கல்குடா முஸ்லிம்களின் வழக்கொழிந்த வாழ்வியல் கோலங்கள்

Spread the love

DSC06211கல்குடா முஸ்லிம்களின் வாழ்வு, வரலாறு, பழக்க வழக்கங்கள் என்பன குறித்த பல தரவுகளையும் குறிப்புக்களையும் பதிவு செய்து வரும் நோக்கில் கல்குடாநேசன் ஒரு பகுதியை ஆரம்பிக்கவுள்ளது. அதன் தொடர்ச்சியில் கல்குடா முஸ்லிம்களிடம் வழக்கொழிந்து கொண்டுவரும் திருமணம், கத்னா தொடர்பான சில வாழ்வியல் குறிப்புக்களை முன்னாள் கோறளைப்பற்று மேற்கு கலாச்சார உத்தியோகத்தர் ஏ.எல். பீா்முஹம்து MA அவா்களினால் மருதோன்றி இதழ் 03ற்காக மூத்த எழுத்தாளா் எஸ்.எல்.எம். ஹனீபா அவா்களிடமிருந்து கண்ட நோ்காணல்

 

1.திருமண பழக்கவழக்கங்கள்

எமது முன்னோர்களின் திருமண பழக்க வழக்கங்கள் இன்றைய திருமண பழக்க வழக்கங்களுடன் ஒப்பிடும் போது இன்றில்லாத பல பண்பாடுகளையும், வழக்காறுகளையும் கொண்டிருந்தது. இவற்றுள் சிலவற்றை மட்டும் இங்கு காண்போம். 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலப்பகுதிகளில் 50 வீதமான சிறுமியர்களுக்கு 10 வயதுக்கு முன்னரே திருமணம் செய்து வைக்கப்பட்டது. பால்ய வயதின் வளர்  இளம் பருவத்தினராக இவர்கள் இருந்தமையால் தமது அன்றாட வேலைகளைக் கூட செய்யத் தெரியாதவர்களாக இருந்தனர். எனவே, தனது பால்ய வயது பருவ மனைவியின் அன்றாட காரியங்களை தானே செய்து அவளை நன்கு பராமரித்து

வளர்த்தெடுக்கும் பணியையும் கணவன் செய்ய வேண்டியிருந்தது. பெண் குழந்தை பிறந்ததும் அக்குழந்தையின் முறை மாமி தரையிலிடுவதற்கு ‘சாணைக்கூறை’ எனப்படும் சீலைத்துண்டையிட்டு விடுவார். இது இக்குழந்தையே தனது ஆண் மகனின் முறைப் பெண் என்பதை அடையாளப் படுத்துவதாக இருந்தது. இந்தச் சாணப்பிடவையை வைத்தே பெண் குழந்தையின் 10 வது வயதில் திருமணப் பேச்சுவார்த்தை வலுப்பெற்று விடுகின்றது. நானே சாணப்பிடவை போட்டவள். எனது மகனுக்கே இப்பெண்ணை மணமுடித்து வைக்க வேண்டும் என முறை மாமி உரிமை கோற சாணக் கூறை வழிவகுத்தது.Libya-IMG-4037-Preparing-Muslim-Wedding-Contract

இக்காலத்தில் நடைபெற்ற திருமணங்கள் இஸ்லாமிய சம்பிரதாயங்களின் அடிப்படையில் நடக்கவில்லை. திருமணங்களில் பறையடித்தல், மேலதாளங்கள் சுன்னத்தான முறையாகக் கருதப்பட்டன. பெரும்பாலும் வசதிபடைத்தவர்கள் மேலதாளங்களுக்கு ஏற்பாடு செய்து பறை மேளக்களைஞர்களை அழைத்து வந்து அவHகளுக்கு தனியான தங்குமிட வசதிகள்இ சமையல் செய்வதற்கான ஒழுங்குகள் போன்றவற்றைச் செய்து கொடுப்பH. பறை மேளக்களைஞHகளை அழைத்து வந்து மேளமடிக்கும் வழக்கம் குறைவடைந்த போது ~பாவாக்கள்| எனப்படும் பகீர்களை அழைத்து வந்து ‘தாரா’ அடித்து பாடல்களை பாடும் வழக்கம் 1975 ஆண்டுகளின் பின்னர் வழக்கத்திற்கு வந்தது. இப்பிரதேச முஸ்லிம்களின் திருமணங்களில் மருதோன்றி மாற்றுதல் முக்கிய நடைமுறையாக இருந்தது. இதற்காக திருமணத்தின் மூன்று நாட்களுக்கு முன்னரே மருதோன்றி கல்யாணம் நடக்கும். கிழக்கு மாகாணத்தின் சில முஸ்லிம் கிராமங்களில் இப்போதும் மருதோன்றி கல்யாணம் நடைமுறையிலுள்ளது குறிப்பிடத்தக்கது.

