கல்குடா தெளஹீத் ஜமாஅத்தின் விஷேட ரமழான் காலப்பயிற்சி நெறி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

DWS_2304-min-minஅபூ அம்றா
ரமழான் காலத்தில் க.பொ.த.சாத தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் அறபுக்கல்லூரி மாணவர்களுக்கு கல்குடா தவ்ஹீத் ஜமாஅத் விஷேட ரமழான் கருத்தரங்கொன்றை கடந்த வாரம் நடாத்தியிருந்தது.
இந்நிகழ்வில், முழுமையாகக்கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கும் நிகழ்வு தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் ஜமாஅத்தின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர் முஹம்மது காசிமி தலைமையில் நடைபெற்றது.
கடந்த 4.7.2015ம்திகதி இடம்பெற்ற நிகழ்வில் ஜமாஅத்தின் நிருவாகத்தலைவர் அஷ்ஷெய்க் ஏ.ஹபீப் காசிமி, மதீனா பல்கலைக்கழகப் பட்டதாரி  மாணவர் ஏ.அன்வர் ஸலபி, ஜமாஅத்தின் தஃவா இணைப்பாளர் மௌலவி எஸ்.எச்.அஸ்ரப் சிறாஜி, கல்குடா தவ்ஹீத் உலமாக்கள் ஒன்றியத்தின் தலைவர் மௌலவி ஏ.எல் முஸ்தபா ஸலாமி, தாருஸ்ஸலாம் கலாபீடத்தின் விரிவுரையாளர்  மௌலவி இஸட்.அலாவுதீன் ஸலபி உள்ளிட்ட ஜமாஅத்தின் பிரமுகர்கள், உறுப்பினர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
பயிற்சிநெறியின் இறுதியில் இடம்பெற்ற போட்டிப்பரீட்சையில் பாடசாலை மட்டத்தில் முதலாமிடத்தை செம்மண்னோடையைச் சேர்ந்த எப்.எம்.அசீம், இரண்டாமிடத்தை மாவடிச்சேனையைச்சேர்ந்த மாணவன் எச்.எம்.ஆதிப், ஓட்டமாவடியில் வசிக்கும் எம்.எம்.பைசான் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
மேற்படி மூவரும் ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்பவர்கள். அறபுக்கல்லூரி மட்டத்தில் நிந்தவூர் காசிபதுல் உலூம் அறபுக்கல்லூரி மாணவர் ஏ.இல்முத்தீன் முதலாமிடத்தையும் தாருஸ்ஸலாம் அறபுக்கல்லூரி மாணவர்களான ஐ. பைசான் முஹ்தீன், இரண்டாமிடத்தினையும், எஸ்.சியாம் மூன்றாமிடத்தினையும் பெற்று பரில்களையும் சான்றிதழ்களையும் தனதாக்கிக் கொண்டனர். அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள்.
இந்நிகழ்வையொட்டி மாணவர்களுக்கும் பிரமுகர்களுக்குமான இப்தார் நிகழ்வும் அன்றைய தினம் தாருஸ்ஸலாத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், மேற்படி கருத்தரங்கிற்கான முழு நிதி அனுசரணையை பறகஹதெனிய ஜமாஅத் அன்சாரிஸ்சுன்னதில் முஹம்மதிய்யா நிறுவனம் வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
DWS_2247-min-min DWS_2299-min-min DWS_2302-min-min DWS_2304-min-min DWS_2310-min-min DWS_2334-min-min

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>