காஷ்மீர்: ஒரு முற்றுகை தேசம்

Spread the love

kashmir - sinthikkavum.netஅஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி)–கிழக்குப் பல்கலைக் கழகம்

தென்னாசியா இன்று உலகளாவிய இரீதியில் என்றுமில்லாதவாறு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. ஆகையால், அதன் அரசியல், பொருளாதார, சமூகவியல் துறைகள் அதிக முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன. அந்த வகையில் தென்னாசியாவின் மிக நீண்ட கால முரண்பாட்டைக் கொண்ட பிரச்சினையாக காஷ்மீர் பிரச்சினை காணப்படுகிறது.

கடந்த ஐம்பது வருடங்களாக இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீருக்காக யுத்த களத்திலும், பேச்சுவார்த்தை மேசைகளிலும் மோதுண்டு வருகின்றன. இவ்விரு நாடுகளும் காஷ்மீரை தமது எல்லைக்குள் அல்லது தமது கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக கொண்டு வருவதற்கு மோதிக் கொள்கின்றன. அரை நூற்றாண்டைக் கடந்து விட்ட இந்த முரண்பாடும் தமது நிலத்திறகான மக்கள் போராட்டமும் காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச இரீதியாக பிரபல்யமடைய வழி வகுத்துள்ளதென்றால் அது மிகையாகாது.

புவியியல்

வடக்கில் சீனா, கிழக்கில் திபெத், தெற்கில் இந்திய ஹிமாச்சல் மற்றும் பஞ்சாப் மாநிலங்கள், மேற்கில் பாகிஸ்தான் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ள பிரதேசமே ஜம்மு காஷ்மீராகும். இது ‘பூலோக சுவனம்’ என வர்ணிக்கப்படுகிறது.

சனத்தொகை

இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரின் மக்கள் தொகை சுமார் 8 மில்லியன். பாகிஸ்தான் ஆசாத் காஷ்மீரில் சுமார் 9 மில்லியன். அகதிகளாக சுமார் 1.5 மில்லியன் காஷ்மீரிகள் வாழ்கின்றனர். மொத்தமாக சுமார் 14 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.

1,51,360 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் 63 சதவீதம் இந்தியாவின் கீழுள்ளது. 37 சதவீதம் ஆசாத் காஷ்மீராக பாகிஸ்தானுடன் உள்ளது.

வரலாறு

கி.மு. 3ஆம் நூற்றாண்டில் மயூர ஆட்சியின் கீழும், கி.பி.16 – 18ம் நூற்றாண்டு காலப்பகுதியில் முகலாய ஆட்சியின் கீழும், பின்னர் 19ம், 20ம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் ஆளுகையின் கீழும் காஷ்மீர் இருந்துள்ளது. 1846ல் சீக்கிய சாம்ராஜ்ஜியத்தின் கீழ் காஷ்மீர் இருந்தது. சீக்கியர்களை ஆங்கிலேயர்கள் தோற்கடித்த போது, காஷ்மீரை அம்றிஸ்ரார் ஒப்பந்தத்தின் பிரகாரம் ஜம்முவின் மஹாராஜாவான குலாப் சிங்கிற்கு 7.5 மில்லியன் ரூபாய்களுக்கு ஆங்கிலேயர் விற்று விட்டனர். குலாப் சிங் ஜம்முவின் சுதந்திர மன்னர் மஹாராஜாவாக (Princely Ruler) மாறினார்.

குலாப் சிங் 1857ல் இறந்தார். றம்பீர் சிங் மற்றும் பிரதாப் சிங் ஆகிய இரு மஹா ராஜாக்கள் அவரையடுத்து ஆட்சிக்கு வந்தனர். இறுதியாக வந்த ஆட்சியாளரே ஹரிசிங் (1925-1947) ஆவார். இவர்கள் அனைவரும் 80% ஆன, மாநிலத்தின் பெரும்பான்மை சமூகமான முஸ்லிம்களை ஆயுத முனையில் ஆட்சி செய்தனர் என்றே கூற வேண்டும். முஸ்லிம்களோ ஹரிசிங்கிற்கு எதிராக தொடர்ந்து கிளர்ச்சி செய்து வந்தனர். 1931ல் ‘டொக்ரா படுகொலைகள்’ மூலம் முஸ்லிம்களை இவர் அடக்கினார்.

பல்வேறு தேசங்களாக இருந்து வந்த இந்தியா என்னும் உபகண்டம், சுதந்திரம் பெற்ற போது, காஷ்மீரும் ஒரு தேசமாக ஒரு மன்னரின் ஆதிக்கத்திலேயே தான் இருந்தது. இந்து மன்னரான மஹாராஜா ஹரிசிங்  (தற்போது காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருக்கும் கரண் சிங்கின் தந்தையார்) கஷ்மீரை அப்போது ஆட்சி செய்து வந்தார்.
காஷ்மீரின் பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்கள். இதனால் காஷ்மீர், இந்தியாவுடன் இணைவதா, பாகிஸ்தானுடன் இணைவதா என்ற குழப்ப நிலை நீடித்தது.

ஆட்சியாளர் இந்தியாவுடனும், மக்கள் பாகிஸ்தானுடனும் சேர வேண்டுமென எதிர்-எதிர் விருப்புக்கள் தோற்றம் பெற்றதே பிரச்சினையின் அடிப்படையாகும். தனது கொடுங்கோண்மையை மேலும் பலப்படுத்த, மக்களின் விருப்புக்கு எதிராக 1947 அக்டோபர் 26ல் ‘சுயாட்சி’ அடிப்படையில் இந்தியாவுடன் ஹரிசிங் சேர்ந்து கொண்டார். இந்தியப் படையினரை அழைத்து காஷ்மீர் மக்கள் மீதான தனது பிடியை இறுக்கிக் கொண்டார். அடுத்து இந்தியாவும், பாகிஸ்தானும் யுத்தத்தில் இறங்கின.

இந்திய எல்லையிலிருந்து இந்திய இராணுவமும், பாகிஸ்தான் எல்லையிலிருந்து பாகிஸ்தான் இராணுவமும் காஷ்மீருக்குள் ஊடுருவின. கடைசியில், காஷ்மீரின் மூன்றில் ஒரு பகுதியை பாகிஸ்தான் கைப்பற்றிக் கொண்டது. அது சுதந்திர காஷ்மீர் (Azad Kashmir) என்று பாகிஸ்தான் கூறியது. அதனை ஆக்கிரமிப்பு காஷ்மீர் (Pakistan Occupeid Kashmir-POK) என்று இந்தியா கூறியது. பாகிஸ்தான் கைப்பற்றிய பகுதி போக, எஞ்சிய மூன்றில் இரு பங்கு பகுதியை இந்திய இராணுவம் கைப்பற்றிக் கொண்டது.