பறை மேளக்களைஞர்களும்இ பகீர்களும் மருதோன்றி மாற்றுவதற்குச் செல்லும் பெண்களை அழைத்துச் செல்ல பெரிதும் பயன்படுத்தப்பட்டனர். மருதோன்றி மாற்றச் செல்லும் பெண்கள், குரவையிட்டு தமது அணித் திறமைகளை வெளிப்படுத்துவர்  இடையிடையே பட்டாசுகளும் கொழுத்தப்படும். மருதோன்றிப் பண்பாடு இந்தியாவிலிருந்து இலங்கை முஸ்லிம்களிடம் வந்திருக்க வேண்டும். இந்திய உபகண்டத்தில் வாழும் முஸ்லிம்களிடமும், ஏனையோரிடமும் மருதோன்றி இடும் பண்பாடு இன்று வரை அவதானிக்கப்படுகின்றது. அறபு முஸ்லிம்களிடமிருந்து இப்பண்பாடு வந்திருக்கக் கூடும் எனக் கூறுவோரும் உண்டு. மருதோன்றி மாற்றுதல் என்பது சிலவேளைகளில் மணித்தியாலக் கணக்கில் நீடிப்பதுண்டு. மருதோன்றியுடன் வந்திருக்கும் மாப்பிள்ளை தரப்பினரும் பெண்தரப்பினரும் நின்ற இடத்தில் நின்று கொண்டு சற்றுக் கூட நகராமல் ஆளையாள் அழைத்து நேரத்தை போக்காட்டுவர். மாலை மஃரிப்பின் பின் சென்ற மருதோன்றி இரவு 2/3 மணிக்கு கூட மாற்றப்பட்ட சங்கதிகள் உண்டு.images

ஆரம்பகால முஸ்லிம்கள் ஒழுக்கம், கற்பு நெறி என்ற விடயங்களில் மிகக் கவனமாக நடந்து கொண்டனர். சாணக் கூறையிலேயே திருமணப் பேச்சுவார்த்தை தொடங்கி விட்டாலும் மாப்பிள்ளையும் பெண்ணும் ஒருவர் முகத்தை ஒருவர்  பார்க்காது மறைந்து வாழ்ந்தனர்.

அன்று ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையை அவர்கள் உறுதியாக கடைப்பிடித்தனர். ஆணோ, பெண்ணோ வேறொருவரையும் ஏறெடுத்தும் பார்க்காத கற்பொழுக்கம் அப்போது இருந்தது. கடிதங்கள், தொலைபேசி (செல்லிடத் தொலைபேசி இன்றைய காதலர்களுக்கு மிகப்பரிய வரப்பிரசாதம்) போன்றவற்றின் மூலம்  தற்காலக் காதலர்கள் உரையாடுவது போன்ற எந்த நடவடிக்கையும் அப்போது இருந்ததில்லை. மாப்பிள்ளை வசிக்கும் பகுதிக்குப் பெண்ணோடு பெண் வசிக்கும் பகுதிக்கு மாப்பிள்ளையோ செல்ல மாட்டார்கள். அந்த அளவுக்கு கட்டுப்பாடான வாழ்க்கை அப்போது இருந்தது.

