தாருஸ்ஸலாம் புதிய மாணவர் நேர்முகத்தேர்வு

Spread the love

Dharussaalamghghgமாவடிச்சேனை செய்தியாளர்

கொழும்பு வீதி, தியாவட்டவானில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம்  அறபுக்கலாபீடத்திற்கு  2015 கல்வி ஆண்டிற்கான புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் 14.12.2014 ம்திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு  கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
ஏற்கனவே கலாபீடத்தில் சேர்ந்து கொள்வதற்காக விண்ணப்பித்தவர்களும், விண்ணப்பிக்கத்தவறியவர்களும் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம், கடைசியாகப் பெற்றுக்கொண்ட மாணவர் தேர்ச்சி அறிக்கை, வேறு தகைமைகளை உறுதிப்படுத்தும் சான்றிதழ் சகிதம் குறித்த திகதியில் நேர்முகப்பரீட்சைக்குத் தோற்ற முடியுமென கல்லூரியின் அதிபர் எம். இஸ்மாயில் மதனி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஹிப்ளு மற்றும் கிதாபு மாணவர்களுக்கு மேற்படி நேர்முகப்பரீட்சைகள் நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.Dharussaalamghghg

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*