முஸ்லிம் அரசியலில் ‘பேஸ்புக் போராளிகள்’

0
75

தமிழ் திரைப்படமொன்றில் காமடி நடிகர் வடிவேல் தன்னை அந்த ஊரில் ‘பெரிய ரவுடி’ என்று சொல்லிக் கொண்டு திரிவார். ஆனால் அவரை ஒரு ரவுடியாக ஏற்றுக் கொள்வதற்கான எந்த இலட்சணங்களும் இல்லாமையால் ஊரில் ‘ரவுடி’ என்கின்ற அடையாளம் அவருக்கு கிடைக்க மாட்டாது. ஒரு கட்டத்தில் பெரிய சண்டியர்களை பொலிஸார் கைது செய்வார்கள்.
அப்போது வடிவேலு தானும் ஒரு ரவுடி என்று சொல்வார். ஆனால் பொலிஸார் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். எனவே அவர் வேறு வழியின்றி தானாகவே ஓடிச் சென்று பொலிஸ் ஜீப்பில் ஏறிக் கொண்டவாறு….. “ஏ பாருங்க நானும் பெரிய ரவுடிதான்….நானும் ஜெயிலுக்குப் போறன்..” என்று சொல்லிக் கொண்டு போவதாக அந்தக் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
முஸ்லிம்களுக்கான அரசியல் என்று சொல்லப்படுகின்ற அரசியலில், தேசிய தலைவர்கள், பிராந்திய தலைவர்கள், அரசியல் போராட்டத்தின் தளபதிகள் என்று தம்மை அழைத்துக் கொள்வோரில் சிலரையும், இந்த முஸ்லிம் சமூகத்தை தாமே தலைமைதாங்கி நடத்துவதாக கூறுகின்ற அரசியல்வாதிகளில் பெரும்பாலானவர்களையும் காணும் போது, வடிவேலுவின் ‘நானும் ரவுடிதான்’ காமடிக் காட்சி அநேக சந்தர்ப்பங்களில் நினைவுக்கு வருவதுண்டு.
தானாக உணர்த்தல்
யாராவது ஒரு நபர் ஊருக்குள் சண்டித்தனம் காட்டுவதாக பிரதேசவாசிகள் உணர்ந்து கொண்டால் அவர்கள் தானாகவே அவரை எவ்வாறு பெரிய ரவுடி என்று அழைப்பார்களோ அதுபோலவே, மக்களுக்கு சேவை செய்தால், முஸ்லிம் சமூகத்தை தலைமை தாங்கி வழிநடாத்திச் சென்றால், தமது அரசியலை விட மக்களின் அபிலாஷைகளுக்கு முன்னுரிமை அளித்துச் செயற்பட்டால் தானாகவே தலைவராகலாம்.
இவர்தான் தலைவர் என மக்கள் உணரும் விதத்தில் ஒரு குறி;ப்பிட்ட முஸ்லிம் அரசியல்வாதி செயற்பட்டால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் அவரை தலைவர் என தலையில் வைத்துக் கொண்டாடுவார்கள். ‘நானும் தலைவர்’ என்று நாமாக கூற வேண்டியதில்லை. (இங்கு, கட்சியின் அல்லது அமைப்பின் தலைவர் என்பது வேறுää சமூகத்தின் தலைவர் என்பதும் வேறாகும்).
ஆனால் அதைச் செய்யத் தவறுகின்ற காரணத்தினால் வடிவேல் பாணியில் ‘நானும் தலைவர்தான் நான்தான் இந்த சமூகத்தை தேசிய மட்டத்தில் தலைமை தாங்குகின்றேன்’ என்று சுயமாகவே ஒரு பில்;ட்அப் கொடுக்க வேண்டிய நிலை முஸ்லிம் அரசியலில் ஏற்பட்டிருக்கின்றது. சமூக வலைத்தளங்கள் தொட்டு மேடைகள் வரை பகட்டுப் பரப்புரை செய்யும் கையறுநிலைக்கு நமது அரசியல் வந்திருக்கின்றது என்பதற்கு நீங்களும் நானுமே கண்கண்ட சாட்சிகள்.
