கல்குடா நேசனின் “இளங்கலைஞர் அறிமுகம்”-மலேசியா இராசதுரை சாந்தகலா

Spread the love

FB_IMG_1425247130809அபூ அனு

கல்குடா நேசன் இளங்கவிஞர் அறிமுகம் பகுதியை ஆரம்பித்து, இன்று பரவலாக கவிதை, கட்டுரை, கவிதை என பல்துறைகளில் எழுதி வரும் இளங்கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இளங்கவிஞர்களை அறிமுகம் செய்து வருகின்றது.

இதன் தொடரில், கல்குடா நேசன் இளங்கலைஞர் அறிமுகம் பகுதியில் அறிமுகம் பெறுகிறார் மலேசியாவில் பணி புரிந்து வரும், இலங்கை-சவுக்கடி தளவாயைச் சேர்ந்த இராசதுரை சாந்தகலா அவர்கள்.

இவர் தன்னைப்பற்றி அறிமுகம் செய்கின்ற போது,

எனது  பெயர்  இராசதுரை சாந்தகலா. இலங்கை  சவுக்கடி தளவாயைச் சேர்ந்த நான் தற்போது மலேசியாவில் பணி புரிந்து வருகின்றேன். இலக்கணம் முறையாகப் பயின்றதில்லை என்றாலும், கவிதை எழுதுவதில் அளவிலா ஆர்வங்கொண்ட நான், தற்போது பல பத்திரிக்கைகள், வலைத்தளங்கள், முகநூல் குரூப், ஒலி அலைகள் மூலம் எனது கவிதை வெளி வருகின்றன்.

முதுகளத்தூர் .கம், நண்பர்கள் பக்கம், வார்ப்பு, எழுத்து.கம், தழல்  இணையக்குழுமம் போன்ற வலைத்தளங்களிலும், கவிச்சூரியன், மின் இதழ், தமிழ்த்தேர் மாத இதழ், மாதவம் மாத இதழ், கிழக்கு வாசல் மாத இதழ்,  வளரி மாத இதழ், மின் மினி மாத இதழ், மின் மினி மழலை இதழ், ஒலி அலை, கனடா சி.எம்.ஆர், ஒலி அலை, முல்லைத்தீவு சஞ்ஜிவி ஒலி அலை போன்ற பத்திரிகைகளிலும் என் கவிதைகள் வெளிவருகின்றன்.

அத்துடன், மலேசியாவிலிருந்து வெளி வரும் நேசன் பத்திரிக்கை சிறு கதை எழுதி வருகின்றேன்.

இதை தவிர, டுபாயில் நடந்த கவியரங்கில் அருவி என்னும் தலைப்பில் எனது கவிதை  தேர்வாகியுள்ளது.

பிரேம் குரூப், தடாகம் குரூப், கவிதைச் சங்கமம் குரூப் போன்ற முகநூலில் முக்கிய 25 பேரைக் கொண்ட குரூப் சிங்கிலும், இவைகளைத் தவிர்த்து 21 முகநூல்  குழுமத்திற்கும் கவிதைகளை அனுப்பி வருகின்றேன்.

என தனைப்பற்றி அறிமுகம் செய்கிறார் மலேசியாவில் பணி புரிந்து வரும் இலங்கை-சவுக்கடி தளவாயைச் சேர்ந்த இராசதுரை சாந்தகலா அவர்கள்.

உதவி-றியாஸ் முஹமட் (கட்டார்)

FB_IMG_1425247130809

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*