இவ்வார கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணலில் இணைகிறார் அக்கரைப்பற்று ஏ.எம்.சஜீத் அஹமட் அவர்கள்

Spread the love

147286323020152கவிதாயினி ராஜ்சுகா14046072_1232697026795169_8168276869998293375_n

வாரா வாரம் கல்குடாநேசன் இணைய நேர்காணலுடன் பல படைப்பாளிகள், கலைஞர்கள், கவிஞர்களைச் சந்தித்து வருகின்றோம். அவர்களின் திறமை, ஆளுமையினை வெளிக்கொணர்வதோடு, படைப்பாளிகளின் பல்வேறுபட்ட கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாம் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்.

அந்த‌ வகையில், இவ்வாரமும் ஒரு இளம் படைப்பாளியைச் சந்திப்பதில் பெருமிதமடைகின்றோம். கல்குடா நேசனின் 46வது படைப்பாளியாக இணைகிறார் ஏ.எம்.சஜீத்  அஹமட் அவர்கள்.

இவர்  கவிதை, கட்டுரை, பத்திகள், நாவல், விமர்சனம் என இலக்கியத்தில் மிகத்தீவிரமாக அதே வேளை, காத்திரமாக கால்பதித்து வரும் இளம் படைப்பாளி.

இன்றைய இளையவர்கள் மத்தியில் குன்றிப்போய்க்கொண்டிருக்கும் வாசிப்பனுபவத்தைப்பற்றி குறைபட்டுக்கொள்ளுமிவர்  வாசிப்பனுபவத்தில் நமக்கெல்லாம் முன்னுதாரணமாக திகழ்கின்றார். இவர் பற்றிய‌  இன்னும்  பல சுவாரஸ்யங்கள் நேர்காணலில் காத்திருக்கின்றது வரும் வெள்ளியன்று கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணலில் வாசித்து மகிழுவோம்.

நேர்காணல் கவிதாயினி ராஜ்சுகா

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*