கல்குடா நேசனின் இளங்கலைஞர் அறிமுகம்-சம்மாந்துறை புகைப்படக்கலைஞன் மொஹமட் பிறோஸ்

Spread the love

 photo unnamed 5_zpsi6clqhsa.jpgமக்கள் நண்பன் – சம்மாந்துறை அன்சார்.

கிழக்கிலங்கையில் பச்சைப் பசேல் நெல் வயல்களையும், காடுகளையும், மலைத் தொடர்களையும் கொண்டிருக்கும் பசுமை நிறைந்த ஊரான சம்மாந்துறை பல்துறை சார்ந்த திறமைமிக்க இளைஞர்களைக் கொண்டு சிறந்து விளங்கும் ஊராகும்.

அந்த வகையில், சம்மாந்துறையிலுள்ள திறமைமிக்க இளம் படைப்பாளிகளை இனங்கண்டு அவர்களை மேலும் மேலும் ஊக்கப்படுத்துவது சம்மாந்துறை வாழ் மக்களின் கடமையாகும். அந்த வகையில் இதற்கு முன்னர் சம்மாந்துறையில் தன் ஓவியங்களால் அனைவரையும் கவர்ந்திருந்த சகோதரர் மொஹமட் றிசாட் அவர்களைப் பற்றிய பதிவை வழங்கியிருந்தோம்.

அதே போல் இன்று  நாம் சம்மாந்துறையிலுள்ள ஒரு சிறந்த புகைப்படக் கலைஞரைப் பற்றியும், அவரது படைப்புக்களைப் பற்றியும் குறிப்பிட இருக்கின்றோம். அவர் தான் மொஹமட் பிறோஸ் என்ற புகைப்படக்கலைஞர்.

மொஹமட் பிறோஸ் அவர்கள் ஒரு சிறந்த புகைப்படக் கலைஞர் என்பதையும் தாண்டி, பல்துறைகளிலும் தன் திறமைகளை வெளிப்படுத்திக் கொண்டிருப்பவராவார், புகைப்படம், ஆவணப்படம் தயாரித்தல், சிறந்த ஒளிப்பதிவாளர், குறும்பட இயக்குனர் மற்றும் எடிட்டர் என்ற பல பரிமானங்களில் சம்மாந்துறையில் வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

இவரது கெமறாவுக்குல் அகப்பட்டு சிறந்த புகைப்படங்களாக வெளிவந்தவைகள் இவரது புகைப்பட ஆற்றலை எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கின்றது என்றால் மிகையாகாது. அழகிய இயற்கை காட்சிகள், பறவைகள், சம்மாந்துறையின் நிகழ்வுகள் என இவரது கெமறாவுக்குல் அகப்பட்டவைகள் ஏராளம்.

இவரது கெமறாவுக்குல் அகப்பட்ட அழகிய புகைப்படங்களை நீங்களும் கண்டுகளியுங்கள்.

இவ்வாறான சிறந்த புகைப்படக் கலைஞரை இனம் கண்டு, அவரது படைப்புக்களை வெளிக்காட்டி, அவரது படைப்புக்களுக்கு கௌரவத்தை கொடுப்பதில் பெருமையே. இது சம்மாந்துறையில் உள்ள திறன்மிக்க இளைஞர்களைஅடயாளம் கண்டு அவர்களை ஊக்கப்படுத்தும் ஒரு பணியாகும்.

அவரது கமேரா கண்ணுக்குள் சிக்கிய காட்சிகள்

 photo unnamed 1_zpszhhax0g3.jpg
 photo unnamed 3_zpsfpvotst1.jpg
 photo unnamed 2_zps6a6ycj9k.jpg
 photo unnamed 6_zpsuh8qcr78.jpg
 photo unnamed 4_zpswwthyjiy.jpg
 photo unnamed 5_zpsi6clqhsa.jpg
 photo unnamed 10_zpsr9jcll7s.jpg
 photo unnamed 8_zpsvc6t6his.jpg
 photo unnamed 7_zpsu1nyugow.jpg
 photo unnamed 12_zpsyxuibahr.jpg
 photo unnamed 9_zpsx6fmnkay.jpg
 photo unnamed 11_zps44qbcxqg.jpg
 photo unnamed 13_zpsrucvsffg.jpg
 photo unnamed 18_zpsoxavghek.jpg
 photo unnamed 14_zpsrfzis3hk.jpg
 photo unnamed 15_zpspr6vj0hc.jpg
 photo unnamed 16_zpsioqb42gw.jpg
 photo unnamed 17_zpsov0krabm.jpg
 photo unnamed 19_zpsqltrsir7.jpg
 photo unnamed_zpsx9knnhwl.jpg

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*