மட்டு.மாவட்ட வேட்பாளர்கள் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவைச் சந்திப்பு

Spread the love
download-min (1)அபூ அம்றா
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசியில் போட்டியிடும் வேட்பாளர்களான கணக்கறிஞர் எச்.எம்.எம்.ரியாழ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைவர் பொறியியலாளர் எம்.எம். அப்துர்ரஹ்மான் மற்றும் அதன் மற்றுமொரு வேட்பாளரான கவிஞர் எஸ்.நழீம் ஆகியோர் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யா நிறுவனத்தின் பிரதிநிதிகளை அதன் தலைமையகமான தாருஸ்ஸலாமில் கடந்த சனிக்கிழமை (1.8.2015) சந்தித்துப்பேசினர்.
ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யா நிறுவனத்தின் கீழ் செயற்படும் சுமார் 10 பள்ளிவாயல்களின் நிருவாகிகள் உட்பட ஜம்இய்யா நிருவாகிகளும் மேற்படி சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இரு வேட்பாளர்களும் தங்களது தேர்தல் கொள்கையினை முன் வைத்துப்பேசியதுடன், எதிர்கால அரசியல் முன்னெடுப்புக்களையும் தெளிவுபடுத்தினர்.
‘அரசியல் உரிமை என்பது அவரவர் விருப்பு சார்ந்தது. தான் விரும்பிய வேட்பாளரை அவர்கள் ஆதரிப்பதில் ஜம்இய்யா யாருக்கும் கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை.வேட்பாளர்கள் ஜம்இய்யாவைச் சந்திப்பதற்கு நேரமொதுக்கி கேட்கும் போது நிச்சயம் அனைவருக்கும் அவர்களின் கருத்துக்களைச் சொல்வதற்கும் கருத்துப்பரிமாற்றம் செய்வதற்கும் நாம் நேரம் ஒதுக்கிக் கொடுப்போம்.
இது எமது ஜம்இய்யாவின் கட்டமைப்பு சிதைவடையாமல் இருக்க நாம் மேற்கொண்ட ஏகோபித்த முடிவாகும்.  பதவியை ஒருவருக்கு வழங்குவதும்,அதன் மூலம் அந்தஸ்தை வழங்குவதும் அல்லாஹ் தான். இதனை வேட்பாளர்கள் புரிந்து கொண்டு செயற்பட்டு தேர்தல் விடயங்களில் ஈடுபட வேண்டும்’  என ஜம்இய்யாவின் பொதுத்தலைவர் மௌலவி ஏ.எல்.பீர் முஹம்மது தனது வரவேற்புரையில் குறிப்பிட்டார்.
கல்குடா தொகுதியில் மிகப்பெரிய ஆளுமை கொண்ட ஜம்இய்யா எமது அழைப்புக்கு மதிப்பளித்து சந்திப்பதற்கு நேரமொதுக்கி தந்தமைக்காக இரு வேட்பாளர்களும் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.
11815861_1015263821825874_687464213_n (1) 11823964_1015263835159206_1305699917_n 11844083_1015263841825872_230920155_n 11844112_1015263855159204_142810772_n 11847277_1015263818492541_1216052611_o

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*