மறைக்கப்பட்ட வரலாறு-அமெரிக்காவைக் கண்டுபிடித்தது முஸ்லிம்களே–எர்டோகான்

Spread the love

download (1)அமெரிக்கக் கண்டம் 12 ஆம் நூற்றாண்டுகளில் முஸ்லிம்களால் கண்டுபிடிக்கப்பட்டதாக துருக்கிய பிரதமர் தய்யிப் எர்டோகான் தெரிவித்துள்ளார். இது கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு பிடித்ததாகக் கூறப்படும் காலத்துக்கு ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகள் முந்திய காலப்பகுதியாகும்.

இலத்தீன் அமெரிக்க நாடுகளின் இஸ்லாமியத் தலைவர்களின் மாநாடு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற வேளை, அங்கு உரையாற்றிய துருக்கித்தலைவர் இக்கருத்தை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இஸ்லாம் மற்றும் இலத்தீன் அமெரிக்கத்தொடர்புகள் 12 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே காணப்படுகின்றன. 1178 ஆம் ஆண்டு முஸ்லிம்களே அமெரிக்காவைக் கண்டுபிடித்தனர். கிறிஸ்தோபர் கொலம்பஸ் அல்ல. முஸ்லிம் மாலுமிகள் 1178 ஆம் ஆண்டு அமெரிக்காவை வந்தடைந்தனர்.

கியூபன் கரையோர மலைப்பகுதியில் பள்ளிவாயலொன்று அமைந்திருந்ததை கொலம்பஸ் தெரிவித்துள்ளார் எனக்கூறினார்.அந்தப் பகுதியில் ஒரு பள்ளிவாயலை தற்போது நிர்மாணிக்கத் துருக்கி தயாராகவுள்ளதாக எர்டோகான் மேலும் தெரிவித்தார்.

வரலாற்றுப் புத்தகங்கள், இந்தியாவுக்கு மாற்று கடல் வழியை கண்டு பிடிக்கும் நோக்கில், பயணித்த கொலம்பஸ் 1492 இல் அமெரிக்காவைக் கண்டு பிடித்ததாகக் கூறுகின்றன.

1996 ஆம் ஆண்டு யூசுப் ரௌஹ் என்ற வரலாற்றாசிரியர் பிரசுரித்த சர்ச்சைக்குரிய கட்டுரையொன்றில் கொலம்பஸின் டயரி பதிவொன்றில் கியூபாக் கரையோர மலைப்பகுதியில் பள்ளிவாயலொன்று காணப்பட்டதாகக் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*