பொதுவாக தலைவர்கள் என்ற வகுதிக்குள் உள்ளடக்கப்படுகின்ற முஸ்லிம் கட்சித் தலைவர்கள்ää பிராந்திய தலைவர்கள்ää அமைச்சர்கள்ää சிலவேளை எம்.பி.க்கள்தான் இப்படி இருக்கின்றார்கள் என்றால்ää அவருக்கு கீழே கட்சியில் அல்லது அவருடைய பணிக்குழுவில் இருக்கின்ற நபர்களில் பெரும்பாலானவர்களும் இதே பாணியைத்தான் பின்பற்றுவதாக தோன்றுகின்றது. யாருக்கு கோபம் வந்தாலும் இதுதான் நிதர்சனமாகும்.
பேஸ்புக்கிலும் வட்ச்அப் போன்ற ஏனைய சமூக வலைத்தளங்களில் எழுதுகின்றவர்கள் தம்மை குறிப்பிட்ட கட்சியின் அல்லது முஸ்லிம் சமூகத்தின் அரசியல்சார் ‘போராளிகள்’ என்று காட்டிக் கொள்கின்ற ஒரு போக்கு கடந்த பல வருடங்களாக உள்ளது. அதுமட்டுமன்றிää அரசியல்வாதிகளின் கீழ் பணியாற்றுகின்றவர்கள்ää இணைப்பதிகாரிகள்ää அமைப்பாளர்கள்ää அமைச்சுக்களின் கீழ் தொழில் பெற்றவர்கள் முதல் அல்லக்கைகள்ää எடுபிடிகள் வரை பலர் என்ன நினைக்கின்றார்கள் என்றால்…. இந்த முஸ்லிம் சமூகத்தை நாம்தான் இழுத்துக் கொண்டு முன்செல்கின்றோம் என்று.
நிஜத்தில் அப்படி எதுவும் இல்லை! முஸ்லிம் அரசியல்வாதிகளே மக்களை இழுத்துக் கொண்டு செல்லவில்லை. மக்கள்தான் அவர்களை கூட்டிக் கொண்டு போகின்றார்கள். மக்களின் முடிவுகளின்பால் தலைவர்கள் வந்து ஒட்டிக் கொள்கின்றார்கள் என்பதே யதார்த்தம். இந்த நிலையில்ää மேற்சொன்ன வகையினர் இந்த சமூகத்தை வழிநடாத்துவதாகச் சொல்வதுää வடிவேலுவின் காமடியை விஞ்சிய காமடியாகவே இருக்கும். இதில் பல விடயங்கள் தமிழர்ää சிங்களவர் அரசியலுக்கும் பொருந்தும்.
புதுவகை எடுபிடிகள்
ஆனால்ää பேஸ்புக் போராளிகள்ää வட்ஸ்அப் போராளிகள் என்ற ஒரு பிரிவினர் இப்போது உருவாகியிருக்கின்றனர். அவர்களை மேற்சொல்லப்பட்ட தலைவர்கள்ää அமைச்சர்கள்ää பாராளுமன்ற உப்பினர்கள் நம்புகின்றார்கள் என்பதை விடவும் நம்புவது போல் நடித்துக் கொண்டு அவ்வாறானவர்களைப் பயன்படுத்துகின்றனர் என்பதே உண்மை. இந்த பண்பு முஸ்லிம் அரசியலில் புதிய போக்காக மாறியிருப்பதுடன்ää அநேக சந்தர்ப்பங்களில் ஆக்கப10ர்வமற்ற முட்டாள்தனமான விவாதங்கள் மற்றும் முரண்பாடுகளுக்கு இட்டுச் செல்வதை காண முடிகின்றது.