.நா வில் காஷ்மீர் விவகாரம்

காஷ்மீர் மீதான உரிமைக்கு இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளும் போட்டியிட்டன. 1948 ஜனவரி 1ஆம் தேதி அன்றைய இந்தியப் பிரதமரான ஜவஹர்லால் நேரு காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. சபைக்கு எடுத்துச்சென்றார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 21-4-1948 அன்று தீர்மானம் (எண் 47) நிறைவேறியது. அதன் படி, இரு நாடுகளும் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்ய வேண்டும். அவரவர் ஊடுருவிய பகுதியிலிருந்து இரு நாட்டு இராணுவமும் வெளியேற வேண்டுமென அத்தீர்மானம் அமைந்திருந்தது. ஆனால், இது நிறைவேறவில்லை.
இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களது ஆக்கிரமிப்பை சட்ட பூர்வமானது என்று நிரூபிக்க இயலாததால், காஷ்மீர் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி தீர்வு அவர்களின் கருத்தை அறிந்து முடிவெடுப்பது என்று ஐநா சபையில் ஒப்பந்தமானது.

  1. காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்புகிறார்களா?
    2.  பாகிஸ்தானுடன் இணைய விரும்புகிறார்களா? அல்லது
    3.   தனி நாடாகவே இருக்க வேண்டுமென விரும்புகிறார்களா?

என்ற மூன்று கேள்விகள் அடிப்படையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும், வாக்கெடுப்பின் மூலம் கிடைக்கும் மக்கள் கருத்தை இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மஹாராஜா ஹரிசிங் மன்னரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் ஐ.நா. சபையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம்.

இந்நிலையில், காஷ்மீர் இந்தியாவுடன் முழுமையாக இணைய வேண்டுமென்கிற நேருவின் கருத்துக்கு ஆதரவாக இருந்தார் மாநில முதல்வரான (அப்போது அதற்கு பிரதமர் பதவி எனப் பெயர்) ஷேக் அப்துல்லாஹ். அவருக்கு ஐ.நா.சபையின் தலையீடு பிடிக்கவில்லை. பொது வாக்கெடுப்பிலும் ஆர்வமில்லை. ஆனால், நேரு தலைமையிலான இந்திய அரசாங்கமோ பொது வாக்கெடுப்புக்கு ஒப்புக்கொண்டிருந்தது.

பாகிஸ்தான் தன்னுடைய இராணுவத்தை விலக்கிக் கொண்டால் தான் பொது வாக்கெடுப்பு நடத்தப்படுமென இந்தியா கூறியது. நேருவுடன் ஷேக் அப்துல்லாஹ் நட்பு பாராட்டியதாலும், இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்ததாலும் கஷ்மீர் மக்களால் சுதந்திரமாக வாக்களிக்க முடியாதென பாகிஸ்தான் கூறியது. உலக நாடுகளின் தலையீட்டில் இரு தரப்பு இராணுவத்தையும் வெளியேற்றலாம் என்றும் பாகிஸ்தான் தெரிவித்தது.

ஆனால், கஷ்மீர் பிரச்சினையில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை விரும்பவில்லையெனக்கூறி, பாகிஸ்தானின் யோசனையை நிராகரித்த இந்தியா, பொது வாக்கெடுப்பு என்கிற ஒப்பந்தத்தையும் நிறைவேற்றாமல் கை கழுவியது.

அதே நேரத்தில், காஷ்மீரைத் தன் பக்கம் தக்க வைத்துக் கொள்வதில் இந்தியா முழுமையாகக் கவனம் செலுத்தியது. கவனஞ்செலுத்தியும் வருகிறது.

காஷ்மீர் போராளிக் குழுக்கள்:

1989 வரை ஒழுங்குபடுத்தப்பட்ட ஆயுதக்குழுக்கள் இந்தியாவுக்கெதிராக காஷ்மீரில் தோற்றம் பெறவில்லை. ஆயுதப் போராட்டம் வெடித்தது முதல் இன்று வரை 93,379 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்திய இராணுவப் பாதுகாப்பில் வைத்து கொல்லப்பட்டவர்கள் 6,974 பேர். அழிக்கப்பட்ட, தீ வைக்கப்பட்ட வீடுகள், உட்கட்டமைப்பு வசதிகளின் எண்ணிக்கை 1,05,866. விதவைகள் 22,734. அநாதையாக்கப்பட்ட சிறுவர்கள் 1,07,366 பேர். கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு, மானபங்கத்திற்கு உட்பட்ட பெண்கள் 9,946 பேர். காஷ்மீர் மீடியா சேவை இத்தகைய தகவல்களை நாளாந்தம் வழங்கி வருகிறது.

காஷ்மீர் விவகாரத்தில் தற்போது குறிப்பாக ஆறு தரப்பினர் களத்தில் குதித்துள்ளனர்.

  1. ஆயுதப் போராட்டக்குழுக்கள்
  2.  பிரிவினைவாத சுதந்திர ஹுர்ரியத் தலைவர்கள்
  3. இந்திய சார்பு காஷ்மீர் அரசியல் கட்சிகள்
  4. இந்தியா
  5. பாகிஸ்தான
  6. மனித உரிமை அமைப்புகள்.

“1989 ஆம் ஆண்டு வரை பொறுமையுடன் நிராயுதபாணியாக எமது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சர்வ சன வாக்கெடுப்பை நடத்துமாறு கோரி வந்தோம். தேர்தல்களில் மோசடிகளைச் செய்து, இந்தியா தான் விரும்பியோரை பொம்மை ஆட்சியாளர்களாக எம்மீது திணித்து, தனது ஆக்கிரமிப்பை பலப்படுத்தி வருகிறது. எனவே, ஆயுதப் போராட்டமே வழி” என்கின்றன ஆயுதப் போராட்டக்குழுக்கள்.

இவர்கள் ஏழு இலட்சம் இந்திய இராணுவத்திற்கெஎதிராக சண்டையில் குதித்துள்ளனர்.

