கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணலில் 43வது படைப்பாளியாக இணைகிறார் புகைப்படக்கலைஞர் பாணந்துறை ரமீனா அன்சார் அவர்கள்-நேர்காணல் உள்ளே…

Spread the love

147146459388967கவிதாயினி ராஜ்சுகா

வாரா வாரம் கல்குடா நேசன் இணைய நேர்காணலுடன் பல படைப்பாளிகள், கலைஞர்கள், கவிஞர்களைச் சந்தித்து வருகின்றோம். அவர்களின் திறமை, ஆளுமையினை வெளிக்கொணர்வதோடு, படைப்பாளிகளின் பல்வேறுபட்ட  கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில்  நாம் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம். அந்த வகையில், இவ்வாரமும் ஓர்  இளைய படைப்பாளியைச் சந்திப்பதில் பெருமிதமடைகின்றோம்.

கல்குடா  நேசனின் 43வது படைப்பாளியாக இணைகிறார் புகைப்படக்கலைஞரான ரமீனா அன்சார்  அவர்கள். இவர் பாணந்துறையைப் பிறப்பிடமாகக்கொண்டவர்  தற்போது தொழில் நிமித்தம் மத்திய கிழக்கு நாடொன்றிலிருக்கின்றார்.

விடுமுறையில் இலங்கைக்கு வந்திருந்த அவரை கல்குடா நேசனுக்காக அணுகினோம். அவரது அவசர வேலைகளுக்கு மத்தியில் எமது  கேள்விகளுக்கு சுருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் பதிலளித்த அவருக்கு எமது வாழ்த்துக்களோடு நேர்காணலில் இணைவோம்.

கவிதாயினி ராஜ்சுகா

தங்களைப்பற்றிய அறிமுகம் எமது வாசகர்களுக்காக?

ரமீனா அன்சார்

பெயர் ரமீனா அன்சார். இலங்கையில் பாணத்துறை பிறப்பிடம்.  அம்பலந்துவை முஸ்லிம் வித்தியாலயத்தில் கல்வி பயின்றேன். உயர் கல்வியை களுத்தறை மகளிர் மகா வித்தியாலயத்தில் முடித்தேன். தற்போது மத்திய கிழக்கில்  பணி புரிகின்றேன்.

கவிதாயினி ராஜ்சுகா

தங்களின் தொழிற்துறை பற்றி?

ரமீனா அன்சார்

கம்பியூட்டர் எம்ப்ரோய்டைரி டிசைனர்ரூ போட்டோகிராபர்

கவிதாயினி ராஜ்சுகா

புகைப்படத்துறையில் எவ்வாறு ஆர்வம் ஏற்பட்டது?

ரமீனா அன்சார்

முதலில் செல்போனில் தொடங்கிய எனது தேடல். இயற்கை காட்சி தான் எனது முதல் புகைப்படம். குவைத் போன்ற பாலை வன நாட்டில் இயற்கைக் காட்சிகள் இல்லை. இருப்பினும், என் பயணத்தைத் தொடர்ந்தேன்.

கவிதாயினி ராஜ்சுகா

இந்தப்பாதையில் நீங்கள் சந்தித்த சவால்கள்?

ரமீனா அன்சார்

பெண் என்ற முறையில் இந்தத்துறையே சவால் தான் என்னைப்பொறுத்த வரை.

கவிதாயினி ராஜ்சுகா

முஸ்லிம் பெண் என்ற  வகையில் உங்களுக்கு பல வரைமுறைகள், கட்டுப்பாடுகள் இருக்கும். அதனுடன் உங்கள் புகைப்படத்துறை வாழ்க்கையை எவ்வாறு அமைத்துக் கொள்கின்றீர்கள்?

ரமீனா அன்சார்

இன்றய நவீன உலகில் பல துறையில் பெண்கள் சாதித்து வருகிறார்கள். நம் ஒழுக்கத்தைப்பேணி எத்துறையிலும்
சாதிக்கலாம் என்பதே என் கருத்து.

கவிதாயினி ராஜ்சுகா

இத்துறையில் தங்களுக்கு  கிடைத்த வெற்றிகள், பாராட்டு, பரிசுகள் பற்றி?

ரமீனா அன்சார்

குவைத் இளங்குயில் வழங்கிய பொதுநல வேந்தர்  அவார்ட். ஒன்லைன் சிங்கில் போட்டோகிராப்பில் பல முறை  அவார்ட் கிடைத்துள்ளது.

