போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள், விற்பனை செய்வோர் அனைவரையும் குடும்பங்களாலும் சமூகத்தாலும் ஒதுக்குவோம் ஓட்டமாவடியில் தீர்மானம்.

0
123
(எச்.எம்.எம்.பர்ஸான்)
போதைப்பொருள் பாவனைக்கு எதிராக பல்வேறு தீர்மானங்கள் ஓட்டமாவடியில் நிறைவேற்றப்பட்டது.
கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் ஏற்பாட்டில் பகிரங்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நேற்று (23) அவ்வமைப்பின் நிருவாகத் தலைவர் ஏ.ஹபீப் காசிமி தலைமையில்  ஓட்டமாவடி அல்  கிம்மா வைத்தியசாலைக்கு முன்பாக நடைபெற்றது.
அதில் போதைக்கு எதிராக பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
போதையூட்டும் எந்தவொரு செயற்பாட்டிலும் நாங்கள் ஈடுபடமாட்டோம்.
சாராயம், கஞ்சா, பீடி, சுருட்டு, சிகரட் போன்ற ஏனைய போதைவஸ்துக்கள் எதனையும் பயன்படுத்த மாட்டோம்.
மேற்குறித்த எந்த தொழில்களிலும் நாங்கள் ஈடுபட மாட்டோம்.
குறித்த குற்றச் செயல்களில் ஈடுபடும் யாராக இருந்தாலும் தயவுதாட்சனையின்றி சட்டத்தின் முன்னிறுத்தி தகுந்த தண்டனையைப் பெற்றுக் கொடுப்போம்.
போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள், விற்பனை செய்வோர் அனைவரையும் குடும்பங்களாலும் சமூகத்தாலும் ஒதுக்குவோம் என்று இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜம்இய்யாவின் நிருவாகத் தலைவர் ஏ.ஹபீப் காஸிமி இத் தீர்மானத்தை மேடையில் தெரிவிக்க வருகைதந்த அனைவரும் தங்களுடைய கைகளை உயர்த்தி சப்தமிட்டு அதற்கு கட்டுப்பட்டு நடப்பதாக உறுதியளித்தனர்.
இதன்போது கல்குடா ஸஹாபாக்களை நேசிப்போர் ஒன்றியத்தினால் பாதையை மாற்றும் போதையை ஒழிப்போம் எனும் வாசகம் பொறிக்கப்பட்ட ஸ்ரிக்கர் ஒன்றும் வருகை தந்தோர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
அத்தோடு அரசாங்கம் போதைக்கெதிராக முன்னெடுக்கும் அத்தனை விடயங்களுக்கும் பூரண ஒத்துழைப்புக்களையும், ஆதரவுகளையும் வழங்குவதாக ஜம்இய்யா சபையோர் முன்னிலையில் உறுதியளித்தது.
இந்நிகழ்வில் வளவாளர்களாக உண்மை உதயம் இஸ்லாமிய மாத இதழ் பிரதம ஆசிரியர் எஸ்.எச்.எச்.இஸ்மாயில் சலபி, கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பொதுத் தலைவர் ஏ.எல்.பீர் முகம்மட் காசிமி, கந்தளாய் இப்னு தைமியா அரபுக் கல்லூரியின் அதிபர் பீ.பீ.ஜாபிர் (ஷரபி), நாவலடி மர்கஸ் அந்நூர் கலாபீட உப அதிபர் வீ.ரீ.எம்.முஸ்தபா தப்லீகி ஆகியோர்கள் கலந்து கொண்டு உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here