அடுத்து  ஹுர்ரியத் சுதந்திரக் கட்சிகளே காஷ்மீர் விவகாரம் மீண்டும் சர்வதேச அரங்கில் முன்னணிக்கு வர பெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

“ஐ.நா. சபையும் முன்னாள் இந்தியப் பிரதமர் நேருவும் எமக்கு வாக்களித்த, எமது எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடிய சுய நிர்ணய உரிமை எமது பிறப்புரிமை. இந்தியா வழங்கும் பொருளாதார பொதிகளுக்காக, கண் துடைப்புகளுக்காக எமது பிறப்புரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம். சுய நிர்ணய உரிமைக்கான சர்வ சன வாக்கெடுப்பு நேர்மையாக நீதியாக இடம் பெறும் வரை ஆயுதமின்றி அமைதியான போராட்டத்தைத் தொடர்வோம். இப்பணியில் இது வரை கொல்லப்பட்டு, ஷஹீதானவர்களின் இலட்சியத்தை முன்னெடுத்துச் செல்வோம்” என்பது ஹுர்ரியத் தலைவர்களின் நிலைப்பாடாகும்.

நிலவரம் அபாயமான கட்டத்தை அடையும் போது மாத்திரம் இந்தியா பேச்சுவார்த்தைக்கு வரும். அந்த இடைவெளியில் தனக்குரிய இலாபங்களை எட்டிக் கொள்ளும். பின்னர் கஷ்மீரிகள் மீது பழைய ஆக்கிரப்புக் கொள்கைகளையே தொடரும் என்பதும் இவர்களது வாதமாகும்.

காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வின்றி இந்தியாவுடன் உறவுகள் வழமைக்கு வரமாட்டாது என்பது பாகிஸ்தானின் நிலைப்பாடு. முன்னாள் பகிஸ்தான் ஜனாதிபதி முஷாரஃப்– முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பேயி தலமையிலான சமாதானப் பேச்சுக்கள் 2004 ஜனவரியில் ஆரம்பித்தன. காஷ்மீர் ஹுர்ரியத் பிரதிநிதிகளை மூன்றாம் தரப்பாக பேச்சுக்களில் பங்கு பெற இந்தியா அனுமதிக்கவில்லை. 2008 நவம்பர் மும்பை தாக்குதலையடுத்து, நிறுத்தப்பட்ட பேச்சுக்கள் இன்னும் உரிய முறையில் துவக்கப்படவில்லை. காஷ்மீரிகள் உண்மையில் பாதிக்கப்பட்டே உள்ளனர். ஐ.நா. சபையும் இந்தியாவும் அவர்களுக்கு வாக்களித்துள்ள நிலையில், அவர்களுடன் பேசி அவர்களுக்குரிய உரிமையைக் கொடுக்க வேண்டும். பிராந்தியத்தில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் காஷ்மீரிகளுக்குரிய சுய நிர்ணய உரிமையை அலைக்கழித்து வருகிறது.

1947 ஆகஸ்ட் 14 இந்திய உப கண்டம் பிரிக்கப்பட்ட தினம். பாகிஸ்தான் – இந்தியா என இரு நாடுகளாகப் பிரிவதற்கான உண்மையான அடிப்படை ஒழுங்கே சர்வ சன வாக்கெடுப்பாகும்.  இதனை ஆழ்ந்து நோக்கும் எவரும் ஓர் உண்மையைப் புரிந்து கொள்வார். மக்களின் விருப்பினடிப்படையிலேயே இப்பிரிவினை ஏற்பட்டது என்பதே அவ்வுண்மை.

சிற்றரசர்கள் (Princely States) எடுக்கும் தீர்மானமானது, நடைமுறையில் பெரும்பான்மை மக்களை வைத்தே மேற்கொள்ளப்பட்டது. ஹைதராபாத் டெக்கான் மக்களுள் பெரும்பான்மையினர் இந்துக்கள். ஆட்சியாளர்கள் முஸ்லிம் நவாப்கள். அவர்கள் இந்தியாவுடன் சேர்ந்து  கொண்டனர்.

இதே நடைமுறை கஷ்மீரிலும் அமல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். 80%  பெரும்பான்மை முஸ்லிம்களின் விருப்பை சிறுபான்மை ஆட்சியாளரான ஒருவர் எவ்வாறு தீர்மானிக்க முடியும்?

மோடி- காஷ்மீர் பிரச்சினை

ராமர் கோவில், பொது சிவில் சட்டம், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து போன்ற சிறுபான்மையினரின் உணர்வு பூர்வமான முக்கியப் பிரச்னைகளை மையப்படுத்தி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்த ஆர்.எஸ்.எஸ்– ங்பரிவார் குழுக்களின் அரசியல் பிரிவான பா.ஜ.க அதி பெரும்பான்மை பெற்று மத்தியில் ஆட்சியை அமைத்துள்ளது. ‘125 கோடி மக்களுக்கும் பிரதமர்’ என்று சூளுரைத்த நரேந்திர மோடி இந்திய நாட்டின்  அதிபட்ச அதிகார செங்கோலை கையிலெடுத்துள்ளார்.

இந்நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதத்தில் என்று சொல்வதைவிட சங்பரிவார் குழுக்களின் நீண்ட நாள் திட்டத்தொகுப்பிலிருந்து ஒவ்வொறு கொள்கையாக வெளியில் எடுத்து செயற்படுத்தும் விதமாக அந்தந்த துறைச் சார்ந்த அமைச்சர்கள் தற்போது, அரசியல் விளையாட்டைத் துவக்கியுள்ளனர்.

இந்த வகையில், ஆக்கிரமிப்புக்குள்ளான காஷ்மீர் மக்கள் தமது சுய நிர்ணய உரிமை மூலம் தமது எதிர்காலத்தை தீர்மானிக்க, இந்தியா சர்வ சன வாக்கெடுப்பை  நடத்த வேண்டுமென ஐ.நா. பாதுகாப்பு சபை 1948 ஆம் ஆண்டு 38, 39, 47 ஆகிய சரத்துகளினூடாக தீர்மானம் வெளியிட்டிருந்தும். 66 வருடங்களாக வாக்குறிதிகள் நிறைவேற்றப்படாமைக்கு நியாயங்களை எங்கே தேடுவது?

இந்த அவலக்குரல் 125 கோடி மக்களுக்கு தலைமையேற்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் எட்ட வேண்டுமென்பதே அனைவரினதும் அவாவாக இருக்கிறது.

