இவ்வார கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணலில் இணைகிறார் கொக்காகலை கிருஷ்ணசாமி அருள் அவர்கள்

Spread the love

147612677344477கவிதாயினி ராஜ்சுகா14046072_1232697026795169_8168276869998293375_n

வாரா வாரம் கல்குடாநேசன் இணைய நேர்காணலுடன் பல படைப்பாளிகள், கலைஞர்கள், கவிஞர்களைச் சந்தித்து வருகின்றோம். அவர்களின் திறமை, ஆளுமையினை வெளிக்கொணர்வதோடு, படைப்பாளிகளின் பல்வேறுபட்ட கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாம் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்.

அந்த வகையில், கல்குடா நேசனின் 49வது படைப்பாளி அறிமுகத்திற்காக மலையகத்தின் கொக்காகலையைச்சேர்ந்த கிருஷ்ணசாமி அருள் என்ற இளம் படைப்பாளியை அண்மையில் சந்தித்தோம்.

இவரது  கவிதைகளைப்பத்திரிகைகளிலும் முகநூலிலும் வாசித்து  வியந்த பின்னரே  இக்கவிஞரை  அடையாளமிட்டோம். எழுச்சிமிக்க  உணர்வுபூர்வமான இலக்கியம் படைக்கும் ஆற்றல் கொண்ட  இவர், ஆசிரியராகக் கடமையாற்றுவதும் குறிப்பிடத்தக்கது.

10 வருடங்களுக்கும் மேலாக கலைத்துறையில் ஈடுபட்டு வரும் அருள், கவிதை மீதான காதலினால் தன்னையும் தனது கவிதைகளையும் இலக்கியத்தளத்தில் அடையாளமிட  முயற்சிகளை மேற்கொண்டு  வருகின்றார்.

இவரது சகல முயற்சிகளும் வெற்றியடைய கல்குடா  நேசன் இணைய வாசகர்கள் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டு எதிர்வரும் வெள்ளியன்று  இவரது  நேர்காணலோடு இணைந்து கொள்வோம்.

நேர்காணல்-கவிதாயனி ராஜ்சுகா

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*