கட்டார் இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பின் (Afico – Qatar) வருடாந்த ஒன்றுகூடலும் நிருவாகத்தெரிவும்

0
108

(ஊடகப்பிரிவு)

கட்டார் இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பின் (Afico – Qatar) வருடாந்த ஒன்றுகூடலும் புதிய ஆண்டுக்கான நிருவாகத்தெரிவும் நேற்று 15-02-2019ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை கட்டாரில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பின் நிருவாகிகள், அங்கத்தவர்கள், நலன்விரும்பிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

அமைப்பின் நோக்கம், செயற்பாடு, அடைவுகள், கடந்து வந்த பாதை தொடர்பில் இணைப்பாளர் ABM.பெளஷர் சிராஜியினால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டதோடு, அமைப்பின் உறுப்பினர்கள், அங்கத்தவர்கள், நலன்விரும்பிகள் மூலமாக கல்குடாவில் காவத்தமுனை அர் ரஹ்மா விஷேட தேவையுடையோர் பாடசாலையின் வளர்ச்சிக்காக வழங்கப்படும் ஒத்துழைப்புக்கள், ஆதரவுகள், பங்களிப்புகள் பற்றியும் சிலாகிக்கப்பட்டு, எந்தவித பிரதியுபகாரமும் பாராது, பிரதேசங்கள், எல்லைகள் கடந்து உதவி செய்து வரும் சகோதரர்கள் நன்றியுடன் நினைவுகூரப்பட்டனர்.

கடந்த ஓராண்டு காலப்பகுதியில் அமைப்பிற்கு கிடைக்கப்பெற்ற உதவிகள், பயன்படுத்தப்பட்ட விதம் தொடர்பிலான பூரண அறிக்கை சபையில் சர்ப்பிக்கப்பட்டு சபை அன்கீகாரத்தியும் பெற்றது.

அமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் சமூகமளித்திருந்த சகோதரர்களினால் ஆக்கப்பூர்வமான கருத்துக்கள், ஆலோசனைகள் பகிர்ந்து கொள்ளப்பட்டதுடன், எதிர்காலத்தில் எமது நோக்கத்தை அடைந்தது கொள்ளத்தேவையான முன்னெடுப்புக்கள் தொடர்பிலும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அத்துடன் அமைப்பின் புதிய நிருவாகிகளாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர்.

01 தலைவர் – ABM.Fawsar (Shiraji)
02. இணைத்தலைவர் – BM.Rifaideen (Shiraji)
03. செயலாளர் – MNM.Ramzin
04. உப செயலாளர் – MAM.Najeem (Moulavi)
05. பொருளாளர் – B.Mumthiyas
06. உப பொருளாளர் – HMM.Sukri (Moulavi)
07.பிரதான ஆலோசகர் – AL.Peer Mohamed (காசிமி-JDIK)
08 ஆலோசகர்கள் MBM.Izzath , SAZ.Arif , ACK.Mohamed Rahmani (SLDC), ALM.Nowsath (Hami)
09.ஊடகம் – MI.Lebbe Thamby

நிருவாக உறுப்பினர்கள்
01. MIM.IRFAN
02 S.Ahamed
03 KLM.Sulaiman
04.M.Ameer
05.LM.Shibly
06 ALM.Jaleel
07 AS,Arafath (Moulavi)
08 MCM.Anas (Moulavi)
09 KMM.Farook
10 MS.Imthiyas
11 MKM.Azaar
12 SM.Razeed
13 AL.Sajahan ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

அத்துடன், காவத்தமுனை அர் ரஹ்மா விஷேட தேவையுடையோர் பாடசாலையின் எதிர்கால வளர்ச்சியை இலக்காகக்கொண்டு நிரந்தர வருமானத்தை ஈட்டிக்கொள்ளத்தேவையான திட்டங்கள் தொடர்பில் அமைப்பும் ஆலோசகர் MBM.இஸ்ஸத் அவர்களினால் ஆலோசனைகளும் ஆக்கபூர்வமான திட்டங்களும் முன்வைக்கப்பட்டது.

இராப்போசனத்துடன் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வு, செயலாளர் MNM.ரம்ஷினின் நன்றிரையுடன் நிறைவுற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here