காத்தான்குடியில் ஹலால் விழிப்புணர்வுக்கருத்தரங்கு

Spread the love
20160118_115535-minஏ.எல்.டீன்பைரூஸ்
இலங்கை ஹலால்  சான்றுறுதிப்பேரவை நாடளாவிய ரீதியில் ஹலால் விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை நடாத்தி வருகின்ற நிலையில், அதன் மற்றுமொரு கருத்தரங்கு நிகழ்வு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் எதிர்வரும் 22.01.2016ம் திகதி வெள்ளிக்கிழமை நாளை இரவு 7.30 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரை நடைபெறவிருப்பதாக அதன் காத்தான்குடி பிரதிநிதி மௌலவி எம்.ஐ.எம்.முஸ்தகீம் அஹமட் (பலாஹி) தெரிவித்தார்.

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டு உற்பத்திப் பொருட்களில் ஹறாம் ஊடுருவல் மிக நுணுக்கமாக இடம்பெறுவதனை அண்மைக்காலமாக அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

எனவே, இவற்றினை மக்களுக்குத் தெளிவுபடுத்துவது, விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை நடாத்துவதென்பது மிக மிக அவசியமென்பதால் மேற்படி கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஹலால் சான்றுறுதிப் பேரவையின் பயிற்றுவிக்கப்பட்ட ஹலால் பிரதிநிதி அல்-ஹாபிழ் மௌலவி எம்.ஐ.எம்.முஸ்தகீம் அஹமட் (பலாஹி) தெரிவித்தார்.

எனவே, மேற்படி கருத்தரங்கில் சகல தரப்பினரும் கலந்து கொண்டு பயன்பெறுவதோடு ஏனைய சகோதரர்களையும் அழைத்து வருமாறு அன்படன் கேட்டுக்கொள்கின்றனர் ஏற்பாட்டுக் குழுவினர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*