 

துணை நின்றவை

  1. அப்துல் மலிக் ஏ. கஷ்மீர் வரலாறும் எதிர்காலமும் (இணைய கட்டுரை)
  2. மார்க்ஸ் பேரா. கஷ்மீர் என்ன நடக்கிறது அங்கே? இந்திய வெளியீடு
  3. ஆலிப் எஸ்.எம் கஷ்மீர் முடிவற்ற முரண்பாடு வெளியீடு அரசியல் விஞ்ஞான சங்கம் SEUSL

7 Comments

  1. ஹரி சிங் சீக்கிய மன்னரா.சிங் என்று பெயரில் வருவதால் அவர் சீக்கியர் என்று அர்த்தமில்லை.அவர் ஒரு இந்து மன்னர்.
    இதிலிருந்தே உங்கள் புலமை தெளிவாகிறது

    • முஸ்லீம்களின் நம்பகதன்மைளை பற்றி ஒரு இணையதள செய்தியின் தமிழ் பதிவு.ஒருநாட்டில் இஸ்லாமியர்கள் 1 சதவிகித எண்ணிக்கையில் இருக்கும்போது அவர்கள் அமைதியான சிறுபான்மையினர் போல் நடிப்பார்கள்.அமெரிக்கா – முஸ்லீம் 1 சதவிகிதம்ஆஸ்த்தேரிலியா – முஸ்லீம் 1.5 சதவிகிதம்கனடா – முஸ்லீம் 1.9 சதவிகிதம்சைனா – முஸ்லீம் 2 சதவிகிதம்இத்தாலி – முஸ்லீம் 1.5 சதவிகிதம்நார்வே – முஸ்லீம் 1.8 சதவிகிதம்இவர்கள் எண்ணிக்கை ஒரு நாட்டில் 2 முதல் 3 சதவிகிதம் என்று உயரும் பொழுது சிறியஅளவில் மதமாற்ற செயலில் ஈடுபடுவார்கள். குறிப்பாக சிறைகைதிகளையும் கலவரங்களளில் ஈடுபடும் ரௌடிகளையும் மற்ற சிறுபான்மை இனத்தவரையம் தூண்டி மதமாற்றம் செய்வார்கள்டென்மார்க் – முஸ்லீம் 2..1 சதவிகிதம்ஜெர்மனி – முஸ்லீம் 3.7 சதவிகிதம்இங்கிலாந்து – முஸ்லீம் 2.7 சதவிகிதம்ஸ்பெயின் – முஸ்லீம் 4 சதவிகிதம்தாய்லாண்டு – முஸ்லீம் 4.6 சதவிகிதம்5 சதவிகித எண்ணிக்கைளை எட்டும் பொழுது தனது எண்ணிக்கைக்கு மீறிய கெடுபிடிகளை முன்வைப்பார்கள். தங்களுக்கு தேவையான அசைவ உணவை அலால்முறைப்படியே தாயாரிக்கவேண்டும் எனகூறி எல்லா அசைவ உணவுதாயாரிக்கும் தொழில்களை ஆக்ரமிப்பார்கள்அவர்களது எண்ணிக்கை 60 சதவிகிதத்தை தாண்டும்போது மேலேசொன்னவை தீவிரமடைந்து மற்றமதத்தினரை கொலை செய்வது நாடுகடத்தவது ஷரியா சட்டத்தின் படி மற்றதத்தவரை வரி செலுத்த கட்டாயப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.அல்பேனியா – முஸ்லீம் 70 சதவிகிதம்மலேசியா – முஸ்லீம் 61 சதவிகிதம்கடார் – முஸ்லீம் 78 சதவிகிதம்சுடான் – முஸ்லீம் 70 சதவிகிதம்அவர்களது எண்ணிக்கை 80 சதவிகிதத்தை தாண்டிவிட்டால் மேலே சொன்ன அராஜகங்களை அரசே முன்நின்று நடத்தும்பங்களாதேசம் – முஸ்லீம் 83 சதவிகிதம்ஈஜிப்ட் – முஸ்லீம் 90 சதவிகிதம்காசா – முஸ்லீம் 98.7 சதவிகிதம்இந்தோநேஷியா- முஸ்லீம் 86.1 சதவிகிதம்ஈரான் – முஸ்லீம் 98 சதவிகிதம்ஈராக் – முஸ்லீம் 97 சதவிகிதம்ஜோர்டான் – முஸ்லீம் 92 சதவிகிதம்மாராகோ – முஸ்லீம் 98.7 சதவிகிதம்பாகிஸ்தான் – முஸ்லீம் 97 சதவிகிதம்பாலஸ்தீன் – முஸ்லீம் 99 சதவிகிதம்சிரியா – முஸ்லீம் 90 சதவிகிதம்டாஜ்கிஸ்தான் – முஸ்லீம் 90 சதவிகிதம்டர்க்கி – முஸ்லீம் 99.8 சதவிகிதம்அவர்களின் எண்ணிக்கை 100 சதவிகிதமாகும் போது ”டருல் இஸ்லாம்” முகலாய அமைதி இல்லம் உருவானதாக சொல்வார்கள். ஏன்எனில் எல்லோரும் இஸ்லாமியர்கள்ஆ

