தமிழ்-முஸ்லிம் உறவுக்காய் அரும்பாடுபட்டவர் மீராவோடை மஹ்முது முத்து சேர்மன்

a«òa«¦a«¦a»ì a«¬a»ïa«ƒa»ìa«ƒa»ï-minஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

முஸ்லிம்களும் தமிழர்களும் தேங்காய் பூவும் பிட்டும் போல் வாழ வேண்டுமென்பதில் அரும்பங்காற்றிவர் மீராவோடை மஹ்முது முத்து சேர்மன்.

1990 காலப்பகுதிக்கு முன்பு தமிழ் சமூகமும் முஸ்லிம் சமூகமும் தேங்காய் பூவும் பிட்டும் போலிருந்த காலப்பகுதியில் தமிழ் சமூகத்துடன் மிகவும் அன்னியொன்னியமாக நட்பினைப் பேணி வந்த முன்னாள் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளரும் கல்குடாப்பிரதேச மக்களால் செல்லமாய் அழைக்கப்பட்ட மீராவோடையை சேர்ந்த மஹ்முது முத்து சேர்மனே இந்த இரண்டு புகைப்படங்களிலும் இருப்பவர்.

கல்குடா முஸ்லிம் பிரதேசம் 1989ம் ஆண்டு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கோட்டையாக மாறுவதற்கு இவரும் முக்கிய பங்காற்றியவர் என்பது வரலாற்றில் அழிக்க முடியாத விடயமென்பதில் மாற்றுக்கருத்திருக்க முடியாது.

விடுதலைப்புலிகளால் 1990ம் ஆண்டு கடத்திச்செல்லப்பட்டு இன்று வரைக்கும் இவருடைய ஜனாஸா குடும்பத்தாரிடம் கையளிக்கப்படாமலிருப்பது எமது நாட்டில் ஏற்பட்ட யுத்தம் ஏற்படுத்திய வடு என்பது உள்ளங்களிலிருந்து அழிக்க முடியாத ஓவியமாகும்.

இந்த புனித ரமழான் மாதத்தில் இவருடைய பிழைகளை அல்லாஹ் மன்னித்து இவருடைய கப்ரினை ஒளிமயமாக்கி இவருக்கு ஜன்னத்துல் பிர்தெளஸ் எனும் சொர்க்கத்தினை பரிசாக வழங்கப் பிரார்த்திப்போமாக….!!!! அமீன்  a«òa«¦a«¦a»ì a«¬a»ïa«ƒa»ìa«ƒa»ï(1)-min

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>