நாவலடி மர்கஸ் அந்நூரில் இரண்டாம் கட்ட நேர்முகத்தேர்வு

Spread the love
001மாவடிச்சேனை செய்தியாளர்
கொழும்பு வீதி-நாவலடியில் அமைந்துள்ள மர்கஸ் அந்நூர் கல்வி நிறுவனத்திற்கு புதிய மாணவர்களை (2015 ம்ஆண்டு ) இணைத்துக்கொள்வதற்கான  இரண்டாம் கட்ட நேர்முகப்பரீட்சைகள் எதிர்வரும் 21.12.2104ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற நேர்முகத்தேர்வில் சீரற்ற காலநிலையால் கலந்து கொள்ள முடியாமல் போனவர்களும், விண்ணப்பங்கள் கிடைக்காமல் தவற விட்டவர்களும் குறித்த திகதியில் பரீட்சைக்குத் தோற்ற முடியுமென கல்லூரியின் அதிபர் ஏ.ஹபீப் அவர்கள் கல்குடா நேசனுக்கு தெரிவித்தார்.
2015ல் 6 ம் ஆண்டில் கல்வி கற்கத் தகுதியான, 12 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிறப்புச்சான்றிதழ், மாணவர் தேர்ச்சி அறிக்கை சகிதம் வருகை தருவதுடன், தந்தையை இழந்த (மரணித்த ) மாணவர்கள் தந்தையின் இறப்புச்சான்றிதழுடனும் வருகை தர வேண்டும்.
தந்தையை இழந்த மாணவர்களுக்கு தங்குமிடம், உணவு ,சீருடை, மற்றும் மருத்துவ வசதிகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதுடன், இரு பெரு நாட்களுக்குமான புத்தாடைகளும் வழங்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இக்கல்வி நிறுவனத்தில் க.பொ.த சாதாரணம் மற்றும் உயர் தரப்பரீட்சை, அல் ஆலிம் பரீட்சை உள்ளிட்ட தொழில் நுட்ப பாட விடயங்களும் நன்கு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் போதிக்கப்படுவதும் விஷேட அம்சமாகும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*