சமூக வலைத்தளங்கள் என்பது ஒரு போதையாகவும் அதேநேரத்தில் எல்லா விவகாரங்களிலும் ஆதிக்கம் செலுத்துவதாகவும் மாறியிருக்கின்ற ஒரு காலத்தில்ää இலங்கை முஸ்லிம் அரசியலில் அதனது வகிபாகம் என்பது தவிர்க்க முடியாதது. மேலைத்தேய நாடுகளிலும் ஏனைய சில பிராந்தியங்களில் உள்ள நாடுகளிலும் பேஸ்புக் போன்ற நவீன ஊடகங்கள் ஆட்சிமாற்றத்திற்கே வித்திட்டிருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனால்ää முகநூலில் கருத்தைச் சொல்பவரும் அது சொல்லப்படுகின்ற பக்குவமான முறையுமே சமூகங்களிடையே கருத்தியல் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. சமூக மற்றும் அரசியல் கட்டமைப்புக்களின் அதன்மூலம் மாறுதல்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதைக் கவனிக்க வேண்டும். அந்த அடிப்படையில் நோக்கினால்ää முஸ்லிம் அரசியலில் பேஸ்புக் மற்றும் ஏனைய நவீன ஊடகங்கள் எவ்விதம் கையாளப்படுகின்றது என்பது மீள்வாசிப்புக்குரியது.
முஸ்லிம் அரசியல் சார்ந்த கருத்துக்களை பேஸ்புக்கில் பதிவிடுவோரில் பல வகையினர் உள்ளனர். நியாயப10ர்வமானää நடுநிலையானää முற்போக்குத்தனமான கருத்துக்களை பதிவிடுகின்ற பல செயற்பாட்டாளர்கள் இருக்கின்றனர். எந்த அரசியல்வாதி என்றாலும் நியாயத்தைச் சொல்பவர்கள் உள்ளனர். சமூகத்தின் பக்கமிருந்து அரசியலை நோக்குவோரும் உள்ளனர். அவ்வாறனவர்கள் இக்கட்டுரையின் விமர்சனங்களுக்கு விதிவிலக்குரிமை கொண்டவர்கள்.
ஆனால் இன்னும் ஒரு வகையினர் உள்ளனர். அவர்கள் ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதிக்கு ஜால்ரா அடிக்கின்ற விதத்தில் செயற்படுவார்கள். அவர் செய்வது மட்டுமே சரி என்பார்கள். அவர்கள் மகா பிழையைத்தான் செய்தாலும் சரி என்று நியாயப்படுத்துவார்கள். போட்டிக் கட்சியில் உள்ள இவர்களைப் போன்றவர்கள் பதில் கருத்துக்களுடன் மடித்துக் கட்டிக் கொண்டு வருவார்கள். பேஸ்புக் சண்டைக்களமாகும். சிலவேளைகளில் தமது கோவணங்கள் களன்றது தெரியாமல் சண்டை பிடித்துக் கொண்டிருப்பார்கள். ஆழமாக நோக்கினால்ää அவர்களுக்கு போதுமான அரசியல் அறிவு இல்லை என்பது தெரியவரும். அப்பேர்ப்பட்டவர்களே இங்கு பேஸ்புக் போராளிகள் என்று குறிப்பிடப்படுகின்றனர்.
உண்மையில் இவ்வாறான பேஸ்புக் செயற்பாட்டாளர்களின் அபத்தமான பதிவுகளால்ää அவர் சார்பு முஸ்லிம் அரசியல்வாதியின் இமேஜ்தான் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அவரும் அவருடைய ஆட்களின் இலட்சணமும் என்று பொதுமக்கள் அங்லாய்ப்பதை காண முடிகின்றது. எது எவ்வாறிருப்பினும்ää முன்னொருபோதுமில்லாதவாறு முஸ்லிம் கட்சித் தலைவர்கள் உள்ளடங்கலாக கணிசமான அரசியல்வாதிகள் இன்று கண்மூடித்தனமாக முகநூலை நம்புகின்றார்கள்.
