கல்குடா தவ்ஹீத் ஜமாத்தை பற்றி சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களை பரப்பி வரும் போலி முகநூல் பக்க உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

0
172

(ஊடகப்பிரிவு)

கல்குடா தவ்ஹீத் ஜமாத்தை பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் போலியான, முறைகேடான விமர்சனங்களை, பொய்யான தகவல்களை பதிவு செய்து முகநூல் பக்கங்களில் பரப்பி வருபவர்களும் வாழைச்சேனை அல்-ஹிக்மா குர்ஆன் பாடசாலை கட்டிட நிர்மாணப் பணிகளுக்கு இடையூறு விளைவித்து வருபவர்களுமான சிலரை முதற்கட்ட மாக அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் கல்குடா தவ்ஹீத் ஜமாத் (JDIK) இறங்கியுள்ளது.

அந்த வகையில் இன்றைய தினம் வாழைச்சேனை பிரதேசத்தில் தவ்ஹீத் ஜமாஅத் தொடர்பிலும் அதன் உலமாக்கள் தொடர்பிலும் முகநூல் பக்கங்களில் போலியான செய்திகளை பரப்பி வரும் அத்தகைய
சிலருக்கு எதிராக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் இன்று (13) முறைப்பாடு செய்யப்பட்டதுடன் அவர்களது போலி முகவரிகளை கண்டறிய நீதிமன்ற உத்தரவை பெறுவதற்காக சைபர் கிரைம் இலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே இத்தகைய போலி முகநூல் பக்க உரிமையாளர்கள் மிக விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதுடன் அவற்றின் உண்மைத்தன்மை யறியாது பிறருக்கு பகிர்வோரும் அடையாளம் காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் நினைவுபடுத்தவது பொருத்தமானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here