மஞ்சந்தொடுவாய் மண்ணுக்கு பெருமை சோ்த்த மாணவா்களை கௌரவிக்கும் நிகழ்வு

Spread the love

SAM_0033-டீன் பைரூஸ்-

மட்டக்களப்பு  மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலயத்தில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்தல், தளபாடங்கள் கையளிக்கும் நிகழ்வு (06.12.2014 வெள்ளிக்கிழமை) பாடசாலை அதிபர் ஜனாப் MLM. கான் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இடம் பெற்றது. நிகழ்விக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  கௌரவ அல்ஹாஜ் MK. முகம்மது சிப்லி  கலந்து கொண்டார்.

மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலயத்தின் வரலாற்றில் முதல் முறையாக புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை தேடித் கொடுத்த மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வில் பிரதேச கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் MACM பதுர்தீன்( DEO), அல்ஹாஜ் ALM. சரிப்தீன்,  அல்ஹாஜ் IM. இப்றாஹிம் உட்பட கல்வி அதிகாரிகள், அதிபர்கள்,ஆசிரியர்கள், பள்ளிவாயல்கள் நிர்வாக சபை உறுப்பினர்கள், உலமாக்கள், பாடசாலை அபிவிருத்தி சபை உறுப்பினர்கள், பெற்றோர்கள்,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ அல்ஹாஜ் MK முகம்மது சிப்லி அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 50000.00 ரூபா பெறுமதியான தளபாடங்கள் அதிபரிடம் கையளிக்கும் நிகழ்வும் இடம் பெற்றதுடன் வித்தியாலயத்தில் மாணவர்கள் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைய பல்வேறு வழிகளிலும் சேவை செய்த பாடசாலை ஆசிரியை ஜனாபா FM. சமீம் அவர்களும் அதிதிகளால் பாராட்ட பட்டு கௌரவிக்கப்பட்டார்.

கிராம அபிவிருத்தி சங்கம், பாடசாலை அபிவிருத்தி சபை உறுப்பினர்களின் ஏற்பாட்டினில் சுமார் 8000.00 ரூபா பெறுமதியான அலுமாரி ஒன்றும் அன்பளிப்பு செய்யப்பட்டது.SAM_0013 SAM_0033 SAM_0038 SAM_0054 SAM_0076 SAM_0078 SAM_0080

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*