திருமணம் பேசப்பட்டு முடிக்கப்படும் வரை அடிக்கடி ‘செப்பு’ என்ற பெயரால் உணவுப் பண்டங்களை இரு தரப்பினரும் பராமரித்து  தமது அன்பினைப் பகிர்ந்து கொள்வர். விஷேட தினங்களில் ‘செப்பு’க்களை விஷேடமாகப் பரிமாரிக்கொள்வர். கிடைக்கும் இவ்வன்பளிப்புப் பொருட்களை குடும்ப உறவினர்களுக்கிடையில் பகிர்ந்துண்டு மகிழ்ச்சியடைவர். பெண் வீட்டாரிடமிருந்து மாப்பிள்ளை வீட்டாருக்கே அதிகமாக செப்புக்களை பரிமாறும் வழக்கம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அன்று எமது திருமண நடை முறைகளிலோ, பிற நடவடிக்கைகளிலோ இஸ்லாம் பேணப்படவில்லை என்பது உண்மையே! நபி (ஸல்) அவர்கள், மீலாத் விழாக் கொண்டாட்டத்தில் மட்டுமே பேசப்பட்டார்கள். பிற வாழ்க்கை நடைமுறைகளில் அவரது வழி முறை ஞாபகப்படுத்தப்பட வில்லை.

ஆயினும் அன்றைய அவர்களது நம்பிக்கைப் பிரகாரம் அல்லாஹ், அவ்லியா, சத்தியம் என்பனவற்றுக்கு அதிகம் பயப்பட்டவர்களாக இருந்தார்கள். இவற்றை மீறி நடப்பவர“கள் ஊரால் கழிக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டார்கள். அத்தகையதொரு வித்தியாசமான பக்தி அன்று அவர்களிடமிருந்தது.

திருமண வீடுகளில் சோடனையுடன் கூடிய அழகான ஒரு பந்தல் போட்டிருப்பார்கள். நெருப்பு வாகையில் போடப்பட்டிருக்கும் அப்பந்தல் அழகிய சோடனைத்தாள்கள் கொண்டு சோடிக்கப்பட்டிருக்கும். பந்தலின் மத்தியில் மாப்பிள்ளை அமர்வதற்கு ஒதுக்கப்பட்ட மரத்தில் இளனிக்குலை கட்டப்பட்டிருக்கும், மாப்பிள்ளை அமரும் அம்மரத்தை பட்டுச்சேலையில் கொசுறி இருப்பார்கள். நிறைவான வாழ்வு வேண்டி நிற்கும் உருவகமாக அம்மண்டபம் காட்சியளிக்கும். திருமண பந்தத்தில் இணையும் மணப்பெண்ணுக்கு அணிவிக்கப்படும் ஆபரணங்கள் அதிகமானவை. காலில் கரணை, கால் காப்பு, தண்டை, காதுப்பூ-வாளி என்பன அணியப்பட்டிருக்கும். கைகளில் முகப்பணிக்காப்பு, அடுக்குக்காப்பு அணிந்திருப்பார்கள். ஒரு கையில் அணிந்திருக்கும் 02 காப்பும் ½ kg  இருக்கும். கையின் ஐந்து விரலுக்கும் மோதிரம் அணிந்திருப்பாள். மேல் கையில் தாவத்துக் கொடி போட்டிருப்பாள். கழுத்தில் கீரி மணி, ஆலங்கா மணிக்கோவை என்பன கிடக்கும். இந்த நகைகள் எதைப்பற்றியும் புதிய தலைமுறைக்குத் தெரியாது. அவைகள் எப்படி இருக்கும் என்று படம் போட்டுத்தான் விளக்க வேண்டும். திருமண ஆடைகளை எடுத்துக் கொண்டால் வசதியுள்ளவர்கள் மோகனிப்பட்டுச் சோமன், பண்ரூட்டிப்பட்டுச் சோமன் போன்ற ஆடைகளை பயன்படுத்தினர். அன்று 100 ரூபாய்க்கு வாங்கப்பட்ட இவ்வாடைகள் இன்று 5 லட்சம் ரூபாயாவது பெறும்.

 

