கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவினால் மீராவோடையில் மீனவர்களுக்கு உலருணவு வழங்கல்

Spread the love

12511816_1094631973889058_1803794607_n-minபர்ஷான் ஹயாத்து முஹம்மது

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் சமூக சேவைப்பணித்தொடரில் கடந்த சில தினங்களாக பெய்த அடைமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் நன்மைகருதி உலருணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு நேற்று 09.01.2016ம் திகதி சனிக்கிழமை மீராவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மெளலவி அஷ்ஷெய்க் எச்.எல்.முஹைதீன் பலாஹி தலைமையில் இடம்பெற்ற மேற்படி உலருணவு வழங்கும் நிகழ்வில், மீராவோடை கிழக்கு மேற்கு கிராம சேவகர் பிரிவிலுள்ள மீனவர்களுக்கு உலருணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் பொதுத்தலைவர் மெளலவி அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மது காஸிமி அவர்களும், மர்கஸ் அந்நூர் கலாபீட அதிபர் மெளலவி அஷ்ஷெய்க் ஏ.ஹபீப் காஸிமி அவர்களும் அதிகளாகக் கலந்து கொண்டு விஷேட சொற்பொழிவுகளை ஆற்றினார்கள்.

இப்பிரதேசத்தில் ஊடுருவி இஸ்லாத்திற்கு முரணான நச்சுக்கருத்துக்களை பரப்பி வரும் ஷீஆக்களின் விடயத்தில் அவதானத்துடன் செயற்பட்டு இறை நம்பிக்கையைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் இவர்களின் சதி வலைகளிலிருந்து எமது இளஞ்சந்ததியினரைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டது.

இப்பிரதேசத்தை தளமாகக் கொண்டே ஷீஆக்கள் தமது அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதுடன், சமூக சேவை, தையல், மாலை நேர வகுப்புக்கள் என்ற போர்வையில் இஸ்லாமிய நேர்முறைகளுக்கெதிரான தமது கருத்துகளை திணித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

12483716_1094632100555712_474472241_n-min 12483916_1094632060555716_123013675_n-min 12498546_1094632030555719_1820936816_n-min 12498844_1094632073889048_600632942_n-min 12506651_1094632053889050_1771615256_n-min 12511816_1094631973889058_1803794607_n-min 12528115_1094632020555720_816467354_n-min 12540066_1094632050555717_625711653_n-min

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*