கவிதாயினி ராஜ்சுகா

பொதுவாக வெளியுலகிற்கு வரும் பெண்களுக்கு பல எதிர்ப்புக்கள், சவால்கள் காணப்படுகின்றது. இவற்றை எவ்வாறு எதிர்நோக்க வேண்டுமென நினைக்கின்றீர்கள்?

ரமீனா அன்சார்

ஒவ்வொரு எதிர்ப்புக்களையும் முறியடித்து, நமக்குச் சாதகமாக அமைத்ததுக் கொள்வது தான் மிக முக்கியமான அம்சமாகும்.

கவிதாயினி ராஜ்சுகா

குடும்பத்தில் தங்களுக்கிருக்கும்  ஆதரவு பற்றி?

ரமீனா அன்சார்

கண்டிப்பாக, இதில் நான் சந்தோஷமடைகின்றேன். வீட்டில் எல்லோரும் எனக்கு ஆதரவாகவும், அனுசரணையாகவும் இருக்கின்றார்கள்.

கவிதாயினி ராஜ்சுகா

இத்துறையில் நீங்கள் சாதிக்க விரும்புவது?

ரமீனா அன்சார்

அமையும் வாய்ப்புக்களைக் குறையின்றி முடிப்பதே.

கவிதாயினி ராஜ்சுகா

உங்கள் முன்னோடி யார்? உங்களை வழி நடத்துபவர்கள், ஊக்கப்படுத்துபவர்கள் பற்றி?

ரமீனா அன்சார்

புகைப்பட துறையிலிருக்கும் எனது தோழி நசீமா அவர்கள் தான்.

கவிதாயினி ராஜ்சுகா

புகைப்படக்கலைஞர் எனும் போது, நேர, காலம், சூழல் பாராது இயங்க வேண்டும். அவ்வகையான உங்கள் அநுபவங்களைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?

ரமீனா அன்சார்

ஆம். சில சமயங்களில் நாள் முழுதும் நிகழ்வு இருக்கும். சில நிகழ்வுகளில் பெண்களே இல்லாமலிருக்கும். உதாரணமாக இலங்கையில் பாண‌ந்துறைப் பிரதேசத்தில் நடந்த போதைப்பொருள் எதிர்த்து நடைபவனியில் கலந்து கொண்டேன். அதில் பெண்ணாக நானும் போதைப்பொருள் தடுப்பு அதிகாரி ரிப்கா சாலி அவர்களும் மட்டுமே.

கவிதாயினி ராஜ்சுகா

எவ்வகையான புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வங்காட்டி வருகின்றீர்கள்?

ரமீனா அன்சார்

இயற்கை மற்றும் சமூக நடைமுறைகள்.

கவிதாயினி ராஜ்சுகா

இத்துறையில் இளம் வயதினரின் ஈடுபாடு, புதியவர்களின்  வருகை எவ்வாறு காணப்படுகின்றது?

ரமீனா அன்சார்

தற்போது இளம்பெண்கள் ஆண்களை விட அதிகமாக ஈடுபாடு என்பதை சில நிகழ்வில் பார்த்து வருகிறேன்.

கவிதாயினி ராஜ்சுகா

புகைப்படத்துறையின்  மூலம் தங்களுக்கு பொருளாதார ரீதியிலான முன்னேற்றம் காணப்படுகின்றதா?

ரமீனா அன்சார்

வருமானம் தேவை தான். இருப்பினும், தன்னார்வம் மட்டுமே.

கவிதாயினி ராஜ்சுகா

இன்றுகளில் புகைப்படத்துறை என்பதின் வளர்ச்சியினை முகநூலில் அதிகமாகக் காண முடிகின்றது. எல்லோராலும், இக்கலைத்துறையில் ஈடுபட  முடியுமா? அல்லது இதற்கு எவ்வகையான நுட்பமுறைகள் தேவைப்படுகின்றது?

ரமீனா அன்சார்

விருப்பமுள்ளவர்களுக்கு எதுவும் சாத்தியமே.

கவிதாயினி ராஜ்சுகா

உங்களுக்கான வாய்ப்புக்கள், சந்தர்ப்பங்கள் எவ்வாறு  அமைகின்றது?

ரமீனா அன்சார்

சிரமம் தான். என்னுடய ஆர்வத்தினாலும், நண்பர்களின் உதவியினாலும் வாய்ப்புகள் கிடைக்கிறது.

