கல்குடா தெளஹீத் ஜமாஅத்தின் ரமழான் காலப்பயிற்சி நெறி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 

Spread the love
3-min-minஅபூ அம்றா
ரமழான் காலப்பயிற்சி நெறியை முடித்துக்கொண்டவர்களுக்கான சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கும் நிகழ்வு கடந்த 4ம்திகதி சனிக்கிழமை மீராவோடை அல்ஹிதாயா கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
  1. பயிற்சி நெறியின் இணைப்பாளர் மௌலவி முகைதீன் ஹசன் ஆசிரியரின் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில், பொதுத்தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர் முஹம்மது காசிமி, செயலாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.அறபாத் ஸஹ்வி, தாருஸ்ஸலாம் கலாபீட விரிவுரையாளர் மௌலவி ஏ.எச். இர்பான் நஹ்ஜி, கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் நிருவாக உத்தியோகத்தர் மௌலவி எம்.டி.அப்துர்ரஹ்மான் அஸ்ஹரி, பாடசாலையின் ஆசிரியர் எஸ்.ஐ.ரமழான் சிறாஜி உள்ளிட்ட அல் ஹிதாயா பாடசாலையின் அதிபர் ஏ.எல்.அபுல்ஹஸன், பிரதி அதிபர்  ஏ.அன்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் ஏற்பாட்டில் பறகஹதெனிய ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யாவின் நிதி அனுசரணையில் இடம்பெற்ற ஒரு வார கால மகளிருக்கான பயிற்சி நெறியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் எழுத்துப்பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளைப்பெற்றவர்களுக்கான பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
நடாத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் மீராவோடை அல் ஹிதாயா வித்தியாலயத்தில் ஆண்டு 10 இல் கல்வி கற்கும் மாணவிகளான  எம் .ஆர் சியானா, யு.எல்.ரிஸ்லா, எம்.ஹஸ்மத் மபாஸா ஆகியோர் முறையே முதலாம், இரண்டாம், மூன்றாம் நிலைகளில் அதி கூடிய புள்ளிகளைப்பெற்று பணப்பரிசில்களையும் சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டனர்.
இக்கருத்தரங்கின் மூலம் பரிசில்கள், சான்றிதழ்களை விட அல்லாஹ்வின் திருப்பொருத்தம், வழிகாட்டல் கிடைத்தால் அதுவோ நீங்கள் அடைந்து கொள்ளும் மகத்தான வெற்றியென்று இங்கு உரையாற்றிய ஜம்இய்யாவின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர் முஹம்மது காசிமி அவர்கள் தனதுரையில் குறிப்பிட்டார்.
1-min-min 2-min-min 3-min-min 4-min-min 5-min-min 6-min-min 7-min-min 8-min-min

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*