அன்று மாப்பிள்ளை கைக்கூலி வாங்குவது பொதுவான பழக்கமாக இருந்தது. அதிகபட்சம் 101/= வழங்கப்பட்டது. அதற்கு அன்று பத்துப்பவுன் நகை வாங்கலாம். ஒரு பவுன் தங்கம் அப்போது பத்து ரூபாய்தான். திருமணத்தின் பல நிகழ்வூகளுக்கு அழைப்பு விடுக்கும் போது ‘வட்டா’ வைத்து அழைக்கும் வழக்கம் இருந்தது. இன்று நாம் “உங்களை வட்டாவா வைச்சு அழைக்கனும்?” எனக் கூறும் அளவுக்கு வழக்கொழிந்து போய்விட்டது. திருமணத்திற்கு, மருதோன்றிக்கு, பந்தல் போடுவதற்கு என்று எல்லாவற்றுக்கும் வட்டாவில் வெற்றிலை பாக்கு வைத்து சொந்தக்கார்ரகளையூம் மற்றவர்களையும் அழைப்பார்கள். மேளம் அடிப்பதற்கு பறை மேளக்களைஞனும், பந்தலில் வெள்ளை வைக்க சலவைத் தொழிலாளியும் கூட வட்டா வைத்துத்தான் அழைக்கப் படுவார்கள். கண்ணியமான முறையில் அழைப்பதற்கான அடையாளமாக வட்டா வைத்தல் கருதப்பட்டது. சில இடங்களில் மாப்பிள்ளை கூட்டிச்செல்லும் போது மாப்பிள்ளை வீட்டிலிருந்து பெண் வீடு வரை வெள்ள விரிக்கப்படும்;. சலவைத் தொழிலாளியே அதனைச் செய்வான். பொதுவாக எல்லோருடைய ஆடைகளையும் சலவைத்தொழிலாளியே துவைத்து வந்தான். தற்போது போன்று வீடுகளில் ஆடை துவைக்கும் வழக்கம் அப்போது இப்பிரதேச முஸ்லிம்களிடம் இருக்கவில்லை. இந்து சமூகத்தின் தாழ்த்தப்பட்ட சாதிகளே முஸ்லிம்களுக்கு இப்பணியைச் செய்து வந்தனர். பொதுவாக எல்லா ஆடைகளையும் சலவைத் தொழில் புரியும் ஆண்/பெண் துவைப்பார்கள். வருடக்கூலியாக 05 மரக்கால் நெல் அவர்களுக்குக் கொடுக்கப்படும்.

திருமண விருந்துபசாரங்களைப் பொறுத்தவரை எல்லா திருமண வீடுகளிலும் சாப்பாடு வழங்கப்படும் வழக்கம் குறுகிய அளவிலேயே  இருந்தது. ஆடு, மாடு, நாட்டுக்கோழி மூன்றும் சமைக்கப்படுவதுண்டு. லைப்பை, மோதினுக்கு கோழி. அவHகள் மாட்டிறைச்சி சாப்பிட மாட்டார்கள். மரைக்கார்மாரும்இ லைப்பை, மோதினும் சாப்பாட்டிற்குள் கை வைக்காமல் யாரும் கை வைப்பதில்லை. அவர்கள் வருவதற்கு தாமதமானால் அவர்கள் வரும்வரை உண்ணாமல் காத்திருக்க வேண்டும். பொதுவாக சாப்பாடு என்றால் மரவெள்ளிக் கிழங்குடன் மாட்டிறைச்சிக்கறி, ஒரு துணைக்கறி, (சுரக்காய்/கத்தரிக்காய்) ஒரு புளியாணம், இவைகள் தான் அன்றைய கல்யாணச் சாப்பாடு. கல்யான வீட்டுச்சாப்பாடு என்றால்  மிக ருசியாகவே இருக்கும். (அந்த ருசி இன்றைய கல்யாண சாப்பாடுகளில் இல்லை என்றுதான் கூறலாம்) சாப்பிட்டு முடிந்ததும் மௌலூது ஓதப்படும். பொதுவாக எல்லாக் கல்யாண வீடுகளிலும் மௌலூது ஓதுவது வழக்கமாக இருந்தது. திருமண தினத்தன்று ஏழு பொரியலோடு மாப்பிள்ளைச் சோறு அனுப்ப வேண்டும். ஒரு பொரியல் தப்பித்தவறிக் குறைந்தாலும் பிரச்சினையாகிவிடும்.

இப்பிரதேச கிராமமொன்றில் சுமார் ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்னர்  மாப்பிள்ளைச் சோறில் ஒரு பொரியல் குறைந்ததால் மாப்பிள்ளை வீட்டுக்கார்ர்  பெரும் பிரச்சினையையே உண்டுபன்னி விட்டனர். திருமணம் குலைந்துவிடும் அளவுக்கு நிலைமை சென்று விட்டது. பெண்வீட்டுக்கார்ர் மாப்பிள்ளை வீட்டுக்கு வந்து மன்னிப்புக் கேட்டும் பிரச்சினை தீரவில்லை. கடைசியில் பள்ளி மரைக்கார்மார்கள், ஊர்ப்பிரமுகர்கள் எல்லாம் சேர்ந்து பேசி மாப்பிள்ளை வீட்டாரிடம் மன்னிப்புக் கேட்ட பின்னரே

