காத்தான்குடியில் “ஈமானைப் பாதுகாப்போம்” இஸ்லாமிய மாநாடு

Spread the love

DAAD Maanaadu 25.03.2016-min(1)(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடிப் பிரதேசத்தில் இயங்கிய வரும் தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பின் ஏற்பாட்டில் “ஈமானைப் பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் இஸ்லாமிய மாநாடு எதிர்வரும் 25-03-2016ம் திகதி வெள்ளிக்கிழமை புதிய காத்தான்குடி-01, றிஸ்வி நகரில் இடம்பெறவுள்ளது.

அன்றைய தினம் மாலை 6.30 மணி தொடக்கம் இரவு 10.00மணி வரை இடம்பெறவுள்ள மேற்படி  இஸ்லாமிய மாநாட்டில் ‘இஸ்லாம் ஓர் தனித்துவமான மார்க்கம்’ எனும்  தலைப்பில் அஷ்ஷெய்க் பீ.எம்.அஸ்பர் (பலாஹி)யும் ‘இஸ்லாம் தடை செய்யும் மிகப் பெரும் அநியாயம்’ எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் ஏ.ஹாதில் ஹக் (அப்பாஸி) யும் சிறப்புரை நிகழ்த்தவுள்ளனர்.

குறித்த மாநாட்டில் அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளையும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது.
DAAD Maanaadu 25.03.2016-min

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*