எந்த பொய்ப் பிரச்சாரங்களையும் நம்பவேண்டாம் – கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா

0
120

வாழைச்சேனையில் இஸ்லாமிய நிலையம் அமைத்தல் தொடர்பில் போலி முகநூல் பக்கத்தில் ஆர்ப்பாடத்திற்கு கல்குடா தௌஹீத் ஜமாஅத் அழைப்பு விடுப்பது போன்று செய்தியொன்று பரவியுள்ளது.

இது தவ்ஹீத் ஜமாத்தின் பெயரில் சதிகாரர்களால் செய்யப்பட்ட சதித்திட்டமாகும். நிச்சயமாக அத்தகைய எந்த ஏற்பாட்டையும் தவ்ஹீத் ஜமாத் செய்யவில்லை. அத்தகைய தேவையுமில்லை. தனது பிரச்சினைகளுக்கு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியல் யாப்பின் பிரகாரம் சட்டரீதியான தீர்வுகளை நாடி அதில் வெற்றி பெற்றிருக்கிறது.

இதனை சகித்துக் கொள்ள முடியாத அசத்தியவாதிகளின் திட்டமிட்ட சதி நடவடிக்கையே இது என்பதை அனைத்து கல்குடா வாழ் முஸ்லிம் சகோதரர்களும் இலங்கை வாழ் முஸ்லிம் சகோதரர்களும் வெளிநாடுகளில் வாழும் முஸ்லிம் சகோதரர்களும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறான ஒரு அழைப்பின் மூலம் எம்மை பிரச்சினைக்குள் மாட்டி விடலாம் என இவர்கள் கருதுகின்றனர்.

அல்லாஹுத்தஆலா சதிகாரர்களுக்கு எல்லாம் நிச்சயம் தகுந்த பதிலடியை வழங்குபவன். அதற்குரிய பலாபலனை கூடிய சீக்கிரம் இவ்வுலகிலும் மரணத்துக்குப் பிந்தைய வாழ்விலும் அவர்கள் அனுபவிப்பார்கள் என்பதை உறுதிபட கூற விரும்புகின்றோம்.

“சத்தியம் வந்தது. அசத்தியம் அழிந்தது. அசத்தியம் அழிந்தே தீரும் .”
(அல்குர்ஆன்)

அஷ்ஷெய்க் ஏ.எல். பீர்முஹம்மது (காஸிமி)
பொதுத்தலைவர்,
JDIK

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here