கல்குடா நேசன் இளங்கலைஞர் அறிமுகம்- ‘கவிக்குயில் சிவரமணி’

Spread the love

Screenshot_2015-03-20-20-46-56-1கல்குடா நேசனுக்காக றியாஸ் முஹமட்

கல்குடா நேசன் இளங்கலைஞர் அறிமுகம் பகுதியை ஆரம்பித்து, இன்று பரவலாக கவிதை, கட்டுரை, கவிதை என பல்துறைகளில் எழுதி வரும் கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பிரதி வாரம் தோறும் இளங்கவிஞர்களை அறிமுகம் செய்து வருகின்றது.

இதன் தொடரில், இவ்வாரம் இளங்கவிஞராக அறிமுகம் பெறுபவர் திருகோணமலையைச் சேர்ந்த ‘கவிக்குயில் சிவரமணி’

இவர் தன்னைப்பற்றி இவ்வாறு அறிமுகம் செய்கிறார்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிக்குயில் சிவரமணி ஆகிய நான் தற்போது  திருகோணமலையில் வசித்து வசிக்கின்றேன். படிக்கும் காலத்திலிருந்தே தமிழ் மீது பற்று அதிகம். அப்போதிருந்தே கவிதை, சிறுகதையென எழுதி வருகின்றேன்.

வாசிப்பு எனக்கு உயிரான விடயம், நிறைய புத்தகங்கள் வாசிப்பேன். கால மாற்றத்தால் நீண்ட காலத்தின் பின் இன்று  முகநூல் வழியாக  எனது எழுத்துப் பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ளேன்.

சிறகு முளைத்து, சிறகடித்த பறவை போல் இணையத்தில் தமிழ்கொண்டு குயிலாக கூவ, நல் கலைஞர்கள் ‘கவிதாயினி’ என வாழ்த்த கவிச்சுடரென பிரகாசிக்கிறேன்.

தமிழ் வளர்க்கும் புனே தமிழ்ச்சங்க நிர்வாகியாக நான். வலைத்தளங்களின் கவி பாடுபவளாகத் திகழ்கின்றேன். அத்தோடு, மின்னிதழ், கனடா தமிழ் லீடர் போன்றவற்றுக்கும், மித்திரன், உதயன் போன்ற பத்திரிகைகளிலும் கவிதை, சிறுகதை மற்றும்  கட்டுரைகளையும் எழுதி வருகின்றேன்.

வரும் மாதமளவில் எனது கவிதைகளைப் புத்தகமாக வெளியிடத் தீர்மானித்துள்ளேன். என் எழுத்து, படிப்பவர் மனதில் பதிய வேண்டும். காதலோ, காதல் வலியோ, மனிதமோ, மாற்றுக்கருத்துக்களோ தேடலோடு இனி தொடரும்.

தமிழ் வாழ என் தனித்துவம் மாறாமல் தமிழோடு உழைப்பேன் என உறுதியான இலட்சியத்தோடு கூறும் சிவரமணி கல்குடா நேசனின் இளங்கலைஞர் பகுதியில் இளங்கவிஞராக அறிமுகமுகமாகிறார்.

அத்தோடு, என்னை அறிமுகப்படுத்தும் ‘கல்குடா நேசன்’ என்ற இணையத்தளத்திற்கு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவிகிறார்.

இவரது இலட்சியம் நிறைவேறவும், இவர் எழுத்துலகில் தொடர்ந்து பயணிக்கவும் கல்குடா நேசன் தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*