கல்விமான் எஸ்.எச்.எம். ஜெமீல்-சில வரலாற்றுக்குறிப்பு

Spread the love

81அஷ்ரப் ஏ சமத்

சாய்ந்தமருதை பிறப்பிடமாகக் கொண்ட கல்விமான்  எஸ்.எச்.எம். ஜெமீல் அவர்கள் தனது 75 வயதில் இன்று காலை  தெஹிவளையில் காலமானார். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜுஊன்.

ஒரு அறிவு நூலகம் மூடப் பட்டு விட்டது.
ஒரு தொல்பொருள் ஆராய்ச்சி நிலையம் நின்று விட்டது.
ஒரு வரலாற்றுச் சுவடிக்கூடம் முடங்கி விட்டது.
ஒரு காவியம் முற்றுப்புள்ளி பெற்று விட்டது.
ஒரு நல்ல உள்ளம் உறங்கி விட்டது!

இவரைப்போன்ற கல்விமான்கள் இனியும் உருவாக வேண்டும். இவர் கல்முனை பாத்திமாக்கல்லூரி, கொழும்பு சாஹிராக்கல்லூரி பழைய மாணவரவார். ஆங்கில மொழி மூலம் கல்வி கற்ற எஸ்.எச்.எம் ஜெமீல், பேராதானைப் பல்கலைக்கழகத்தில பொருளியல் சிறப்புப்பட்டம் பெற்றார்.  பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதுமாணிப்பட்டம் பெற்ற இவர், யாழ் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டத்தினையும் பெற்றுக் கொண்டார்.  ஜக்கிய இராச்சியம் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் கல்வித்றைசார் மற்றும் பல்கலைக்கழக நிருவாகம் தொடர்பான பயிற்சியையும் பெற்றுக் கொண்டார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் போதானாசிரியர், கல்லூரி ஆசிரியர், அதிபர், ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி அதிபர், கல்வித்திணைக்களத்தில் உயரதிகாரி, பரீட்சைத் திணைக்கள உதவி ஆணையாளர், ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி அதிபர், இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பதிவாளர், முஸ்லீம் சமய கலாசார இராஜங்க அமைச்சின் செயலாளர், கல்வி கலாசார அமைச்சின் மேலதிகச்செயலாளர், அதனைத்தொடர்ந்து, அவ்வமைச்சின் ஆலோசகர் என பல்வேறு உயர் பதவிகளை ஜனாப் எஸ்.எச்.எம் ஜெமீல் வகித்தார். அவர் 2000ஆம் நவம்பர் 20ஆம் திகதி ஓய்வு பெற்றார்.

அரசாங்க சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு சவூதி அரேபியாபின் றியாத் சர்வதேச பாடசாலையில் 4 வருடம் அதிபராகக் கடமையாற்றினார். அதன் பின் கொழும்பு கிரசென்ட் சர்வதேச பாடசாலையிலும் முஸ்லீம் பெண்கள் ஆராய்ச்சி மற்றும் மார்கா ஆய்வு நிறுவனம் என்பவற்றில் ஆலேசரகாப் பணி புரிந்தார்.

இவர் எழுதிய நூல்கள் ஏ.எம்.ஏ அசீஸ் கல்விச்சிந்தனை, சேர் ராசீக் பரீத் அவர்களின் கல்விப்பணி, சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் வரலாறு, கல்விச்சிந்தனைகள் என 27 நூல்கள் வெளியிட்டுள்ளர். இறுதியாக 500 பக்கம் கொண்ட  அவர் பற்றிய கிராமத்து சிறுவனின் பயணம் என்ற நூலை வெளியிட்டுள்ளர்.

3 (3) 50 51 54 55 59 60 61 62 69 70 71 72 74 77 79 80 81 82 84 87 89 90 91 1402987_10201178269678681_1743074934_o

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*