அஸருக்க  செல்ல வேண்டிய மாப்பிள்ளை இரவு நடுநிசியில் கொண்டு சேர்க்கப்பட்ட சம்பவம் ஞாபகத்திற்கு வருகின்றது. அது மட்டுமல்லாது திருமணம் முடித்து ஏழு நாளைக்கு மாப்பிள்ளை வீட்டுக்கு காலைச்சாப்பாடு அனுப்ப வேண்டும். பகல் சாப்பாட்டிற்கு மாப்பிள்ளை வீட்டுக்கார்ர்களை பெண் வீட்டுக்கார்ர்கள் சென்று அழைக்க வேண்டும்.

3ம் நாள்/ 7ம் நாட்களின் பின்னர் தான் பெண், மாப்பிள்ளைக்கு தண்ணீர் வார்க்கப்படும். அது வரைக்கும் அவர்கள் குளிக்க மாட்டார்கள். தொழுகையை நிறைவேற்றுவது, அதற்காக கடமைக் குளிப்பை நிறைவேற்றுவது என்பதெல்லாம் அப்போது பெரும்பாலும் கிடையாது. தண்ணீர் வார்ப்பதற்கு மாப்பிள்ளைக்கு பெண் வீட்டாரும், பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டாரும் புதிய ஆடை எடுப்பர். பணக்கார்ர்கள் பண்ரூட்டிச்சாரன், மோகனிப்பட்டுப் புடவை என்பன எடுப்பார்கள். இவற்றில் மாப்பிள்ளை பெண்ணின் விருப்பு வெறுப்பு பார்க்கப்படமாட்டாது. வாங்கிக் கொடுப்பதை உடுப்பதுதான்.

திருமணம் நடந்து மாப்பிள்ளை பெண்வீட்டுக்கு அழைத்துச் செல்லப்படும் வேளை, மாப்பிள்ளை வீட்டுக்கார்ர்கள் பெண் வீட்டுக்கட்டிலில் எத்தனை மாப்பிள்ளை பாய் போடப்பட்டிருக்கின்றது என கணக்கெடுப்பர். மாப்பிள்ளைக்கென்று இழைக்கப்பட்ட மாப்பிள்ளைப்பாய் விரிக்கப்பட்டிருக்க வேண்டும். குறைந்தால் மாப்பிள்ளை வீட்டுக்கார்ர்கள் குழம்பி விடுவார்கள். பொலன்னறுவை உதவிக்கல்விப் பணிப்பாளர் ளும். M.P. மொஹிதீன் அவர்கள் எழுதிய கட்டுரையொன்றில் 1980 களில் காத்தான்குடியில் மாப்பிள்ளைப் பாய் ஒன்று குறைந்ததற்காக திருமணம் ரத்துச் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். எமது அயல் ஊர்களிலும் இப்பழக்கம் இருந்துள்ளது என்பதை இது காட்டுகின்றது. பொதுவாக திருமணத்தில் தாலி என்பது முக்கிய இடத்தை வகித்தது. நிக்காஹ் ஒப்பந்தத்தை விட தாலி கட்டுவதே மதிப்பு வாய்ந்ததாகக் கருதப்பட்டது. தாலி கட்டப்படாத வரை திருமணம் நடைபெறவில்லை என்று கருதப்பட்டது. மாப்பிள்ளைக்கு தங்க மோதிரம் அணிவிப்பது பர்ளு ஐனாக இருந்தது. கடும் இருட்டான இரவு வேளையில் கூட மாப்பிள்ளை ஒரு கறுப்பு கூலிங் கிளாஸ் அணிந்து கொள்வார். மாப்பிள்ளையின் காலை மச்சினன் தேங்காய்ப் பாலால் கழுவி விடுவார்.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் மணவாழ்க்கையில் முதலிரவு பற்றிய எந்த அறிவும் இவர்களுக்கு இருக்க வில்லை. இன்று ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக்காட்டுவது போல் அப்போது இருக்கவில்லை. பெரும்பாலும் திருமணம் செய்பவர்கள். 10 – 15 வயதுக்கார்ர்களாக இருப்பார்கள். தாம்பத்யம் பற்றிய எதுவுமே அவர்களுக்குத் தெரியாது. எனவே முதலிரவுக்கு எந்தப் பெண்ணும் தனியே விடப்படுவதில்லை. பெண்ணின் மூத்தம்மா கூட இருப்பார்  எல்லாவற்றையும் சொல்லிக் கொடுப்பார். மணப்பெண்ணைத் தேற்றுவதற்காக பெண், மாப்பிள்ளை தூங்கும் இடத்திற்கு சமீபமாக இவர் தூங்குவார். இவ்வாறு மூத்தம்மா பேத்திக்கு புத்தி சொல்லி, ஆறுதல் சொல்லி, தேற்றும் வழக்கம் அப்போதிருந்தது. முதலிரவு நடந்ததா? இல்லையா? என்பதை அந்த மூதாட்டி மூலம் உறவினர் அறிந்து கொள்வர்.