கவிதாயினி ராஜ்சுகா

கல்குடாநேசன் இணைய  வாசகர்களோடு இணைந்து கொண்டது பற்றி?

ரமீனா அன்சார்

மிக்க மகிழ்ச்சி. என்னையும் ஒரு  கலைஞராக‌த்தேர்வு செய்து, உங்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டமைக்கு.
மற்றும் என்னுடைய துறையில் கிடைக்கும் தமிழ் செய்திகளை புகைப்படத்துடன் பகிர்வேன் கல்குடா  நேசன் இணைய  வாசகர்களுக்கு.

கவிதாயினி ராஜ்சுகா

நீங்கள் பகிர்ந்து கொள்ள நினைக்கும் ஆலோசனைகள் அல்லது எதிர்பார்ப்புக்கள்?

ரமீனா அன்சார்

ஆலோசனை சொல்லுமளவிற்கு நான் இன்னும் வளரவில்லை. வாழ்வில் இன்னும் சாதனைகள் செய்ய வேண்டுமென்பதே எனது ஆசை.13932979_665649463585067_199934074_n 13932986_665649486918398_1913883164_n 13936626_665649476918399_2025390576_n 13940875_665649470251733_1404936505_n 13940898_665649460251734_1838568408_n 13940912_665649473585066_843780299_n 13941154_665649466918400_192335827_n 13988691_665649480251732_442478854_n 13988835_665649483585065_1599789726_n

29 Comments

 1. என்னையும் அடையாளம் காட்டியதற்கு நன்றி ரமீனா! தங்கள் மு!ன்னேற்றத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  • இது உங்கள் தன்னடக்கம்.. நீங்கள் இன்றி நான் எங்கே..

 2. பாராட்டுக்கள் சாச்சி.. மிக்க மகிழ்ச்சி.

 3. Wish you all the best…. Ungal walkai enum pathayai vetrippathayaha matri amaikka end lmanamarntha walthukkal

 4. பாராட்டுகள் சகோதரி! புகைப்பட கலை மனதிற்கு ஆத்மா திருப்தியைதரும் நீங்கள் ஒரு பெண்ணாகயிருந்துக்கொண்டு இத்துறையில் சாதிக்கயிருக்கும் உங்கள் ஆர்வத்தைக்கண்டு மகிழ்ச்சியும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்! புகைப்பட துறையில் உங்கள் சாதனையை இந்த உலகம் வியக்கும் நேரம் விரைவில் வர என் வாழ்த்துக்கள்!

 5. இத்துறையில் மெம்மேலும் வளர வாழ்த்துக்கள்

 6. கிடைக்கும் வாய்ப்பை சிறப்பாய் செய்து வெற்றி பெற்று , மகிழ்ச்சியூடன் வாழ வாழ்த்துக்கள்.
  என்றும் உன் நண்பனாய் நரேஷ் குமார்.

 7. சகோதரி ரமீனா வின் பிரவேசம் கல்குடாவிற்கு அன்பு நேசம்
  பூக்களை பிடித்த கேமராவின்
  கண் சிமிட்டல் இனி பூமியின்
  பலகோணங்களை பிடிக்க ஆயத்தம்
  இதுவே அவர்களின் நோக்கம்
  அதற்கு வழிஅமைத்த கல்குடா நேசனுக்கும் எமது நன்றிகள் வளர வேண்டும் வாழ்த்துக்கள்.

 8. வாழ்த்துக்கள் ரமீனா..!!!
  வானம், மேகம், காடு, பள்ளத்தாக்கு, பூமி, மரம், செடி, கொடி, பூக்கள், பூங்காவனம், பறவைகள், மிருகங்கள், மேடை நிகழ்ச்சிகள், இப்படி பல வித விதமான உங்கள் புகைப்படங்களை நாங்கள் கண்டு ரசித்த்தோம். அது கூட உங்கள் கவிதை வரிகளையும் ரசித்த்தோம். உங்கள் ஓவியங்களை கண்டோம், உங்கள் கம்ப்யூட்டர் எம்பிராய்டரி வேலைகளை பாத்து வியந்தோம். இப்படி ஒரு பெண்ணாக இருந்து இன்னும் அநேக துறைகளில் சாதித்து வருகிறீர். இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ரமீனா..!!!