ஒரு காலத்தில் ஊடகவியலாளர்களாலேயே தொடர்புகொள்ள முடியாதிருந்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள்ää இன்று பேஸ்புக்கில் வலம் வருகின்றார்கள். முஸ்லிம் தலைமைகள் தொடக்கம் உள்ளுர் அரசியல்வாதிகள் வரை தமக்கான உத்தியோகப10ர்வ பேஸ்புக் பக்கங்களையும்ää சினிமா பிரபலங்களுக்கு இருப்பது போன்ற ‘லைக்’ பக்கங்களையும் நடாத்தி வருகின்றனர். அன்றாடம் நடக்கின்ற சம்பவங்களையும்ääசிறிய பெரிய நிகழ்வுகளையும் தமது கட்சியின் பார்வையாளர்களுக்கு பேஸ்புக் ஊடாக பதிவேற்றம் செய்கின்றனர். செல்பிகளுக்கும் பஞ்சமில்லை.
ஒரு ஜனநாயக நாட்டின் நான்காவது தூண் ஊடகம் என்றும் அதனால் எதனையும் மாற்றியமைக்க முடியும் என்பதையும் மட்டமாகப் பார்த்த ஒருசில முஸ்லிம் அரசியல்வாதிகளும் இன்று முகநூலுக்காக நிறைய நேரத்தையும் பொருளையும் செலவு செய்வதைப் பார்க்க நேர்கின்றது. இதற்காக ஒருசில முஸ்லிம் அரசியல்வாதிகள் கொடுப்பனவை மேற்கொண்டு ஆட்களை ஈடுபடுத்தியுள்ளதாக பேசப்படுவதுண்டு. அந்த அரசியல்வாதியிடம் தொழில் பெற்றவர்களும் ஒட்டிக் கொண்டிருப்பவர்களும் கூட பேஸ்புக் போராளிகளாக சிலநேரம் அவதாரம் எடுக்கின்றனர்.
உண்மைப் போராட்டம்
முதலாவதுää போராட்டம் என்பதையும் அரசியல் விடுதலைப் போராளிகள் யார் என்பதையும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். சகோதர இனமான தமிழர்கள் இன்னும் முன்னெடுத்துக் கொண்டிருப்பதும் போராட்டத்தின் ஒரு வடிவமே. அப்படியான ஒரு நிலைமை முஸ்லிம் அரசியலிலும் இருந்தது. ஆனால்ää முஸ்லிம்களின் இன்றைய அரசியல் போராட்ட குணத்தோடு பயணிப்பதாக யாரும் கூற முடியாது. எனவே போராட்ட தன்மையே இல்லையென்றால் தலைவர்கள் உட்பட ஆதரவாளன் வரை கிட்டத்தட்ட 99 சதவீதமானோர் தம்மை போராளிகள் என்று சொல்வதற்கே அருகதையற்றவர்கள்.
வரலாற்றில்; முஸ்லிம்கள் இலங்கையின் விடுதலைக்காக போராடினார்கள். ஆங்கிலேயருக்கு எதிராகவும் நாட்டின் இறைமைக்காகவும் போராடினார்கள். கடும்போக்குவாதத்திற்கு எதிராக போராடினார்கள். ஓரிரு முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற தமிழ்க் கட்சிகளில் இணைந்து கொண்டு சிறுபான்மை மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தார்கள். இவர்களை சமூக போராளிகள் என்று சொல்ல முடியும்.
முஸ்லிம் இளைஞர்கள் முப்படைகளிலும் இணைந்து நாட்டுக்காக போராடினார்கள்ää போராடிக் கொண்டிருக்கின்றார்கள். பெருமளவிலான முஸ்லிம் இளைஞர்கள் தமிழ் இயக்கங்களிலும் இணைந்து ஆயுதமேந்திப் போராடிää தமிழ் மக்களின் கனவுக்காக தங்களை பலியாக்கினர். இவர்களையும் விரும்பினால் ஒருவகையில் போரட்ட குணம் உள்ளவர்களாக வகைப்படுத்தலாம். அதேபோன்று முஸ்லிம் அரசியலில்ää போராளிகள் என்ற வகையினருக்கும் ஒரு வரலாறுää பண்பியல்பு இருக்கி;ன்றது.
