கல்குடா நேசனின் இளங்கலைஞர் அறிமுகம்-“தூக்கம் விழித்த இரவுகள்” நூலாசிரியர் முனுசாமி மோகன் கிஷான்

Spread the love

 photo IMG-20150321-WA0000_zpskwt0xugj.jpgகல்குடா நேசனுக்காக முஹம்மது றியாஸ்

கல்குடா நேசன் இளங்கலைஞர் அறிமுகம் பகுதியை ஆரம்பித்து, இன்று பரவலாக கவிதை, கட்டுரை, கவிதை எனப் பல்துறைகளில் எழுதி வரும் கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பிரதி வாரம் தோறும் இளங்கவிஞர்களை அறிமுகம் செய்து வருகின்றது.

இதன் தொடரில், இவ்வாரம் இளங்கவிஞராக அறிமுகம் பெறுபவர் முனுசாமி மோகன் கிஷான்.

இவர் தன்னைப் பற்றி குறிப்பிடுகையில், எனது பெயர் முனுசாமி மோகன் கிஷான் தளவளை மேல் பிரிவு டிக்கோயாவில் பிறந்து, வளர்ந்த நான் தற்போது தொழில் நிமிர்த்தமாக தலைநகர் கொழும்பில் வசித்து வருகிறேன்.

கலை எனது உயிர் மூச்சு போன்றது. படிக்கும் காலத்திலிருந்தே கலைத்துறையில் அதிகளவு ஈடுபாடு கொண்டவன். அதனாலேயே பல முகநூல் குறூப்புகளுக்கும் வீரகேசரி, தினகரன், சூரியகாந்தி போன்ற பத்திரிகைகளுக்கும் கவிதைகளை எழுதி வருகிறேன்.

என் ஆரம்ப காலக் கவிதைகளை நூல் வடிவில் கொண்டு வர வேண்டுமென்ற என் கனவு என் விடா முயற்சியின் காரணமாக 04.10.2014 அன்று நிறைவேறியது. “தூக்கம் விழித்த இரவுகள்” என்ற தலைப்பிலான எனது முதலாவது நூல் வெளியீட்டு விழா ‘டயகம செளமியமூர்த்தி தொண்டமான்” கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

அந்த ஞாபகங்களை உங்களுடன் மீட்டு பார்ப்பதில் இன்று மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் என்கிறார்.

விடியாத இரவுகள் இல்லை,
விடியும் பொழுது இருள் இல்லை
விடிவை நோக்கி நகர்ந்து கொண்டே இருப்பேன்

என் இலக்கிய பாதையில்
தொடர்ந்து  வற்றாத ஒரு நதியாக ஓடிக்கொண்டே இருப்பேன்

என்று சொல்லும் முனுசாமி மோகன் கிஷான் தன்னை அறிமுகப்படுத்திய கல்குடா நேசனுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறார்.

இவரது இலட்சியம் நிறைவேறவும், இவர் எழுத்துலகில் தொடர்ந்து பயணிக்கவும் கல்குடா நேசன் தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

 photo IMG-20150321-WA0000_zpskwt0xugj.jpg
 photo IMG-20150321-WA0006_zpszmh0vhzb.jpg

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*