தேசிய கடதாசி கூட்டு தாபணத்தின் தலைவராக முன்னாள் பிரதி அமைச்சர் எஸ்.கணேசமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

0
59

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

விவசாய நீர்ப்பாசன கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலியின் சிபார்சுக்கு அமைய கைத்தொழில் வர்த்தக மற்றும் மீள்குடியேற்ற அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றிஷாட் பதியுத்தீன் அவர்களால் அவரது அமைச்சில் வைத்து இந் நியமணம் வழங்கி வைக்கப்பட்டது.

எஸ்.கணேசமூர்த்தி முன்னாள் பிரதி அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு தேர்தல் தொகுதியின் அமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகளும் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here