கல்குடா நேசனின் 45வது இலக்கிய நேர்காணலில் இணைகிறார் மருத்துவ நிறுவன முகாமையாளர், அறிவிப்பாளர் லிந்துலை தனபாலசிங்கம் அவர்கள்

Spread the love

14159954_1274939005850876_1494708452_nகவிதாயினி ராஜ்சுகா

வாரா வாரம் கல்குடாநேசன் இணைய நேர்காணலுடன் பல படைப்பாளிகள், கலைஞர்கள், கவிஞர்களைச் சந்தித்து வருகின்றோம். அவர்களின் திறமை, ஆளுமையினை வெளிக்கொணர்வதோடு, படைப்பாளிகளின் பல்வேறுபட்ட கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாம் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்.

இந்நேர்காணலில் அறிமுகமாகும் பலர் தமது  துறைசார்ந்த வாய்ப்புக்களைப் பெற்றுக்கொண்டதாகவும் கூறி மகிழும் போது, எமது  நோக்கத்தை அடைந்து விட்டதாய் நாம் பெருமிதமடைகின்றோம். அந்த‌ வகையில், இவ்வாரமும் ஒரு இளம் படைப்பாளியைச் சந்திப்பதில் பெருமிதமடைகின்றோம்.

கல்குடா நேசனின் 45வது படைப்பாளியாக இணைகிறார் மருத்துவ நிறுவனமொன்றின் முகாமையாளரும் குறும்பட  இயக்குந‌ரும் இணைய வானொலி அறிவிப்பாளருமான லிந்துலை தனபாலசிங்கம்  அவர்கள்.

அதிகமான  சமூக சேவைகளில் தன்னை  ஈடுபடுத்திக்கொள்ளும் இவர், மலையகம், இளைஞர்கள், அறிவிப்பு தொடர்பான பல்வேறு  சுவாரஸ்யமான அனுபவங்களோடு, இணைந்து கொள்கின்றார். இவரது  முயற்சிமிக்க வாழ்க்கை அனுபவங்களோடு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாமும் நேர்காணலில் இணைந்து கொள்ளலாம்.

நேர்காணல் கவிதாயினி ராஜ்சுகா14159954_1274939005850876_1494708452_n

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*