திருமணம் முடித்த மாப்பிள்ளை சிறிது காலம் கழித்து தொழிலுக்குச் செல்வதற்காக ஏற்பாடுகளைச் செய்வார். அன்று பெரும்பாலும் விவசாயத் தொழில் சார்ந்த கூலித் தொழிலாளிகளே அதிகம். அரச உத்தியோகம், வியாபாரம் என்பவற்றில் இப்பிரதேசத்து மக்கள் அதிக அக்கரை காட்டவில்லை. விரல்விட்டு எண்ணக் கூடிய அரச உத்தியோகத்தர்கள் இருந்தாரிகள், பெரும்பாலும் வியாபாரிகள் காத்தான்குடியைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். 1985 – 1990 கால வன்செயல்களில் விவாசாயத்துறை வீழ்ச்சியடைந்ததன் பின்னரே கல்வித் துறையிலும், வியாபாரத்துறைகளிலும் அக்கரை செலுத்தப்பட்டது. அதன் பின்னரே பல அரச உத்தியோகத்தர்கள், வியாபாரிகள் எம் பிரதேசத்தில் உருவாகினர்.

அன்று பெரும்பாலும் விவசாயக் கூலிகள் தமன்கடுவ, ஹிங்குராக்கொட போன்ற பிரதேசங்களுக்குச் சென்றே தொழில் தேடினர். திருமணம் முடிந்து ஏழாவது நாளில் அல்லது அதற்குப்பின்னர் மாப்பிள்ளை தொழிலுக்கு வெளிக்கிடுவார். அப்போது அவருக்கு ஏழு உமலில் தின்பண்டங்கள் தயார் செய்து பெண் வீட்டார் கொடுப்பர். தேன்குழல், சோவி, முறுக்கு, அச்சுப்பணியாரம், சீனிமா, சர்க்கரைப்பணியாரம், எண்ணெய்ப் பணியாரம்  பல நொறுக்குத்தீனிகள் அவற்றில் நிரப்பப்பட்டிருக்கும். நொறுக்குத் தீனிகளை காவுல கொண்டு சென்று  உறவினர்கள் கொடுத்த சங்கதிகள் பல இன்னும் ஞாபகத்திலிருக்கின்றன. புது மாப்பிள்ளை செல்லும் கூட்டத்தில் இடம் பிடிக்க தொழிலாளிகள் நான் முந்தி நீ முந்தி என்று நிற்பர். அன்று தூரத்துப் பயணம் ரயிலில் தான் அதிகம் போவார்கள். தொழிலுக்குச் செல்லும் மாப்பிள்ளையை ரயில்வே ஸ்டேஷன் வரை சென்று குடும்பத்தார்கள் வழியனுப்பி வைப்பார்கள்.  தொழிலுக்குச் சென்ற மாப்பிள்ளை திரும்பி வர மாதக்கணக்குச் செல்லும். சில சந்தர்ப்பங்களில் 3 மாதங்கள் கழித்துக் கூட திரும்பி வருவார். அன்று தொலைபேசி, தொடர்பாடல் வசதிகள் பொரிதும் இல்லை என்பதால் மாப்பிள்ளை வரும் வரை ஒரு தகவலும் தெரியாமல் பெண் இருக்க வேண்டியதாயிற்று.

வழக்கொழிந்த வாழ்வியல் கோலங்கள் தொடரும்…..

நன்றி  : இதழ் – 03

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*