எட்டாயிரம் கோடி “கம்பரலிய” பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு.

0
54

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

அரசாங்கத்தின் எட்டாயிரம் கோடி “கம்பரலிய” பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைகள் மக்களிடம் நேற்று (16.03.2019) சனிக்கிழமை மாலை கையளிக்கப்பட்டது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் நடைமுறைப்படுத்தப்பட்ட பதினைந்து வீதிகள் மற்றும் மாஞ்சோலை வடிகானுக்குறிய அனைக்கட்டு என்பன நேற்று சனிக்கிழமை மாலை விவசாய நீர்ப்பாசன கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

ஓட்டமாவடி பிரதேச செயலக உதவி திட்டப்பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ. அஸ்மி, பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.ஜி. அமீர், எம்.பி. ஜௌபர், ஏ.எம். நௌபர், திருமதி ஏ.எல். ஜெஸ்மின், திருமதி பாயிஸா நௌபர் முன்னாள் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் உட்பட பலரும் கலந்து கொண்டனர்
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கம்பரலிய வேலைத்திட்டத்தில் இருநூற்றி என்பத்தைந்து (285) லட்சம் செலவில் இருபத்திநாலு (24) வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச செயலக உதவி திட்டப்பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here