  2. முஸ்லீம்களின் நம்பகதன்மைளை பற்றி ஒரு இணையதள செய்தியின் தமிழ் பதிவு.ஒருநாட்டில் இஸ்லாமியர்கள் 1 சதவிகித எண்ணிக்கையில் இருக்கும்போது அவர்கள் அமைதியான சிறுபான்மையினர் போல் நடிப்பார்கள்.அமெரிக்கா – முஸ்லீம் 1 சதவிகிதம்ஆஸ்த்தேரிலியா – முஸ்லீம் 1.5 சதவிகிதம்கனடா – முஸ்லீம் 1.9 சதவிகிதம்சைனா – முஸ்லீம் 2 சதவிகிதம்இத்தாலி – முஸ்லீம் 1.5 சதவிகிதம்நார்வே – முஸ்லீம் 1.8 சதவிகிதம்இவர்கள் எண்ணிக்கை ஒரு நாட்டில் 2 முதல் 3 சதவிகிதம் என்று உயரும் பொழுது சிறியஅளவில் மதமாற்ற செயலில் ஈடுபடுவார்கள். குறிப்பாக சிறைகைதிகளையும் கலவரங்களளில் ஈடுபடும் ரௌடிகளையும் மற்ற சிறுபான்மை இனத்தவரையம் தூண்டி மதமாற்றம் செய்வார்கள்டென்மார்க் – முஸ்லீம் 2..1 சதவிகிதம்ஜெர்மனி – முஸ்லீம் 3.7 சதவிகிதம்இங்கிலாந்து – முஸ்லீம் 2.7 சதவிகிதம்ஸ்பெயின் – முஸ்லீம் 4 சதவிகிதம்தாய்லாண்டு – முஸ்லீம் 4.6 சதவிகிதம்5 சதவிகித எண்ணிக்கைளை எட்டும் பொழுது தனது எண்ணிக்கைக்கு மீறிய கெடுபிடிகளை முன்வைப்பார்கள். தங்களுக்கு தேவையான அசைவ உணவை அலால்முறைப்படியே தாயாரிக்கவேண்டும் எனகூறி எல்லா அசைவ உணவுதாயாரிக்கும் தொழில்களை ஆக்ரமிப்பார்கள் அவர்களது எண்ணிக்கை 60 சதவிகிதத்தை தாண்டும்போது மேலேசொன்னவை தீவிரமடைந்து மற்றமதத்தினரை கொலை செய்வது நாடுகடத்தவது ஷரியா சட்டத்தின் படி மற்றதத்தவரை வரி செலுத்த கட்டாயப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.அல்பேனியா – முஸ்லீம் 70 சதவிகிதம்மலேசியா – முஸ்லீம் 61 சதவிகிதம்கடார் – முஸ்லீம் 78 சதவிகிதம்சுடான் – முஸ்லீம் 70 சதவிகிதம்அவர்களது எண்ணிக்கை 80 சதவிகிதத்தை தாண்டிவிட்டால் மேலே சொன்ன அராஜகங்களை அரசே முன்நின்று நடத்தும்பங்களாதேசம் – முஸ்லீம் 83 சதவிகிதம்ஈஜிப்ட் – முஸ்லீம் 90 சதவிகிதம்காசா – முஸ்லீம் 98.7 சதவிகிதம்இந்தோநேஷியா- முஸ்லீம் 86.1 சதவிகிதம்ஈரான் – முஸ்லீம் 98 சதவிகிதம்ஈராக் – முஸ்லீம் 97 சதவிகிதம்ஜோர்டான் – முஸ்லீம் 92 சதவிகிதம்மாராகோ – முஸ்லீம் 98.7 சதவிகிதம்பாகிஸ்தான் – முஸ்லீம் 97 சதவிகிதம்பாலஸ்தீன் – முஸ்லீம் 99 சதவிகிதம்சிரியா – முஸ்லீம் 90 சதவிகிதம்டாஜ்கிஸ்தான் – முஸ்லீம் 90 சதவிகிதம்டர்க்கி – முஸ்லீம் 99.8 சதவிகிதம்அவர்களின் எண்ணிக்கை 100 சதவிகிதமாகும் போது ”டருல் இஸ்லாம்” முகலாய அமைதி இல்லம் உருவானதாக சொல்வார்கள். ஏன்எனில் எல்லோரும் இஸ்லாமியர்கள்ஆ

  3. தெருவெங்கும் இந்திய எதிர்ப்பு சுவரொட்டிகள்! இந்து வழிபாட்டிடங்கள் பாழடைந்து கிடக்கின்றன! 2000 வருடம் முன்பு மன்னர் காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள் கூட இடிந்து கவனிப்பாரற்று! இருக்கும் ஒரு சில இந்து கோவில்கள் ராணுவ முகாமிற்குள், கடுமையான பாதுகாப்புடன்! யாரேனும் கோவில்களுக்கு செல்வதை கண்டால் தாக்கபடுவார்கள்! இந்து என்று தெரிந்தாலே மதகுருமார்கள் கண்ணில் பட்டுவிட்டால் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. இவை எல்லாம் எதோ பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் நடப்பவை என்று என்ன வேண்டாம்.
    இந்திய தேசத்தில் காஷ்மீர் மற்றும் ஜம்முவின் சில பகுதிகளில் நிலவும் சூழ்நிலை. இந்திய அரசாங்கம் கோடிகளை வாரி தெளிக்கிறது காஷ்மீரிகளை தாஜா செய்து அமைதியாக வைக்க. தெருவுக்கு ஒரு பிரிவினைவாத இயக்கங்கள் செயல்படுகின்றன. இவர்களுக்கு உண்மையிலேயே பிரிவினை தேவைஇல்லை. இப்படி ஒரு அமைதியற்ற சூழ்நிலையை உருவாக்கி என்றும் இந்திய அரசாங்கத்தை பயத்திலேயே வைத்து அதன் மூலம் வரும் கோடிகளை ருசிக்க. இப்படி அமைதியற்ற சூழ்நிலையை உருவாக்க பாகிஸ்தானும் பணத்தை வாரி தெளிக்கிறது. காஷ்மீரிகள் அனைவருமே செல்வந்தர்கள். தாரளமாக பணம் வருகின்றது. நாம் பார்க்கும் கூடாரங்களில் இருக்கும் மக்கள்,காஷ்மீரிகள் அல்ல. பீகாரிகள். கட்டிட பனி மற்றும் பல கூலி வேலைகளுக்கு காஷ்மீரில் இருப்பவர்கள்.