முஸ்லிம் அரசியல் விடுதலைப் போராட்டம் என்பது 1980களில் இருந்து ஆரம்பமானதாக சொல்ல முடியும். எம்.ஐ.எம்.மொஹிதீன் முஸ்லிம் தேசியம் பற்றிய கருத்துருவாக்கத்தை மேற்கொண்டிருந்த நிலையில்ää; எம்.எச்.எம்.அஷ்ரப் போன்றோர் தமிழர் அரசியலில் இருந்து விலகி சேகு இஸ்ஸதீன் போன்றோரை இணைத்துக் கொண்டு தனித்துவ அடையாளத்தோடு செயற்பட முற்பட்ட வேளையில் முஸ்லிம்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டனர்.
பெருந்தேசிய மற்றும் தமிழ்த்தேசிய அரசியலோடு மல்லுக்கு நிற்கவேண்டிய நிர்ப்பந்தம் இருந்த சமகாலத்தில் தமிழ் ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தலும் எதிராக எழுந்து நிற்க வேண்டிய அபாயகரமான சூழலும் இருந்தது. இத்தனைக்கும் மத்தியில் முஸ்லிம்களுக்கான தனித்துவ அடையாள அரசியலை ஓரளவுக்கேனும் கட்டியெழுப்ப போராட வேண்டியிருந்தது. இவர்களே அரசியல் போராளிகள்.
முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் ஆயுதம் தரித்த இயக்கங்களால் இலக்கு வைக்கப்பட்டிருந்த காலமது. இணைந்த வடகிழக்கு மாகாண சபை உறுப்பினர் அலிஉதுமான் போன்ற சில போராளிகள் பலியெடுக்கப்பட்டுமிருந்தனர். இத்தனைக்கும் மத்தியில் நிதி நெடிக்கடியோடும்ää உயிர்ப்பயத்தோடும் முஸ்லிம்களுக்கான தனித்துவ அரசியலை கட்டியெழுப்பியர்கள்தான் போராளிகள்.
முஸ்லிம்களின் தனித்துவ அரசியலை நிறுவுவதற்காக உயிர் அச்சுறுத்தலையும் மீறி பாடுபட்ட அரசியல்வாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களையும்ää முஸ்லிம் கட்சிக்காக தமது தமது மனைவின் தாலியை அடகுவைத்து பணம் கொடுத்தவர்கள்ää சொந்த பணத்தைää உயிரை தியாகம் செய்ய தயாராக இருந்தவர்கள்ää அதேபோன்று அக்காலத்தில் முஸ்லிம் ஊர்களின் பாதுகாப்புக்காக தங்களை அர்ப்பணித்த ஊர்க் காவலர்களுமதான் உண்மையான போராளிகள் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறான உண்மைப் போராளிகளுள் பலர் இன்று உயிருடன் இல்லை. உயிருடன் இருக்கின்ற கொஞ்சப் பேர் தம்மைப் போராளிகள் என்று சொல்லிக் கொள்வதும் இல்லை. உண்மையான அரசியல் விடுதலைப் போராட்டம் இன்று கெட்டுகுட்டிச் சுவராகியுள்ளதை எண்ணியவாறு காலத்தைக் கழிக்கின்றனர். இந்நிலையிலேயேää எவ்வித போராட்டமும் செய்யாத நாம் மேற்குறிப்பிட்ட கூட்டத்தினரும்ää கட்சி ஆதரவாளர்கள் மற்றும் அடிவருடிகளும் தம்மை ஒரு பெரிய போராளிகள் போல தம்மை காட்டிக் கொண்டு களத்திற்கு வந்திருக்கின்றனர்.
அபத்தமான முரண்பாடு
சரியாகப் பார்த்தால்ää எல்லா அச்சுறுத்தல்களும் ஓய்ந்தபின் சிம்மாசனத்தில் அமர்ந்தவர்களோää சமூக சிந்தனை கொஞ்சம் கூட இல்லாமல் கொந்தராத்துக்காகää பணம் பொருள் சம்பாதிப்பதற்காக அரசியல்வாதிகளுடன் ஒட்டிக் கொண்டிருப்பவர்களோ போராளிகள் அல்லர். ஒரு அரசியல்வாதியிடம் தொழில் பெற்றவர்கள்ää வாகனம் பெற்றவர்கள்ää அரசியல் தலைமையிடம் காரியம் முடிக்க எதிர்பார்த்திருப்பவர்கள்ää அடுத்த தேர்தலில் போட்டியிட வேண்டுமென கருத்துச் சொல்பவர்கள்ää வாய்க்கும் மூளைக்கும் சம்பந்தமில்லாமல் சமூக வலைத்தளங்களில் கருத்துச் சொல்கின்ற பேர்வழிகள் யாரும் போரளிகள் கிடையாது.
