ஓட்டமாவடியில் உம்மு சுலைம் மகளிர் அரபுக்கால்லூரி அங்குரார்ப்பணம்

Spread the love

DSC_7045-minஓட்டமாவடி உம்மு சுலைம் மகளிர் அரபுக்கால்லூரி அங்குரார்ப்பண நிகழ்வு இன்று 06.02.2015ம் திகதி சனிக்கிழமை காலை 08.30 மணிக்கு ஓட்டமாவடி-மீராவோடை எம்.பி.சீ.எஸ்.வீதியில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வினூடாக இப்பிரதேசத்தில் அல்குர்ஆன், ஸுன்னா அடிப்படையிலான பெண்களுக்கான அரபுக்கல்லூரியொன்று இல்லாத குறை தீர்த்து வைக்கப்படுவதுவதுடன், இதன் உருவாக்கத்தினூடாக சீரிய மார்க்க அறிவைப் பெற்ற இளம் பெண் சமூகமொன்றை உருவாக்க முடியுமென நம்பிக்கையுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், இப்பிரதேசத்தில் இவ்வாறானதொரு கல்லூரி இல்லாமையால், கடந்த காலங்களில் எமது பிரதேச மாணவிகள் வெளியூர்களுக்குச் சென்று மார்க்கக் கல்வியைப் பெறும் நிலை காணப்பட்டமையும் அதனால், தமது பெண் பிள்ளைகளை மார்க்க ரீதியில் வளர்த்தெடுக்க வேண்டுமென்பதற்காக பெற்றோர்கள் தங்களது பொருளாதாரங்களை, கால நேரங்களைச் செலவு செய்து, பல்வேறு துயரங்களை அனுபவித்தமையும் இங்கு கவனத்திற் கொள்ளப்பட வேண்டியது.

இதனூடாக, கடந்த காலங்களில் இடம்பெற்ற நிலைமை மாற்றம் பெறுவதுடன், இப்பிரதேசத்திலுள்ள அனைவரும் ஒன்றிணைந்து இதன் வளர்ச்சிக்கும் முன்ன்றேற்றத்துக்கும், இதன் பெறுபேறுகளை அடைந்து கொள்வதற்கும் ஒத்துழைக்க வேண்டியதும் கடமையாகும்.

உம்மு சுலைம் மகளிர் அரபுக்கால்லூரியின் நிருவாகத்தலைவர் அஷ்ஷெய்க் மெளலவி ஏ.எல்.பீர்முஹம்மது காஸிமி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் அஷ்ஷெய்க் மெளலவி எஸ்.எல்.நஷ்மல் பலாஹி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அத்துடன், மர்கஸ் அந்நூர் கலைபீட அதிபர் அஷ்ஷெய்க் மெளலவி ஏ.ஹபீப் காஸிமி, ஜம்இய்யாவின் செயலாளர் அஷ்ஷெய்க் மெளலவி எஸ்.எச்.அரபாத் சஹ்வி, அஷ்ஷெய்க் மெளலவி எம்.பதுர்தீன் சஹ்வி, அஷ்ஷெய்க் மெளலவி ரீ.எல்.அமானுல்லாஹ், அஷ்ஷெய்க் மெளலவி எம்.ஐ.ஹாமித் சிறாஜி, பொருளாளர் சகோதரர் ஈ.எல்.சுபைர் ஆகியோரும் ஜம்இய்யாவின் நிருவாகிகள், உம்மு சுலைம் மகளிர் அரபுக்கால்லூரிக்கு புதிதாகச் சேர்த்துக்கொள்ளப்பட்ட மாணவிகள், மாணவிகளின் பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வுகளை சகோதரர் பர்ஷான் ஹயாத்து முஹம்மது அவர்கள் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

DSC_7040-min DSC_7045-min DSC_7049-min DSC_7062-min DSC_7085-min DSC_7092-min iinnn-min

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*