    இன்றையஜம்மு காஷ்மீர் தலைமுறை மிக மோசமான நிலை நோக்கி செல்கிறது. எந்த பணிக்கும் யாரும் போவதில்லை. ஏராளமான பணம் இரண்டு அரசாங்கங்கள் மூலம் வருகின்றது. பொது இடங்களை நீங்கள் பார்க்க வேண்டும். பணத்தை வாரி இறைத்து சாலைகள் முதல் எல்லா வசதிகளும் இந்திய அரசாங்கம் தருகின்றது. வாரம் மூன்றுமுறை தீடீர் என்று தெருவில் கல்வீச்சு நடைபெறும். காவலர்கள் இராணுவீரர்கள் தாக்கபடுவது வாடிக்கை. கடந்த மாதம் மட்டும் 500 ராணுவவீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த செய்திகள் வெளியே வராமல் ராணுவமே பார்த்து கொள்கிறது. இந்திய அரசாங்கத்தின் உத்தரவு அப்படி. ஏனென்றால் ஒரு சிறு செய்தி என்றால் கூட இந்தியா முழுவதும் மீடியாக்கள் பெரிது படுத்தி விடும். ராணுவம் இப்படி கல் எறிபவர்களுக்கு எதிராக ஒரு துரும்பை கூட வீச முடியாது. உலகநாடுகள் அனைவரும் பார்த்து கொண்டிருப்பதால், அப்பாவி இசுலாமிய குடிமகனை தாக்கிய இந்திய ராணுவம் என்று செய்தி வந்து, அது கலவரத்தில் முடியும். துப்பாக்கி ஏந்தி நிற்கும் ராணுவ வீரனின் முன் கல்லுடன் நின்று முறைத்து ராணுவ வீரரின் மண்டையை உடைத்து விட்டு தெனாவெட்டாக நடந்து செல்லும் பாத்து வயது சிறுவனுக்கு தெரியும் அந்த துப்பாக்கி தன்னை நோக்கி எக்காலத்திலும் திரும்பாது என்று!
    கடந்த வாரம் கடுமையான கல்வீச்சு போராட்டங்கள், எதற்கு என்று தெரியுமா? கோசார் நாத் என்ற குகை கோவில், வெகு சில இந்து வழிபாட்டு தளங்களில் ஒன்று. அதை மூடி விட வேண்டும் எந்த இந்துவும் அங்கு வணங்குவதை அனுமதிக்க முடியாது என்று ஹுரியத் அமைப்பு நடத்திய கல்வீச்சில் ராணுவ வீரர்களும், காவலர்களும் கடுமையாக காயமுற்றனர். சனாப் நதியில் நம்மூரை போலவே மண் அள்ளுகிறார்கள். அனைத்தும் காஷ்மீரிகளின் லாரிகள். பாதிக்கு மேல் அனுமதி இல்லாதவை. ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது. எடுத்தால், அது வேறு விதமான கலவரமாக மாறும்.
    காஷ்மீர் பொதுமக்கள் யாரும் இந்த கலவரங்களிலோ கல்வீச்சுகளிலோ ஈடுபடுவதில்லை. அவர்கள் வணிகர்கள், சுற்றுலா வருபவர்களை பார்த்து மிக சந்தோசம் அடைகிறார்கள். வருமானம் அதோடு ஒரு இயல்பு வாழ்க்கை நடைபெறுவதாக ஒரு மகிழ்ச்சி. ஆனால் பிரிவினைவாதிகளும் அரசிடம் இருந்து எந்த போராட்டங்களையும் தூண்டி விடாமல் இருக்க பணம் வாங்கும் சில செல்வந்தர்கள், பொறுக்கிகள் போன்றோரே காஷ்மீர் ஜம்முவின் சில பகுதிகளில் எப்போதும் பதற்றமாக வைத்திருக்க எண்ணுகிறார்கள். அதன் மூலம் இந்திய அரசிடம் இருந்து பெரும் பணமும், பாகிஸ்தானை மகிழ்ச்சி உற செய்து அதன் மூலமும் லாபம் பெறுகிறார்கள்.
    காஷ்மீர் பிரச்சினை பற்றி எந்த ஒரு நடுநிலை புத்தகங்களும் வெளிவந்ததில்லை. மகா புத்திசாலி என்று தன்னை எண்ணி கொள்ளும் அருந்ததிராய் எழுதிய ஆசாதி ஆசாதி என்ற புத்தகமே ஒரு மிக சிறந்த புத்தகமாக கருதபடுகிறது.
    நீங்கள் புகழ் பெற்ற எழுத்தாளர் ஆக வேண்டுமா? காஷ்மீர் பிரச்சினை குறித்து எழுத போகிறேன் என்று ஒரு அறிக்கை விட்டால் போதும், காஷ்மீர் பிரிவினைவாதிகள் உங்களை வரவேற்று அவர்கள் இடம் அழைத்து சென்று எல்லா வசதிகளுடன் தங்கவைத்து, அவர்களது சிந்தனைகள் அடங்கிய புத்தகங்களை படிக்க தந்து, அவர்களே சிலரை பேட்டி எடுக்க வைத்து அதை அப்படியே வெளியிடுமாக கேட்டுக்கொண்டு வழியனுப்பி வைப்பார்கள். ஜம்மு காஷ்மீரில் சுற்றி அலைந்து மக்களை பார்த்து பேசி, உண்மையான நிலை குறித்து கள ஆய்வு செய்து வரலாற்றை அறிந்து, காஷ்மீர் மக்களின் எதிர்காலத்தை யோசித்து எழுதிய எழுத்தாளர்