அதேபோன்றுää தம்மாலேயே இந்தக் கட்சியும்ää முஸ்லிம்களுக்கான அரசியலும் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்று சொல்கின்ற அரசியல்வாதியாயினும் சாதாரண ஆதரவாளனாயினும் அவர்களும் கூட நிஜத்தில்; காகித போராளிகள்தாம். வேண்டுமென்றால் ‘கட்சி ஆதரவாளர்கள்’ என்றோ அரசியல்வாதியின் எடுபிடி என்றோதான் வைத்துக் கொள்ளலாம் என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டியுள்ளது.
பேஸ்புக்கில் போராடுகின்ற ஆதரவாளர்கள் போராளிகள் என்ற வகுதிக்குள் அடங்க மாட்டார்கள் என்பது ஒருபுறமிருக்கää உண்மையான சமூக நோக்கமின்றி வெறுமனே கட்சிசார்புää அரசியல் தலைவர் சார்புää ஊர் சார்பு நிலைப்பாடுகளை எடுக்கின்றவர்களையும்ää கண்மூடித்தனமாக தமது ஆஸ்தான அரசியல்வாதியை நம்புகின்றவர்களையும் அபத்தமான முறையில் வாதிடுகின்றவர்களையும் ஆக்கப10ர்வமான சமூக வலைத்தள செயற்பாட்டாளர்கள் என்றும் சொல்ல முடியாது.
போராட்டம் என்பது ஆயுத ரீதியானது மட்டுமல்ல என்று சிலர் சொல்லலாம். உண்மைதான்! விடுதலைப் போராட்டத்தில் எழுத்து ரீதியானää கருத்தியல் ரீதியான போராட்டம் என்பது இன்றியமையாதது. அதுவும் போராட்டத்தின் ஒருவடிவம் என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனால்ää செயற்பாட்டு அரசியலில் முஸ்லிம் கட்சித் தலைவர்களும்ää ஏனைய அரசியல்வாதிகளும் மக்களுக்கு அவசியமான அரசியலைச் செய்யாதுää செய்ய வேண்டியதை செயலில் சாதித்துக் காட்டாமல் வாயால் வடை சுடுவதற்கான களமாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
அதுமட்டுமன்றிää; முஸ்லிம் அரசியல்வாதிகளின் பேஸ்புக் எடுபிடிகளாக இருந்து கொண்டுää சொந்த மற்றும் போலி முகநூல் கணக்குகள் ஊடாக அவர்களது ஏவல்களுக்கு விருப்பு வெறுப்புக்களுக்கும் ஏற்றாற்போல் துதிபாடுவதாலும் மாற்றுக் கட்சியினரை தாக்குவதற்காக ஆயுதமாக பயன்படுத்துவதும் நல்லதல்ல.
இதனால் கட்சிகளுக்கு இடையிலும்ää ஒரு கட்சிக்குள்ளும் ஏற்படுகின்ற முரண்பாடுகள்ää பிளவுகளும் அதனூடாக முஸ்லிம் அரசியல் தரங்குறைந்து போவதையும் முஸ்லிம்களுக்குள் இருக்கின்ற கொஞ்சநெஞ்ச ஒற்றுமையையும் இல்லாமல் போவதையும் கருத்திற்கொண்டுää முஸ்லிம் அரசியல்வாதிகள் இதனை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும்.
ஹீரோவாக இருப்பதா அல்லது காமடியனாக இருந்துää ஒட்டுமொத்த முஸ்லிம் அரசியலையும் நகைப்புக்கிடமாக்குவதா என்பதை அரசியல்வாதிகள் தீர்மானித்தாக வேண்டும்.

– ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 24.02.2019)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here