குறுகிய கால கற்கை நெறிகள் மூலம் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழித்து விடாதீர்கள்-பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

Spread the love

DSC_8324-minசெய்தியாளர் எம்.ரீ.ஹைதர் அலி

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களின் 2015ஆம் ஆண்டடிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் கீழ் காத்தான்குடி, மண்முனை வடக்கு மற்றும் மண்முனைப்பற்று பிரதேசே செயலாளர் பிரிவுகளில் வசிக்கும் வறிய குடும்பங்களுக்கு சுய தொழிலுக்கான இடியப்பத்தொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்ட்டன.

இந்நிகழ்வானது, காத்தான்குடி பதுரியா மைதான வளாகத்தில் அமைந்துள்ள சமூக சேவை அலுவலகத்தில் 2016.03.23ஆந்திகதி (புதன்கிழமை) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், காத்தான்குடி பிரதேச செயலாளர் முசம்மில், அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள், மாகாண சபை மூலம் குறைவான நிதித்தொகையே வாழ்வாதார உதவிகளுக்காக வழங்கப்படுகின்ற போதும் எம்மால் முடிந்தளவு வினைத்திறனாக வாழ்வாதார உதவிகள் தேவைப்படும் மக்களிடத்தில் கொண்டு சேர்க்கின்றோம். இப்போது இந்த உதவிகளைப் பெறும் பயனாளிகளான நீங்கள் அடுத்த வருடம் 1000 ரூபாவையாவது தானம் செய்கின்ற ஒரு நிலையை அடைய வேண்டும். அதே போல் உங்கள் பிள்ளைகளையும் தொடர்ச்சியாக கல்வி கற்கச் செய்ய வேண்டும்.

அண்மையில் வெளியான கா.பொ.த சாதாரண தரப்பரீட்சை வெளியீடுகளுக்கமைவாக காத்தான்குடியைச் சேர்ந்த 30 மாணவர்கள் 9 ஏ சித்தியடைந்திருந்தனர். இருந்த போதும், அதில் 75 வீதமான மாணவர்கள் பெண் மாணவிகளாவர்.

இதற்கான காரணம் ஆண் மாணவர்களில் பெரும்பாலானோர் தனியார் கல்வி நிறுவனங்களினால் நடாத்தப்படுகின்ற குறைந்த கால கற்கை நெறிகள் மூலம் ஈர்க்கப்பட்டமையாகும். குறைந்த காலக் கற்கை நெறிகள் என்ற பெயரில் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழித்து விடக்கூடாது.

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களில் மாகாண சபையூடாக மேலும் முடிந்தளவு அதிகமான நிதியை வாழ்வாதார உதவிகளுக்காக ஒதுக்குவதற்கு ஆலோசித்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.  DSC_8265-min DSC_8283-min DSC_8288-min DSC_8298-min DSC_8309-min DSC_8316-min DSC_8324-min

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*