அடங்கிய கடிதமும் கையளிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here