கல்முனை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலக இடமாற்றம்: பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்களே முழுப்பொறுப்பு

Spread the love

unnamedகல்முனை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலக இடமாற்றம் கல்முனைத்தொகுதி பாராளுமன்ற உறுப்பினரின் முழுப்பொறுப்பு என்பதை நாம் இங்கு அறிய வேண்டும். இவ்விடமாற்றம் தொடர்பில் ஏன் இன்னும் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பபப்படவில்லையென்பது தான் இங்கு கேள்விக்குறி.

கல்முனைத்தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்கள் இவ்விடயத்தை பாராளுமன்றத்தில் இதுவரை பேசவில்லை. இதை ஏன் இப்பிரதேச சமூகம் இவரிடம் கேட்கவில்லை.

பாராளுமன்றம் இருப்பது எதற்கு? இவர் ஏன் பாராளுமன்றம் போகுகின்றார். என்பது புரியாத புதிர் தான். இவ்வாறான விடயங்கள் அமைச்சர் ஒருவரின் அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ அல்லது பாராளுமன்ற சாப்பாட்டு விடுதிகளிலோ கதைக்க கூடிய விடயங்களல்ல.

இவ்விடயம் பற்றி அதாவது வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலக இடமாற்றத்தின் சாதகம் மற்றும் அதன் பாதகம் என்பன தொடர்பில் கல்முனைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்கள் பாராளுமன்றத்தில் காரசாரமாக விவாதிக்க வேண்டுமென தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா அவர்கள்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது நடக்குமா என்பது தான் கேள்விக் குறி.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*