 9. பாடசாலை பருவத்தில் ஒன்றாக பழகி என் அன்பை வென்ற தோழியின் நேர்காணல் பார்க்கயில் என் கண்ணில் கண்ணீர் தான் வந்தது..
  சந்தோசம் டா.. என்னை போன்ற பல பெண்களுக்கு நீ ஒரு role model..
  உன்னை நேரில் காண ஆவாலுடன் உன் தோழி..

 10. கல்குடா நேசன் உறவுகளுக்கு மிக்க நன்றி.
  எங்கள் தோழி ரமீனா அவர்களுக்கு இந்த வாய்ப்பை கொடுத்தமைக்கு.நிச்சயமாக அவரின் சுயநலமற்ற பணியும்,பணியில் உள்ள ஈடுபாடும் அவர் விரும்பும் நிலையை,பெருமையை உருவாக்கி கொடுக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. இறைவன் அருளாலும், உங்களை போன்ற நல்ல மனிதர்களின் ஆதரவாலும் அவர் நினைத்தது நிறைவேற வாழ்த்துகள்

 11. செல்வம் ஜீ மிக்க நன்றி ..உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும்..

 12. Selvaraj saravanan மிக்க நன்றி ஐயா உங்கள் துறையில் தானே நானும் இருக்கின்றேன்.. .நீங்கள் புகழும் அளவுக்கு நான் பெரிய சாதனையை செய்யவில்லை…

 13. Gearard என்னுடய முன்னேற்றத்தில் மிகவும்
  ஆர்வம் இருக்கும் ஒரு நற்பு நீங்கள்.. இறைவன் நீண்ட நலமான வாழ்வை கொடுக்க வேண்டும்..

 14. என் சாச்சிக்கு வாய்ப்பு கொடுத்த கல்குடா நேசனுக்கும். சுகா auntyக்கும் என் நன்றி..
  மென்மேலும் வாழ்க்கையில் வெற்றி பெற என்னுடய பிரார்த்தனைகள் உங்களுக்கு என்றும் இருக்கும் சாச்சி..

 15. அருமை.. வாழ்த்துகள் சிகரம் தொட என் வாழ்த்துக்கள்…

 16. என்னை வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும். என் உறவுககளுக்கும் என் நன்றிகள்…

 17. வானமொன்றும் அத்தனை தூரமில்லை. நம்பிக்கையோடு திறமையை அள்ளி வீசுங்கள். காமிராவினுள் ஒரு புள்ளியாகவேனும் வீழ்ந்திருக்கும் வானமும்..

  சகோதரி நசீமாவை இங்கே நினைவுகூர்ந்த உங்களின் நல்ல மனதிற்கே நீங்கள் இன்னும் உயர்வீர்கள்..

  அன்புத் தோழிக்கு வாழ்த்து..

  வித்யாசாகர்

  • உங்கள் அன்பும் .இறைவன் அருளும்
   இருக்கும் வரை ..என் தேடல் தொடரும்…

   மிக்க நன்றி தோழரே..

 18. எனது மாணவி என்பதில் பெருமைப் பாடுகிறேன்..
  மென்மேலும் சாதனைகள் படைக்க என்
  வாழ்த்துக்கள்.
  ரமீனா புகைப்பட துறையில் இருந்தாலும்
  இஸ்லாமிய கலாச்சாரத்தை மீராது இருப்பது
  பெருமைக்குரிய விடயம்.. மகிழ்ச்சி..

 19. அன்பு சகோதரி ரமீனா மென் மேலும் வளர எம் வாழ்த்துக்கள்.. தனி மனித ஒழுக்கம் ஒரு மனிதனை எவ்வித உயரத்தையும் அடைய வழி வகுக்கும். ஆக, இந்த பண்பு பெற்ற தங்கள் இலக்குகள் அனைத்தையும் அடைய வைக்கும்… மிகவும் பெருமையாக உள்ளது.மிக்க மகிழ்ச்சி … வாழ்க ..வாழ்க..வாழ்க!!!

  • வருடம் கடந்து போய்விட்டது இருப்பினும் கல்குடா நேசனுக்கு எனது நன்றிகள் சமர்ப்பணம் , இன்னும் பல படைப்பாளிகளை ஆறுமுகம் செய்யணும் என்பது என் ஆசை , உங்கள் சேவை இடையில் காணமல் போக கூடாது என்பது என் ஆதங்கம் , வாழ்த்துக்கள் ,, மீன்றும் தொரருங்கள் சகோ

Leave a Reply

Your email address will not be published.


*