மீராவோடை தாருஸ்ஸலாமில் “இபாதத்தில் இன்பம் காண்போம்” விஷேட மார்க்கச்சொற்பொழிவு

hqdefault-minபார்ஷான் ஹயாத்து முஹம்மது

இன்ஷா அல்லாஹ் இன்று (24.12.2015) இஷாத் தொழுகையின் கல்குடா ஜம்இய்யது தஃவத்தில் இஸ்லாமிய்யாவின் தஃவாப் பிரிவின் ஏற்பாட்டில் மீராவோடை தாருஸ்ஸலாம் ஜும்ஆப்பள்ளியில் விஷேட மார்க்கச்சொற்பொழிவு நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது.

இவ்விஷேட மார்க்கச்சொற்பொழிவு நிகழ்வில் தேசிய ரீதியாக மார்க்கப் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டு வரும் அஷ்ஷெய்க் நியாஸ் சித்தீக் (சிறாஜி) அவர்கள் “இபாதத்தில் இன்பம் காண்போம்” எனும் தலைப்பில் விஷேட சொற்பொழிவொன்றை நிகழ்த்தவுள்ளார்.

மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டு பயன்பெற்று நமது ஈமானை அதிகரிக்கச் செய்வதுடன், இபாத்துக்கள் பற்றியும் அதனூடாக நாம் எவ்வாறு இன்பத்தினைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற தெளிவினையும் பெற அனைத்து சகோதரர்களையும் கலந்து கொள்ளுமாறு கல்குடா ஜம்இய்யது தஃவத்தில் இஸ்லாமிய்யாவின் தஃவாப்பிரிவினர் அழைப்பு விடுக்கின்றனர்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*