கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் மகளிருக்கான குா்ஆன் மனனப்போட்டி பரிசளிப்பு நிகழ்வு

Spread the love

DSC_9045 2-minஅலுவலக செய்தியாளர்

ஜம்இய்யத்துல் தஃவதில் இஸ்லாமிய்யா கல்குடாவினால் வாராந்தம் நடாத்தப்படுகின்ற மகளிருக்கான குா்ஆன் வகுப்பில் கலந்து கொண்டவர்களுக்கான குா்ஆன் மனனப்போட்டி அண்மையில் ஜம்இய்யாவின் தலைமையகமான தாருஸ்ஸலாம் பள்ளிவாயலில் நடைபெற்றது.

மேற்படி போட்டியில் கலந்து கொண்டு புனித அல்குர்ஆனை மனனமிட்டு ஒப்பித்தவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு மீராவோடை, எம்.பி.சி.எஸ்.வீதியில் அமைந்துள்ள ஜம்இய்யாவின் கேட்போர் கூடத்தில் சென்ற வாரம் நடைபெற்றது.

ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் தலைவர் அஷ்ஷெய்க். ஏ.எல்.பீர் முஹம்மது காசிமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மர்கஸ் அந்நூர் நிறுவனத்தின் அதிபர் மௌலவி ஏ.ஹபீப் காசிமி, ஜம்இய்யாவின் உப தலைவர் மௌலவி ரீ.எல்.அமானுல்லாஹ் ஷர்கி, மற்றும் ஜம்இய்யாவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட போட்டியில் கலந்து கொண்ட மகளிரும், தஃவா ஆர்வலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.DSC_9ff022-min DSC_897dd2-min DSC_897f7-min DSC_901d2-min DSC_902dd3-min DSC_902ddd-min DSC_9024ff-min DSC_9028 s-min DSC_9029-min DSC_9032d-min DSC_9033dd-min DSC_9034f-min DSC_9035 d-min DSC_9036 f-min DSC_9037 6-min DSC_9040 u-min DSC_9045 2-min DSC_9049 7-min

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*