  4. காஷ்மீர் மக்களின் எதிர்காலத்தை யோசித்து எழுதிய எழுத்தாளர்கள் யாரும் இல்லை.
    அருந்ததி ராய் எல்லா மேலை நாடுகளாலும் கொண்டாட படுகிறார். காஷ்மீர் பிரிவினை வாதிகளின் பக்கமே நியாயம் உள்ளதாம். இந்தியா காஷ்மீர் பிரச்சினையில் தலையிட கூடாதாம். இவர் தெரு தெருவாக அலைந்து மக்களின் மன நிலை அறிந்தாரா? இப்படி இந்திய பிரிவினை குறித்து எழுத பேச அவருக்கு எத்துனை தையிரியம்? அமெரிக்காவிலோ ஐரோப்பிய தேசத்திலோ பிரிவினை குறித்து பேசி இருந்தால் உரு தெரியாமால் ஆக்கி இருப்பார்கள். ஆனால் பேச்சுரிமை இந்தியனுக்கு ஏராளம்.
    ஒவ்வொருவரும் சொல்வது காஷ்மீர் இசுலாமிய மக்களில் பலர் இந்தியாவுடன் இருக்க விரும்பவில்லை என்று. மொத்தத்தில் இந்திய அரசாங்கத்தை பயமுறுத்தி அது தரும் பணத்திற்காக பிரிவினைவாதம் என்ற ஆயுதத்தை பயன்படுத்துபவர்கள் மொத்தத்தில் ஒரு சதவிகிதம். பாகிஸ்தான் எல்லையில் உள்ள குரேஷி சமவெளி, மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்கள், மேலும் காஷ்மீர் கிராமங்கள் நகரங்கள் அனைத்திலும் இசுலாமியர்கள் பெரும்பான்மை. இங்கு மட்டுமே பிரிவினைவாதம் பேசபடுகிறது. அதிலும் ஷியா பிரிவை சேர்ந்தவர்கள் இந்திய தேசத்துடன் இருக்கவே விரும்புகிறார்கள். சுன்னி பிரிவிலும் ஆதாயத்திற்காக பிரிவினைவாதம் பேசும் வெகு சிலரே உள்ளனர். இங்குதான் முழு அடைப்பு என்பதே பாசாங்கு. அவ்வபொழுது ஏதேனும் ஒரு காரணம் சொல்லி அடைப்பு என்று கூறி கல்வீச பொறுக்கிகளை தயாராக வைப்பார்கள். அனைத்து மீடியாக்களின் கவனம் வேணுமெனில் சாதாரண மக்களுக்கும் மதகுருமார்கள் மூலம் உத்தரவு சென்று விடும், கல்வீசும் கூடத்தின் பின் நின்றாக வேண்டும் என்று. மத ரீதியான உத்தரவு வரும் பொழுது அதை பெற முடியாதவர்களாக விருப்பம் இல்லா விட்டாலும் தெருவில் நின்றாக வேண்டிய கட்டாயம்.இதுவே காஷ்மீரின் நிலை.
    ஜம்மு மற்றும் லடாக் பகுதிகளில் இந்துக்கள் அதிகம். அங்கு பிரிவினைவாதம் பெசபடுவதில்லை. ஆனால் அங்கு பாகிஸ்தானின் ஊடுருவலும் அதை எதிர்ப்பதற்காக இந்திய ர்ரனுவம் எந்த நேரமும் ஊரடங்கு உத்தரவு செய்வதும்தான் பிரச்சினை. இப்பொழுது அனைவரும் ஒரு வாக்கெடுப்பு நடத்தி காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இருக்க விரும்புகிறார்களா பாகிஸ்தானுடன் இருக்க விரும்புகிறார்களா அல்லது தனி நாடாக விரும்புகிறார்களா என்று அறிய வேண்டும் என்கிறார்கள். பாகிஸ்தான் நடத்திய ஊடுருவல்கள் தாக்குதல்களால் காஷ்மீர் மக்கள் எந்த தேசத்துடன் இருந்தாலும் இந்த குண்டு சத்தம் இல்லாமல் இருந்தால் போதும் என்ற நிலையில் உள்ளார்கள். இப்பொழுது பாகிஸ்தானின் ஊடுருவல்களை தடுக்க சர்வதேச அளவில் நடவடிக்கை எடுப்பது சரியா, எங்களது ஒரு மாநிலத்தையே விட்டு விடுகிறோம், தயவு செய்து தாக்குதல் நடத்தாதீர்கள் என்று இந்திய தேசம் மண்டியிடுவது சரியா?
    இந்திய அரசு காஷ்மீர் பிரச்சனையை கௌரவப்பிரச்சனையாக எடுத்துக் கொண்டிருப்பதனால் இங்கு எந்த சிக்கலும் இல்லை என்று உலகுக்கு காட்ட விரும்புவதனால், எல்லையற்ற அளவு பணத்தை இங்கே கொட்டிக்கொண்டிருக்கிறது. இந்தப்பணம் நேரடியாக ராணுவத்திற்கும் பல்வேறு திட்டங்கள் வழியாக காஷ்மீர அரசுக்கும் வந்துகொண்டிருக்கிறது. ராணுவம் அதைக்கொண்டு பல்வேறு கட்டுமானத் திட்டங்களையும், பல்வேறு வளர்ச்சிப்பணிகளையும் செய்துவருகிறது, அரசும் பல்வேறு திட்டப்பணிகளைச் செய்துவருகிறது.
    இப்பணிகள் மிகப்பெரும்பாலும் அனைத்துமே காஷ்மீர் பகுதிக்குத்தான் செய்யப்படுகின்றன. ஜம்மு, லடாக் பகுதிகள் ஒப்புநோக்க கைவிடப்பட்டிருக்கின்றன. காஷ்மீருக்கென வரும் பணம் அரசு குத்தகைதாரர்களுக்கும், அவர்களுடைய துணை குத்தகைதாரர்களுக்கும், அவர்களுடைய ஊழியர்களுக்கும் சென்றுகொண்டிருக்கிறது. இங்குள்ள பெரும் பணக்காரர்கள் ஏறத்தாழ அனைவருமே குத்தகைதாரர்கள்தாம். அவர்களால்தான் இங்குள்ள பொருளியலே இயங்கிக்கொண்டிருக்கிறது.
    குத்தகைதாரர்களுக்கு செல்லும் செல்வத்தில் நேர் பாதியாவது நேரடியாக தீவிரவாதிகளின் கைகளில் சென்று சேர்கிறது. அது அவர்களால் பங்கிட்டு எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆகவே எந்த ஊழல் தரப்பு அரசிடம் இருக்கிறதோ, அதற்கு நேர் மறுபக்கமாகிய ஊழல் தரப்பு தீவிரவாதிகளிடம் இருக்கிறது. இவர்கள் இருவரும் சேர்ந்து எல்லைமீறாத ஒரு பதற்ற நிலையை உண்டாக்கி நீட்டிக்க விரும்புகிறார்கள்.
    காஷ்மீரைப்பொறுத்தவரை இஸ்லாமுக்குள் இருக்கக்கூடிய அடித்தள மக்கள் இன்னும் மத அதிகாரத்தின் பிடியில் தீவிரவாதத்தால் மிரட்டப்பட்டு மிக மோசமான வாழ்க்கை முறையில்தான் இருந்துகொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
    பிரிவினைவாதிகள், அமர்நாத் யாத்ரீகர்கள் மீது ஆண்டுதோறும் தாக்குதல் நடத்துகிறார்கள். காவலர்களும் பயணிகளும் ஆண்டுதோறும் தாக்க படுகிறார்கள். எந்த பத்திரிக்கையிலும் இந்த செய்திகள் வந்தாலும், உடனே புத்திசாலிகளாக தன்னை நினைத்துகொள்ளும் எழுத்தாளர்கள், உலக நாடுகளே பாருங்கள் காஷ்மீர் மக்களுக்கு இந்துக்கள் அங்கு வருவது பிட

  5. எந்த பத்திரிக்கையிலும் இந்த செய்திகள் வந்தாலும், உடனே புத்திசாலிகளாக தன்னை நினைத்துகொள்ளும் எழுத்தாளர்கள், உலக நாடுகளே பாருங்கள் காஷ்மீர் மக்களுக்கு இந்துக்கள் அங்கு வருவது பிடிக்கவில்லை. எதற்காக பிறகு இந்த மாநில மக்களை கட்டாயபடுத்தி இந்தியாவுடன் இருக்கவைக்க வேண்டும். விட்டுவிடுங்கள் அவர்களை தனியாக நிம்மதியாக என்று எழுதுவார்கள்.
    இச்செய்திகள் எதுவும் வெளிவரக்கூடாது என்பது அரசின் தரப்பாக உள்ளது. இங்கு துணை ராணுவப்படை அலுவலகங்களுக்குச் சென்றபோது அனைத்து இடங்களிலும் அவர்களின் பணிகளில் முக்கியமானதாக நான்கை எழுதிவைத்திருந்ததைப் பார்த்தோம். ராணுவத்துக்கு உதவுவது, உள்நாட்டு அமைதியைப் பராமரிப்பது, தேர்தல்களை நடத்துவது, அமர்நாத் யாத்திரையை நடத்துவது.
    அமர்நாத் யாத்திரை கிட்டத்தட்ட ஒரு போர் ஒத்திகையைப்போல சுமார் ஒரு மாதகாலம் நிகழ்ந்து முடிகிறது. முடிந்ததும் ராணுவம் பெருமூச்சு விடுகிறது. ஆனால் கல்வீச்சில் எவரையும் கைது செய்ய முடிவதில்லை. எவரை கைது செய்தாலும் நிரபராதி கைது செய்யப்பட்டார் என்று சொல்லி அதை செய்தியாக தேசிய ஊடகங்கள் அனைத்திலும் பரவ விடுவார்கள் என்றும் அதற்காக அடுத்தகட்ட போராட்டத்தை தொடங்குவார்கள் என்றும் காவலர்கள் சொன்னார்கள். இஸ்லாமிய காவலர் ஒருவர் திரும்ப கல்வீசுவதைத்தவிர ராணுவத்தால் எதையுமே செய்யமுடியாது என்று சிரித்தபடி சொன்னார்.
    இரண்டாம் மற்றும் மூன்றாம் நூற்றாண்டு கோவில்கள் ஏராளமாக உள்ளன காஷ்மீரில். ஆனால் அது அத்தனையும் பாழடைந்து கிடக்கின்றன. அரசாங்கம் காஷ்மீரில் உள்ள ஒரு சதவிகித இந்து மக்களையும் எந்த கோவில்களுக்கும் செல்லவோ கோவில்களை பராமரிக்கவோ விரும்பவில்லை. அங்கு உள்ள பிரிவினைவாதிகள் கடுமையான தாக்குதல்களில் ஈடுபடுவார்கள்.
    ஆனால் காஷ்மீர் மக்களுக்கு இந்திய அரசாங்கத்தின் மீது கடுமையான கோபம் உள்ளது. பிரிவினை வாதிகளை தாஜா பண்ணும் அளவு இறங்கி போய் இருக்கும் அரசு முன்பு காஷ்மீர் மக்களை சரியாக கவனிக்காமல் விட்டு விட்டதாக எண்ணுகிறார்கள். அரசு செய்ய வேண்டியது அரசு பணத்தில் செல்வந்தர்களாக இருக்கும் குத்தகைதாரர்களையும் அவர்கள் மூலம் பணம் பெரும் தீவிரவாத இடைதரகர்ளையும் களை எடுத்து மக்களிடம் ஒரு உண்மையான நம்பிக்கையை உருவாக்க வேண்டும். பிரிவினைவாத தலைவர்களும் மனம் மாற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இது எதையும் செய்ய பாகிஸ்தான் அனுமதிக்காது. காஷ்மீர் பிரச்சினை இருக்கும் வரையே பாகிஸ்தான் அரசியல் வாதிகளும் அரசியல் செய்ய முடியும்.
    இந்தியா இந்துக்களின் தேசம் அல்ல. ஆனால் அது இசுலாமியர்களின் தேசமும் அல்ல. ஒரு மாநிலத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் இந்துக்களின் வழிபாட்டுதளங்கள் இருக்க கூடாது என்று கூறுவதும், தங்கள் மதம் மட்டுமே இருக்க வேண்டும் அங்கு என்று கூறுவதும் என்ன நியாயம்?
    வேறு தேசமாக இருந்தாலும் நம் ரத்தங்கள் பல்லாயிரம் இலங்கையில் இறந்தது தென்னிந்தியா தாண்டி வட இந்தியாவின் ஒரு சதவிகிதம் மக்களுக்கு கூட தெரியாது. ஆனால் ஒரு காஷ்மீர் பிரச்சினை பட்டி தொட்டி எங்கும் பேச படுகிறது. வேறு எந்த பிரச்சினையும் இந்தியாவில் இப்படி சில வினாடிகளில் நாடு எங்கும் பரவாது. ஆனால் ஒரு காஷ்மீரி தாக்கபட்டால் நாடெங்கும் பரவி விடும்.கல் வீச்சில் தினமும் இந்திய அரசும் ராணுவமும் காவல் துறையும் காயம் அடைவதை வெளியிடாமல் இருக்கவே மிகுந்த பணம் செலவு செய்கிறது. வெளி வந்தால் அதற்க்காகவே காத்திருக்கும் சில ஊடகங்கள் காஷ்மீரில் அமைதி இல்லை, பிரச்சினை என்று பெரிது படுத்தி விடும்.
    காஷ்மீரில் உள்ள சிறிய வட்டத்திலுள்ள தீவிரவாத அமைப்புகளுடைய பிரச்சாரம் மட்டும்,காஷ்மீரில் இருந்து கன்யாகுமரிவரை கோடிக்கணக்கான மக்களுக்கு எப்படி எடுத்துச்செல்லப்படுகிறது? யார் எடுத்துச்செல்கிறார்கள்? கண்டிப்பாக சுன்னி இஸ்லாம் மதப்பிரிவும், பிரச்சார அமைப்புகளும், அரசியல் அமைப்புகளும் அதில் பெரும்பங்காற்றுகின்றன.
    ஆனால் அதற்குமேலாக தாங்கள் இடதுசாரிகள் என்று கூறிக்கொள்ளும் இந்திய எதிர்ப்பு கூலி அறிவுஜீவிக்கும்பல் அந்தப்பணியை ஆற்றிக்கொண்டிருக்கிறது. அப்பட்டமான் பொய்ப் பிரச்சாரம், பிழையான தகவல்கள், அவதூறுகள், திரிபுகள் வழியாக நம் சமகால வரலாறு நம் கண்ணெதிரே வேறாக காட்டப்படுகிறது.
    இந்திய அரசாங்கமும் ஒவ்வொரு இந்தியனும் செய்ய வேண்டியது ஒவ்வொரு காஷ்மீரிகளிடமும் நாம் அனைவரும் ஒன்று. உங்கள் நல்வாழ்வுக்கும் பாதுகாப்புக்கும் நாங்கள் பொறுப்பு. காஷ்மீர் இந்தியாவுடன் இருப்பதற்கு நீங்கள் பொறுப்பு என்ற மனம், உணர்வு அடிப்படையிலான ஒரு இணைப்பை உருவாக்குவதே. அந்த காஷ்மீர் மக்களை வைத்தே பிரிவினைவாதத்தை வேரறுத்து, பிரிவினைவாதிகள் மற்றும் கைகூலிகளை விரட்டி ஒன்றுபட்ட சமுதாயம் உருவாக்க வேண்டும். நடைபெறுமா? நடைபெற பாகிஸ்தான் அனுமதிக்குமா? காலம் பதில் கூறும்

Leave a Reply

Your email address will not be published.


*